நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான வேட்புமனு பதிவு தொடங்கியது : சித்திரை 14/ஏப்பிரல் 27இல் தேர்தல்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான வேட்புமனு பதிவு தொடங்கியது : சித்திரை 14/ஏப்பிரல் 27இல் தேர்தல் ஈழத்தமிழ் மக்களின் நீதிக்கும், அரசியல் இறைமைக்கும் போராடிவருகின்ற மக்களாட்சி வடிவமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இருக்கின்றது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாம் தவணைக் காலத்துக்கான வேட்புமனு பதிவு மார்ச்சு 10ஆம் நாளன்று தொடங்கியது. எதிர்வரும் 20ஆம் நாள் நள்ளிரவு வரை வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட இருக்கின்றன. எதிர்வரும் தேர்தல் ஏப்பிரல் 27ஆம் நாள் தேர்தல் புலம்பெயர் நாடுகளில் இடம்பெற இருக்கின்றது. தேர்தல் நடைமுறை விதிகள் , வேட்புமனுக்கள்,பிற விவரங்கள்…

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விருதினைப் பெற்ற சிங்களர் !

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விருதினைப் பெற்ற சிங்களர் ! முனைவர் செனிவிரத்னா அவர்களை சிங்களர்தம் பகுத்தறிவின் குரலாகப் போற்றுகிறோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமையர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.  சிங்களர் ஒருவர் உட்பட நான்கு பெருமக்களுக்கு பெருமைசால் உயரிய விருதுகளை வழங்கி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மாண்பேற்றியுள்ளது. சா.சே.வே.செல்வநாயகம் நினைவு விருது, மாமனிதர் துணைவேந்தர் அழகையா துரைராசா நினைவு விருது, அதிபர் நெல்சன் மண்டேலா நினைவு விருது, தமிழ்த் தேசிய இளைஞர் புலமைப்பரிசில் என ஆண்டுதோறும் நான்கு விருதுகளை வழங்கி மாண்பேற்றி வருகின்றது. அந்தவகையில்…

இலங்கையின் ஆறாம் திருத்தச் சட்டத்திற்கு எதிராக 1,705 சட்டத்தரணிகள் ஐ.நாவில் முறையீடு !

இலங்கையின் ஆறாம் திருத்தச் சட்டத்திற்கு எதிராக 1,705 சட்டத்தரணிகள் ஐ.நாவில் முறையீடு ! நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்  புதிய இடைக்கால அரசமைப்புச் சட்ட அறிக்கையில் இடம்பெறும் ‘பிரிக்கப்படாத, பிரிக்கவொண்ணாத ஒரே நாடு’ என்ற சொல்லாட்சியையும், முறையீடு எடுத்துக்காட்டுகிறது. இலங்கையின் ஆறாம் திருத்தச் சட்டத்திற்கு எதிராக, ஆயிரத்து எழுநூற்று ஐந்து (1,705) சட்டத்தரணிகள் ஐ.நாவில் முறையீடு ஒன்றினைச் செய்துள்ளனர். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னெடுப்பில் உலகளாவிய முறையில் ஒருங்கிணைந்த 1,705 சட்டத்தரணிகள் தமது முறைப்பாட்டை கடந்த திசம்பர் 8 ஆம் நாளன்று ஐ.நாவில் அளித்துள்ளனர். இது…

‘தமிழர்களுக்கான மனித உரிமை மாநாடு’

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் உலக மனித உரிமை நாளில் நடாத்தப்பட்ட ‘தமிழர்களுக்கான மனித உரிமை மாநாடு’ இம் மாநாடு வெம்பிளியில்(Wembley International Hotel, Empire Way, Wembley, Middlesex, HA9 0NH)), கார்த்திகை 24,2048 / திசம்பர்  10, 2017, காலை 9 மணி முதல் இரவு 8 மணிவரை நடை பெற்றது. தலை சிறந்த அறிவாளிகளை உள்ளடக்கி எம் இனத்துக்கு நடந்த இனப்படுகொலையை இவ்உலகுக்கு எடுத்துக்காட்டவும், காணி பறிப்பு,  கமுக்கச் சித்திரைவதை முகாம், அரசியல் கைதிகள் விவகாரம் என்று பல செய்திகளை உள்ளடக்கிய…

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமை மாநாடு

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகள் அமைச்சு நடாத்தும் மனித உரிமை மாநாடு  பன்னாட்டு மனித உரிமை நாள் 2017 மிடில்செக்சு [World Human Rights Day 2017 Wembley International Hotel Empire WA, Wembley, Middlesex HA9 ONH] ஞாயிறு  திசம்பர் 10, 2017 காலை 9.00 – மாலை 5.30 முன்பதிவுக் கட்டணம்  £10  மட்டும் (கட்டாயம்) தொடர்பு : நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக் குழு மணிவண்ணன் நா.உ. மனித உரிமைஅமைச்சர், நா.க.த.அ. 07869133073 ஆறுமுகம் நா.உ.  07832 954281 நிர்மலர் நா.உ. 07877…

அனித்தாவின் பெயரில் புலமைப்பரிசில் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

அனித்தாவின் பெயரில் புலமைப்பரிசில் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மரியாதை வணக்கம் !   தனது கல்வி உரிமைக்காகப் போராடி சாவடைந்து கொண்ட தமிழக மாணவி அனித்தாவுக்கு தனது மரியாதை வணக்கத்தினைத் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், அவரது பெயரில் புலமைப்பரிசில் திட்டம் ஒன்றினை அறிவித்துள்ளது. இது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமையர் பணிமனை  விடுத்துள்ள அறிக்கையின் முழுவிவரம் :   தமிழ்நாடு அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி செல்வி அனித்தா சண்முகம் தன்னைத்தானே அழித்துத் தனது உயிரை மாய்த்த நிகழ்வு, உலகத் தமிழ்…

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பாக நடைபெறும் தொடர்போராட்டங்களில் அணிதிரள்க!

நிலமீட்டெடுப்பு – காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பாகத் திங்களன்று நடைபெறும் தொடர்போராட்டங்களில் உணர்வுடன் பெருந்தொகையில் அணிதிரள்க!     தமிழீழத் தாயகத்தில் சிறிலங்காப் படையினரால் பறிக்கப்பட்டுள்ள தமது சொந்த நிலங்களை மீட்டெடுப்பதற்காகவும், காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பாக உண்மைநிலையினை அறிந்து கொள்வதற்காகவும் எமது மக்கள் நடாத்தி வரும் தொடர் போராட்டங்களுக்குத் தோழமை தெரிவித்து புலம்பெயர் தேசங்களில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒருங்கு கவனயீர்ப்பு போராட்டங்களில் மக்களை அணிதிரள தலைமையர் வி. உருத்ரகுமாரன்  அழைப்பு விடுத்துள்ளார்.   எதிர்வரும் திங்கட்கிழமை வைகாசி 29, 2048…

சிறிலங்காவின் ‘நள்ளிரவு’ நீதி பன்னாட்டு நீதிபதிகளுக்கான தேவையினை வலுப்படுத்துகிறது.

சிறிலங்காவின் ‘நள்ளிரவு’ நீதி பன்னாட்டு நீதிபதிகளுக்கான  தேவையினை வலுப்படுத்துகிறது.   மனித உரிமை மன்றமே! வட கொரியாவைப் போல் சிறிலங்காவையும் ஐ–நா பொதுப் பேரவையின் பார்வைக்கு அனுப்புக!   முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான திரு நடராசா இரவிராசு அவர்களது கொலையில் குற்றஞ்சாட்டப்பட்ட எதிரிகள் அனைவரையும் கடந்த 2016 திசம்பர் 24ஆம் நாள் சிறிலங்காவின் நீதிமன்றம் விடுவித்துள்ளது. இரவிராசு அவர்கள் 2006 ஆம்ஆண்டு நவம்பர் 10ஆம் நாள் ஊர்தியில் பணிக்குச் சென்று கொண்டிருந்த போது படுகொலை செய்யப்பட்டார். கொழும்பு நகர்மையப்பகுதியில் காவல்துறை – பாதுகாப்புத்துறை நிறுவனங்கள் பலவற்றுக்கும் கூப்பிடு தொலைவில் பட்டப்பகலில்கொலைகாரர்கள் அவர் வண்டியின் மீது சுட்டார்கள்.   இரவிராசு படுகொலைக்காக 2015 நவம்பர்…

பிரான்சு பாராளுமன்ற ஆய்வுக்குழுவுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கச் சார்பாளர்கள் சந்திப்பு

 தமிழர்களுக்கான பிரான்சு பாராளுமன்ற ஆய்வுக்குழுவினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பாளர்கள் சந்தித்தனர்!   பிரான்சு பாராளுமன்ற உறுப்பினர்களது தமிழர்களுக்கான ஆய்வுக்குழுவினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பாளர்கள் குழு சந்தித்துள்ளது.   பிரான்சு பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற பல்வேறு கட்சி உறுப்பினர்களை உள்ளடக்கியதாக இந்த ஆய்வுக்குழுவின் தலைவி மரி  சியார்சு புவே அவர்களுடன் இச்சந்திப்பு இடம்பெற்றிருந்தது.   பிரான்சு பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றிருந்த இச்சந்திப்பில் ஈழத்தமிழர்களின் நீதிக்கும் உரிமைக்குமான போhராட்டத்தின் சமகால நிலைவரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.   தமிழ்மக்களுடைய இனச்சிக்கல் தொடர்பில் நீண்ட காலமாகத், தான் கொண்டுள்ள…