அனைத்து மொழிகளையும் வென்ற அன்னைத் தமிழை ஏத்துவோம்

மறைமுதல் கிளந்த வாயன்மதி      மகிழ் முடித்த வேணி இறைவர்தம் பெயரை நாட்டி      இலக்கணம் செய்யப் பெற்றே அறைகடல் வரைப்பில் பாடை      அனைத்தும் வென்று ஆரியத்தோடு உறழ்தரு தமிழ்த் தெய்வத்தை      உள்நினைந்து ஏத்தல் செய்வாம் – கருணைப் பிரகாசர்: திருக்காளத்தி புராணம்: கடவுள் வாழ்த்து  

தமிழருமை அறியாதாரும் உளரோ

யாரறிவார் தமிழருமை யென்கின் றேன்என் அறிவீனம் அன்றோஉன் மதுரை மூதூர் நீரறியும் நெருப்பறியும் அறிவுண் டாகி நீயறிவித் தாலறியு நிலமுந் தானே? – பரஞ்சோதி முனிவர்: மதுரைப் பதிற்றுப்பத்தந்தாதி: 45

நூலகம் இல்லாத திட்டச்சேரிப் பேரூராட்சி

  நாகப்பட்டினம் மாவட்டம், திட்டச்சேரி பேரூராட்சியில் நூலகம் இல்லாததால் அப்பகுதியில் படிக்கும் ஆர்வம் உள்ளவர்கள் படிப்பதற்காகத் தொலைவிடங்களில் உள்ள நூலகங்களுக்குச் சென்று படித்து வருகின்றனர்.   ஏறத்தாழ 10,000 மக்கள் தொகை கொண்ட திட்டச்சேரி பேரூராட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் நூலகம் இருந்தது. நூலகக் கட்டடம் பாழடைந்ததால் நூலகம் அப்புறப்படுத்தப்பட்டது. இப்பகுதி மக்கள் நூலகம் அமைக்கவேண்டும் எனவும் அதற்காக வருவாய்த்துறைக்குச் சொந்தமான நிலங்களைக் காண்பித்தும் இதுநாள் வரை நூலகம் கட்டப் பேரூராட்சி முன்வரவில்லை.   திட்டச்சேரிப் பேரூராட்சியில் உள்ள ஏராளமான கவிஞர்கள், இலக்கியவாதிகள்,…

மொழி உரிமைப்போரில் பேரா.இலக்குவனார் – உரைகள்

ஒய்எம்சிஏ பட்டிமன்றம் மொழி உரிமைப்போரில் பேரா.இலக்குவனார் தை 13, 2046 / சனவரி 27, 2015 செவ்வாய் மாலை 6.00 மணி வரவேற்புரை : செயலர் கெ.பக்தவத்சலம் தலைமையுரை : பேரா.ப.அர.அரங்கசாமி சிறப்புரை பேரா.மறைமலை இலக்குவனார்

யார் கவிஞன் ? – கவிஞர் முடியரசன்

  காசுக்குப் பாடுபவன் கவிஞன் அல்லன் கைம்மாறு விழைந்து புகழ் பெறுதல் வேண்டி மாசற்ற கொள்கைக்கு மாறாய் நெஞ்சை மறைத்துவிட்டுப் பாடுபவன் கவிஞன் அல்லன் தேசத்தைத் தன்னினத்தைத் தாழ்த்திவிட்டுத் தேட்டையிடம் பாடுபவன் கவிஞன் அல்லன் மீசைக்கும் கூழுக்கும் ஆசைப்பட்டு மேல்விழுந்து பாடுபவன் கவிஞன் அல்லன் ஆட்சிக்கும் அஞ்சாமல் யாவரேனும் ஆள்க எனத் துஞ்சாமல், தனது நாட்டின் மீட்சிக்குப் பாடுபவன் கவிஞன் ஆவன் மேலோங்கு கொடுமைகளைக் காணும் போது கவிதைகளைப் பாய்ச்சுபவன் கவிஞன் ஆவன் காட்சிக்குப் புலியாகிக் கொடுமை மாளக் கவிதைகளைப் பாய்ச்சுபவன் கவிஞன் ஆவன்…

தமிழகம் உலகத் தாயகமாகுக! – கவியோகி சுத்தானந்த பாரதியார்

தமிழ் இனிதோங்குக! தமிழ் உலகாளுக! தமிழிசை முரசம் தாவி விண்ணெழுகவே! தமிழ்மொழி உலகத்தாய் மொழியாகுக! தமிழகம் உலகத் தாயகமாகுக!   – கவியோகி சுத்தானந்த பாரதியார்  

ஊர்விலக்கம் – வைகை அனிசு

ஊர்விலக்கம்   தமிழகத்தில் சாதிவிலக்கம் அல்லது ஊர் விலக்கம் என்று சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கும் பழக்கம் பண்டைய காலத்திலிருந்து இன்று வரை இலைமறைகாயாக இருந்து வருகிறது. சாதிவிலக்கம் ஒவ்வொரு சமூகத்திலும் அல்லது ஒவ்வொரு சாதியிலும் அல்லது ஒவ்வொரு மதத்திலும் ஏதாவது ஒரு காரணத்திற்காக நடைபெறுகிறது. சாதிவிலக்கத்தால் பாதிப்படைந்தவர்கள் இன்றும் பல ஊர்களில் உள்ளனர். இவ்வாறு ஒதுக்கி வைக்கப்பட்டவர்களிடம் யாரும் பேசக்கூடாது வீட்டு வாசலைக் கூட மிதிக்க கூடாது தண்ணீர் வாங்கிக் குடிக்க கூடாது எவ்விதக் கொடுக்கல் வாங்கலும் வைத்துக்கொள்ளக் கூடாது எந்த விழாக்களிலும் பங்குபெறக்கூடாது…

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 9 – ஆ.வெ.முல்லை நிலவழகன்

(தை 11, 2046 / சனவரி 25, 2045 தொடர்ச்சி) காட்சி – 9 அங்கம்    :     ஆண் சிட்டு, பெண் சிட்டு இடம்     :       மரக்கிளை நிலைமை :     (சிட்டே தனது எண்ணத்தைச் சிறிதே விளக்கிடப் பெண் சிட்டோ                      பட்டென இருளைக் கிழித்தாற்போல்                              பகன்றிடச் சிட்டோ திகைக்கின்றது) ஆண் :     அன்புப் பேடே! அறுசுவை உணவை கணவனுக்குத் திருமகள் வடிவாய் வந்திங்கு நன்றே படைத்தைப் பார்த்தாயா? என்றே ஒருவர் கேட்பதைப்பார்! பெண்     :     உணவேயின்றி…

ஆட்சியருக்குப் பாதி-மாவட்டக் கண்காணிப்பாளருக்குப் பாதி ??? !!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆட்சியருக்குப் பாதி!!!??? மாவட்டக் கண்காணிப்பாளருக்குப் பாதி ??? !!!   நாகப்பட்டினம் மாவட்டத்தில் காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரிவதாகக் கூறும் சம்பந்தம் என்பவர் 94981-65053 என்ற அலைபேசியில் இருந்து தொடர்பு கொண்டு  இடர்ப்பாட்டில் உள்ளவர்களைக் கண்டறிந்து உரூ.2 இலட்சம் வாங்குவதும், தரமறுப்பவர்களை மிரட்டுவதும் என மோசடி செய்து வாழ்ந்து வருகிறார்.   நாகப்பட்டினம் மாவட்டத்தில் மகளிர் காவல்நிலையங்களில் மணக்கொடை(வரதட்சணை) வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. இதில் 5 அல்லது 10க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அதில் 2 அல்லது 3…

மாநிலப் பேச்சுப் போட்டியில் பரமக்குடி மாணாக்கனுக்கு முதல் பரிசு

மாணவன் நிதிசு பேச்சுப் போட்டியில் முதலிடம் தமிழகப் பள்ளிக் கல்வித் துறை நடத்திய மாநில அளவிலான கலை இலக்கியப் போட்டிகள் வேலூரில் நடைபெற்றன. இதில் பரமக்குடி கீழமுசுலீம்(KJEM) மேல்நிலைப்பள்ளி மாணவன் நிதிசு பேச்சுப் போட்டியில் முதலிடம் பிடித்தார். தமிழகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வீரமணி இம்மாணவருக்குப் பரிசும் சான்றிதழ்களும் வழங்கினார். வெற்றி பெற்ற மாணவனைப் பள்ளித் தாளாளர் முகமது உமர், தலைமையாசிரியர் அசுமல்கான், சாரண ஆசிரியர் இதாயத்துல்லா ஆகியோர் பாராட்டினர். வாழ்த்து தெரிவிக்க : 97 50 10 51 41  தரவு…

மும்மணி யாண்டுகள்: மொழிப்போர் பொன்விழா, தமிழியக்க நூற்றாண்டு விழா, காங்கிரசு துரத்தப்பட்ட பொன்விழா

       தனித்தமிழ் இயக்கம், மொழிப்போர்கள் இவற்றால் நாம் தொடக்கத்தில் வெற்றியை ஈட்டியுள்ளோம். எனினும் வெற்றிக்கனியைச் சுவைக்கும் முன்னரே தோல்விப்பாதையில் சறுக்கி விட்டோம். வீண் பேச்சையும் வெட்டிப்பேச்சையும் கேட்டு மயங்கும் நாம் செயற்பாட்டாளர்களைப் போற்றுவதில்லை. தமிழுக்காக வாழ்ந்த, வாழும் அறிஞர்களையும் தமிழ்காக்கத் தம் இன்னுயிர் நீத்தவர்களையும் நினைத்துக்கூடப் பார்ப்பதில்லை. இவற்றை மாற்றுவதற்கு இவ்வாண்டு முதலான மூன்றுஆண்டுகளும் நாம் ஒல்லும் வகையெலாம் பரப்புரை மேற்கொள்ள வேண்டும்.  தமிழ்காக்கும் மொழிப்போர் 1937 இலிலேயே தொடங்கிவிட்டது. எனினும் 1965 இல் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மொழிப்போர் ஆட்சியையே…