இந்துக்கள் யார்?

இந்துக்கள் யார்? 10, 000 ஆண்டுகளின் முன்னர், காகேசியரில் ஒரு கூட்டத்தார் தாம் இருந்த நாட்டைவிட்டு மேற்கே ஐரோப்பியாவிற்கும், மற்றொரு கூட்டத்தார் இந்தியாவிற்கும் புறப்பட்டார்கள். மேற்கே சென்றவர்கள் செர்மனி முதலிய இடங்களில் தங்கினார்கள். கிழக்கே சென்றவர்கள் கைபர், காபூல், போலன் கணவாய்களின் வழியாகச் சிந்து ஆற்றங்கரையில் குடியேறினார்கள். பின்னவர்களாகிய ஆரியர்கள் சிந்து ஆற்றங்கரையில் குடியேறுவதற்கு முன்னரே, தமிழர்கள் அராபியர்களுடனும் பாரசீகர்களுடனும், அக்கேடியர், சுமேரியர், அசிரிய தேசத்து அசுரர், ஃபினீசியர் முதலியோர்களுடனும் – தரைவழியாகவும் தண்ணீர் வழியாகவும் வாணிபம் செய்து வந்தார்கள். அராபியர்களும் பாரசீகர்களும் தம்…

சண்டைகளும் கலகங்களும் பெருகுவதற்குத் காரணம் சமற்கிருத மொழியே

மதச் சண்டைகளும் வேற்றுமைக் கலகங்களும் பெருகுவதற்குத் காரணம் சமற்கிருத மொழியே   இதனை நன்குணர்ந்தே சுவாமி விகேகாநந்தரும் மதச் சண்டைகளும் சாதி வேற்றுமைக் கலகங்களும் பல்குதற்கு ஒரு பெருங் கருவியாய் இருத்தலும், இருப்பதும் சமசுகிருத மொழியாகும் என்றும் சமசுகிருத மொழி நூல்கள் தொலைந்து போனால் இப்போராட்டங்களும் தொலைந்து போகும் என்றும் வருந்திக் கூறினார். – தமிழ்க்கடல் மறைமலையடிகள்

ஆரியருக்கு நாகரிக வாழ்வைக் கற்றுக் கொடுத்தவர் தமிழரே

  இன்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே அதாவது ஆரியர் இந்திய நாட்டுள் நுழைவதற்கு முன்னமே தமிழர் தம் முன்னோர் நாகரிகத்திற் சிறந்தராய் இருந்து நாகரிகம் இல்லா ஆரியர்க்கு நாகரிக வாழ்க்கையினைக் கற்றுக் கொடுத்தாராதலால் அத்தகைய முன்னோரின் மரபில் வந்த தமிழர்கள் தமது பழம்பெருமையை உணர்ந்து அதற்கேற்ப நடத்தல் வேண்டும்.   தமிழ் முன்னோர்கள் தமது தமிழ் மொழியைப் பிறமொழிக் கலப்பின்றித் தூய்தாய் எல்லாவளனும் நிரம்ப வளர்த்து வழங்கி வந்தவாறுபோல, இஞ்ஞான்றைத் தமிழருந் தமிழ்மொழியைத் தூய்தாய் வளனுற வளர்த்து வருதல் வேண்டும். ஒவ்வொரு மக்கட்குழுவினருந் தமது…

வேதங்களை உருப்போட்ட பின் வாயில் இருந்து இரத்தம் இரத்தமாக வரும்

வேதங்களை  உருப்போட்ட பின் வாயில் இருந்து இரத்தம் இரத்தமாக வரும்   இளமையில் நான் வேதங்களை உருப்போட்டது உண்டு. உருப்போட்ட பின் வாயில் இருந்து இரத்தம் இரத்தமாக வரும். இப்படி இரத்தம் வருவதற்கு மூலகாரணம் என்ன என்று மருத்துவர் பலரைக் கேட்டேன்………….   ஒரு மருத்துவர் என்னைக் காலையில் ஓதுகின்ற உபநிடதத்தையும், வேதங்களையும் 15 நாட்கள் வரை நிறுத்தி வைக்கச் சொன்னார். உபநிடத்தையும், வேதத்தையும் நிறுத்தி வைத்துத் தமிழையே ஓதினேன். அப்பொழுது இரத்தம் வரவில்லை. அன்றிலிருந்து சமற்கிருதம் ‘இரத்த மொழி’ என்று முடிசெய்தேன். தமிழுக்கும்…

இளைப்பும் களைப்பும் தரும் பிற மொழி எழுத்தொலிகள் வேண்டா

  பிறமொழிகளில் உள்ள சில எழுத்து ஒலிகள் தமிழில் இல்லாததைச் சிலர் தமிழுக்குக் குறையாகச் சொல்லுகிறார்கள். சிலர் ‘இஸ்’ என்று சொன்னால் நமக்கு இளைப்பு வரும். ‘ஹா’ என்றால் களைப்பு வரும் இந்த இஸ், ஹாவும் நமக்கு இளைப்பும், களைப்பும் தருவதால் அவை நமக்கு வேண்டா. நமக்கு இளைப்பும், களைப்பும் ஏன்? ‘ச’ போதும். ‘ஜ’ வேண்டா. தமிழ்மொழிகளிலே உள்ள சொற்களின் சிறப்பை அறிந்தால் மற்ற மொழிகள் எல்லாம் எம்மாத்திரம்? – தமிழ்க்கடல் மறைமலையடிகள்: தமிழ் வாழ்வும் ஆரியர் வாழ்வும்

தமிழரிடமிருந்து பெற்றனவற்றைத் தமக்கே உரியன என்கின்றனர் ஆரியர் – மறைமலையடிகள்

    இவ்வாறு தத்துவ ஞானங்களும் அவை திருந்த விளக்கிய உபநிடதம், சிவாகம் முதலியனவும் தமிழர்க்கே உரியனவாய்ப் பின் ஆரியராற்றமிழரிடமிருந்து பெறப்பட்ட ஆரிய இரவற்பொருணூல்களாய் நிலைப்பவும், இஞ்ஞான்றை ஆரியர் அவை தமக்கே உரியன எனவும், அவை தம்மைத் தமிழர் ஓதப் பெறார் எனவும் கூறுதல் சிறுமகரானும் எள்ளிநகையாடற்பாலதாம் இஞ்ஞான்றை ஆரியர் தமிழர் செய்த நன்றியைச் சிறிதும் ஓராது தீட்டின மரத்திற் கூர் பார்த்தல் ஒப்பா, நமக்கு அறிவு கொளுத்திய பண்டைத் தமிழ் மக்கள் மரபினராம் நம்மனோர்பாற் செய்து போதரும் படித்தொழுக்கம் மிகப் பெரிது! அவர்…

அமெரிக்கத் தூதரகத்தில் ஒலித்த அழகு தமிழ்!- விகடன் வாசகர் விசயலட்சுமி

     அமெரிக்கா செல்வதற்கான குடியேற்ற இசைவு பெற (புகவுச்சீட்டு -விசா) நேர்காணலுக்கு அமெரிக்கத்தூதரகம் (Cஒன்சுலடெ) சென்றிருந்தோம். அமெரிக்கர்கள் பேசும் ஆங்கிலம் புரிந்து நாம் மறுமொழி அளிப்பது சிரமமாக இருக்கும் என்று தோன்றியதால், நேர்காணல் தமிழில் வேண்டும் என்று விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்தோம்.   நேர்காணலின்போது மொழி பெயர்ப்பாளருக்காகக் காத்துக் கொண்டிருந்த எங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் ஆகியும் மொழி பெயர்ப்பாளர் யாரையும் காணாமல் கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. சமாளித்துக் கொண்டு, எங்களை நேர்காணல் செய்ய இருந்த குடியேற்ற அதிகாரி ஒரு பெண் என்பதால் ‘குட் மார்னிங்…

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 25 – ஆ.வெ.முல்லை நிலவழகன்

(வைகாசி 3, 2015 / மே 17, 2015 தொடர்ச்சி) காட்சி – 25 அங்கம்    :    ஆண் சிட்டு, பெண் சிட்டு இடம்        :    மரக்கிளை நிலைமை    :    (காட்சியைக் கண்டு சிட்டுகளோ! நகை                     ஆட்சியைக் கண்டு வியக்கின்றது) பெண்  :    பெண்களுக்கென்ன நகையின்மேல் இத்தனை ஆசை உள்ளது சொல்? ஆண்  :    கண்ணே! பெண்ணுக்கு நகைதானே! என்ன அதில்தான் உள்ளதுவோ? பெண்  :    மேலைநாட்டுப் பெண்களுக்கு இத்தனை விருப்பம் இதில் உண்டோ? ஆண் …

நாகப்பட்டினத்தில் சீரழிந்த நிலையில் சட்டம்-ஒழுங்கு!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சீரழிந்த நிலையில் சட்டம்-ஒழுங்கு! தனிமனிதனுக்குப் பாதுகாப்பற்ற நிலை   நாகப்பட்டினம் மாவட்டத்தில் காவல்துறையின் போதிய நடவடிக்கையின்மையால் சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. இதனால் தனிமனிதனுக்குப் பாதுகாப்பாற்ற நிலை ஏற்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்னர் வேதாரண்யத்தில் பணிபுரிந்த பெண்நீதிபதி நாகப்பட்டினம் மாவட்ட நீதிமன்றத்திற்குக் கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டார். இதனால் வாரத்தில் இரண்டு நாள் நாகப்பட்டினத்திற்கும், மற்ற நாட்களில் வேதாரண்யத்திலும் பணியாற்றினார். வேதாரண்யத்தில் இருந்து நாகப்பட்டினம் வரும்போது   வழக்கு ஒன்றில் தொடர்புடையவர் சார்பில் வெடிகுண்டை பெண்நீதிபதி மீது ஒரு மருமக்கும்பல்…