மத்திய வாரியப் பள்ளிகளில் சமற்கிருத வாரம் கொண்டாட உத்தரவு: வைகோ ஆவேசம்

  மத்திய வாரியப் பள்ளிகளில் சமற்கிருத மொழி, பண்பாடு,கலை ஒழுகலாறு திணிக்கப்படுவதை ஒருபோதும் தமிழகம் ஏற்காது என்று வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மத்திய மேல்நிலை கல்வி வாரியத்தின் (Central Board of Secondary Education-CBSE) இயக்குநர் சாதனா பராசுகர், சூன் 30, 2014 நாளிட்ட சுற்றறிக்கை ஒன்றை இந்தியா முழுவதும் உள்ள சி.பி.எசு.இ. பள்ளிகளுக்கு அனுப்பி வைத்துள்ளார். நாட்டிலுள்ள 15 ஆயிரம் சி.பி.எசு.இ. பள்ளிகளிலும் ஆகத்து 7 முதல் 13 ஆம் நாள்…

பள்ளிகளில் சமற்கிருத வாரம் கொண்டாட முதல்வர் கடும் எதிர்ப்பு

பள்ளிகளில், சமற்கிருத வாரம் கொண்டாட, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதற்கு, முதல்வர் செயலலிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ‘அதற்கு மாற்றாக, அந்தந்த மாநிலத்தின் மொழி மற்றும் பரம்பரை அடிப்படையில், விழா கொண்டாட வழி செய்யலாம்’ என, அறிவுறுத்தி யுள்ளார். இது குறித்து, அவர் தலைமையாளருக்கு எழுதியுள்ள மடலில், மத்திய மனிதவளத் துறையின், பள்ளிக்கல்வி – எழுத்தறிவுத் துறையின் செயலர், ஆகத்து, 7 ஆம் நாள் முதல், 13 ஆம் நாள் வரை, சமற்கிருத வாரம் கொண்டாடும்படி, அனைத்து மாநில அரசு தலைமைச் செயலர்களுக்கு, மடல் எழுதியுள்ளதை அறிந்தேன்….

துளிப்பா விழா – மின்மினி + செல்லம் நிலையம்

  மின்மினி + செல்லம் நிலையம் முப்பெருவிழா கார்முகிலோன் துளிப்பா விருது பாரதி துளிப்பா விருது பாரதி, பாசோ கவிமன்றம் ஆடி 11 , 2045 / சூலை 27, 2014 ஞாயிறு மாலை 5.15 மணி இரானடே நூலக அரங்கம், சென்னை 600 004  

சங்க இலக்கிய அறிமுகம் – நூல் வெளியீட்டு விழா

  சங்க இலக்கிய அறிமுகம் – நூல் வெளியீட்டு விழா தமிழ் இலக்கிய மன்றம் புழுதிவாக்கம் சென்னை 600 091 ஆடி 4 , 2045 / சூலை 20, 2014 ஞாயிறு மாலை 4.00 மணி அறிஞர் ஔவை நடராசன் பங்கேற்கிறார்.  

சமற்கிருத வாரம் கொண்டாடுவது அப்பட்டமான மொழித் திணிப்பு – இன மேலாதிக்கம்!

மத்திய அரசின் பள்ளிகளில் சமற்கிருத வாரம் கொண்டாடுவது அப்பட்டமான மொழித் திணிப்பு – இன மேலாதிக்கம்! தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் கண்டனம்!    நடுவண் மேல் நிலைப் பள்ளிக் கல்வி வாரிய (சி.பி.எஸ்.இ) இயக்குநர் அண்மையில் இந்தியா முழுதும் உள்ள நடுவண் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் வரும் ஆகசுட்டு 7 முதல் 13 முடிய சமற்கிருத வாரம் கொண்டாடும்படி அறிவுறுத்தி இருக்கிறார். இதுவரை இல்லாத வகையில் முதல் முறையாக அனுப்பப்பட்டுள்ள இந்த சுற்றறிக்கையானது ஒரு மொழி மற்றும்…

பள்ளிகளில் தாய்மொழி கட்டாயமாக்கப்பட வேண்டும்: தினமணி வைத்தியநாதன் வலியுறுத்தல்

     மத்திய அரசின் பள்ளிகளிலும் பதின்நிலைப் பள்ளிகளிலும் தாய்மொழி கட்டாயமாகக் கற்றுத் தரப்பட வேண்டும் எனத் “தினமணி’ ஆசிரியர் கே.வைத்தியநாதன் வலியுறுத்தினார். சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள அமிர்தா வித்யாலயா தொடக்கப் பள்ளியின் ஆண்டு விழா ஆடி 2, 2045 / 18.07.14 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று அவர் பின்வருமாறு பேசினார்: இந்தியாவின் பெருமையை வெளிநாட்டில் நிலைநாட்ட வேண்டுமானால், அதற்கான நாற்றங்கால் தொடக்கப் பள்ளிகளில்தான் இருக்கிறது. இந்தப் பள்ளிகளில் குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுப்பதை வேண்டா என்று சொல்லவில்லை. அதோடு,…

‘ தமிழ் இன உரிமை மீட்பு’ பொதுக்கூட்டம் – மயிலாடுதுறை

  நாகை மாவட்டம், மயிலாடுதுறையில், திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், ‘ காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், காவிரி பாசன படுகையில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை கைவிடக்கோரியும் ‘ தமிழ் இன உரிமை மீட்பு’ பொதுக்கூட்டம். நாள்: ஆடி 8, 2045 – 24.07.2014 வியாழன் மாலை 5 மணி இடம்: விசயா திரையரங்கு அருகில், மயிலாடுதுறை.   கருத்துரை: தோழர் கொளத்தூர் மணி அவர்கள், தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம். தோழர் விடுதலை இராசேந்திரன் அவர்கள், பொதுச்செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம்.

நடுகற்கள் – பாதுகாப்பும் பேணுகையும் 3 : ச.பாலமுருகன்

  (ஆனி 29, 2045 / சூலை 13, 2014 இதழின் தொடர்ச்சி)     3.     நடுகற்கள்/மரபுச்சின்னங்கள் தொடர்பான பயிற்சி அளித்தல். தமிழ்நாட்டில் அமைந்துள்ள அனைத்து நினைவுச்சின்னங்களும் பேணப்பட, முதலில் அவை பற்றிய தகவல் தொகுப்பு உருவாக்கவேண்டும். பிறகு அந்நினைவுச்சின்னங்கள் பாதுகாக்கப்படவேண்டியதன் கட்டாயத்தை உள்ளூர் மக்களிடம் தெரிவிக்கவேண்டும். உள்ளூர் மக்களுக்கு முதலில் அவர்கள் ஊரைப்பற்றிய ஓர் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும். வருடத்திற்கு ஒன்று/இரண்டு முறை மாவட்ட அளவில் ஒரு கருத்தரங்கம், பயிலரங்கம் நடத்தப்படவேண்டும். அதில் பள்ளி/கல்லூரி மாணவர்கள், வரலாற்று ஆர்வலர்கள், உள்ளாட்சிச் சார்பாளர்கள்…

தொடர் சொற்பொழிவு- 4 : தமிழ் இணையக் கல்விக்கழகம்

தமிழ் இணையக் கல்விக்கழகம் காந்தி மண்டபம் சாலை, கோட்டூர் சென்னை- 600 025. வழங்கும் இணையம் வழி தமிழக வரலாறு, கலை, பண்பாடு, இலக்கியம் பற்றிய தொடர் சொற்பொழிவு-4 “கல்லில் ஓர் கவிதை – காஞ்சி கைலாசநாதர் கோவில்” என்னும் தலைப்பில் திரு. இர.கோபு (ஆய்வாளர், தமிழ்ப் பாரம்பரியம் கலை, பண்பாடு) அவர்கள் உரையாற்றுகிறார். நாள் : ஆடி 23, 2045 / 08.08.2014, வெள்ளிக்கிழமை,              நேரம் : மாலை 4.30 மணி இடம் : தமிழ் இணையக் கல்விக்கழகம், அனைவரும் வருக!…

‘இளந்தமிழகம்’ மலர்ந்தது!

“தமிழர்களைக் காப்பாற்றுங்கள் இயக்கம்” (Save Tamils Movement) காலத்தின் தேவைக்கேற்பத் தன் பெயரைத் தமிழில் புதியதாகச் சூட்டிக் கொண்டு கொள்கை அறிக்கையையும் வெளியிட்டது. இன்று (ஆனி 29 , 2045 / சூலை 13 / ஞாயிறு) மாலை 6 மணிக்கு சென்னை தியாகராய நகர் வெங்கட்நாராயணா சாலையில் உள்ள செ.தெய்வநாயகம் பள்ளியில் இது தொடர்பான விழா நடைபெற்றது. தோழர்.செய்யது, இவ்வியக்கத்தின் கடந்த ஐந்தாண்டுச் செயல்பாடுகளைத் தொகுத்து வழங்கினார். தோழர். சமந்தா தலைமையில் நடந்த முதலாம் அமர்வில் தோழர் இன்குலாப், பேரா.மணிவண்ணன், தோழர்.சுந்தரி ஆகியோர்…

பிரித்தானிய வல்வை நலன்புரிச் சங்கத்தின் கோடை விழா 2014

  பிரித்தானிய வல்வை நலன்புரிச் சங்கம் நடத்திய 2014 ஆம் ஆண்டுக்கான கோடைவிழா மிகச் சிறப்பாக கடந்த 07-07-2014 அன்று நடைபெற்று முடிந்தது. அந்நிகழ்வின் ஒளிப்படத் தொகுப்புகள் இங்கே! ஒளிப்படங்களைச் சொடுக்கிக் காண்க!  

வேட்டி தீண்டாமை ஒழியட்டும்! தேசிய இனங்களின் உரிமைகள் வெல்லட்டும்!

–      இலக்குவனார் திருவள்ளுவன்     அண்மையில்(ஆனி 27, 2045 / சூலை 11, 2014 வெள்ளிக்கிழமை) இந்திய மட்டைப்பந்தாட்ட மன்றத்தின் சென்னை அமைப்பில் புத்தக வெளியீட்டுவிழா ஒன்றிற்கு அழைக்கப்பட்டு அழைப்பிதழுடன் அலுவலக ஊர்தியில் சென்றிருந்த நீதிபதி அரிபரந்தாமன், மூத்த வழக்குரைஞர் காந்தி, மதுரை வழக்குரைஞர் சுவாமிநாதன் ஆகியோர் வேட்டி அணிந்து சென்றதால் மன்றத்தில் நுழைந்து விழாவில் பங்கேற்க மறுக்கப்பட்டனர். தமிழ்ப்பண்பாட்டிற்கு எதிரான செயல்பாடு என அனைத்துத் தரப்பாரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இச் செயல் கண்டிக்கப்படுவதுடன் இத்தகைய மோசமான போக்கு நிறுத்தப்பட…

1 3 4 5 7