தாயுமானவர் – நா.இராசா இரகுநாதன்

தாயுமானவர் தமிழீழக் கரு சுமந்து தாயுமானவர் ! உயிர் மெய் ஆயுதம் -எனத் “தமிழுக்கு ” அனைத்துமானவர்! உலகத் தமிழர்களின் ஒற்றை முதுகெலும்பு ! தொல்காப்பியம் திருக்குறள் சிலப்பதிகாரம் -இவை தமிழின் பெருமிதங்கள் இனி தலைவரின் வரலாறும்!   –  நா.இராசா இரகுநாதன்

அவனே உயிர்ப்பண் – இராசா இரகுநாதன்

தாயகமே தளையறு ! வளையாது வளரும் பனையே ! யாரை வரவேற்க வானை வளைக்கிறாய்? கார்த்திகைப் பூவே யாரைத் தழுவ -உன் காந்தள் விரல்கள் காற்றில் அலைகின்றன? உப்புக்கடலே! யாரை எதிர்நோக்கி எட்டிஎட்டிக் குதிக்கிறாய்? வன்னிக்காடே யாருக்கு மாலைசூட்ட மலர்ந்து கிடக்கிறாய்? ஆதியாழே! யார் இசைக்க சுரம் கூட்டுகிறாய் ? அமுதத் தமிழே ! எவர் எழுத காத்திருக்கிறாய்? விடுதலைப் பண்ணை! தளையறு ! தாயகமே தளையறு ! அணுக்கள் தோறும் அவன்உயிர்ப்பான் அவனே உயிர்ப்பண் ! இராசா இரகுநாதன்

செயற்கரிய ஆற்றும் பிரபாகரன் – இராசுகுமார் பழனிச்சாமி

நாட்டு நலனுக்காகத் தமிழீழத்தில் அமைந்த துறைகள்! வள்ளுவர் நெறிக்கு ஏற்ப வாழ்ந்து காட்டிய ஈடு இணையற்ற தமிழனின் பிறந்த நாள் இன்று! செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார். உரை : பிறர் செய்வதற்கு முடியாத செயல்களைச் செய்பவரே மேன்மக்கள்; செய்ய முடியாதவரோ சிறியவரே. எல்லாராலும் இப்படி ஒரு செயலை செய்ய இயலாது. பல கோடித் தமிழர்கள் இம்மண்ணில் வாழ்ந்தாலும் மேதகு பிரபாகரன் அவர்கள் மட்டுமே தமிழினத்திற்கு அடையாளம் தந்தவர், தமிழர்களுக்கு என்று ஒரு நாட்டைக் கட்டி அமைத்தவர். அப்படியான ஒரு…

அழிவில்லா எம் தலைவனின் அகவை இன்று அறுபத்தொன்று – பா சங்கிலியன்

    ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அழிவில்லா எம் தலைவனின் அகவை இன்று அறுபத்தொன்று அடிமைப்பட்ட தமிழனை அடங்கா தமிழனாக்கிய அண்ணலே நீர் நீடூழி வாழ்க! செந்தமிழர் புகழை பாரெங்கும் பரப்பிய வள்ளலே நீர் நீடூழி வாழ்க! சொல் வீரம் காட்டாத சொக்கத்தங்கமே செயல் தான் வீரமென செய்து காட்டிய செம்மலே நீர் பல்லாண்டு வாழ்க! – ‘சங்கிலியன் பாண்டியன்‎

பிரபாகரன் பிறந்த நாள் பெருமங்கலம்

    பிரபாகரன், ஈழத்தலைவர் மட்டுமல்லர்! தமிழ் ஞாலத்தலைவருமாவார்! பிரபாகரன் பிறந்ததால் தமிழர் தம் வீரம் உணர்ந்தனர் தமிழ்மானம் தெளிந்தனர்! அடிமை விலங்கொடிக்கும் துணிவைப் பெற்றனர்! இந்தியக் கூண்டிற்குள் அடைபட்டிருந்த தமிழினத்தை உலகு அறியவில்லை! பிரபாகரன் செயல்களால் தமிழினம் அறிந்தனர்! தரணியெங்கும் போற்றினர்! வாராது வந்த மாமணியாய் இருபதாம் நூற்றாண்டில் பிரபாகரன் வந்தார்! தமிழர் தாயகம் இருபத்தோராம் நூற்றாண்டில் விடுதலை பெறும் என்னும் செய்தி தந்தார்! வாழ்க பிரபாகரன்! வெல்க தமிழீழம்! உயரட்டும் தாய்த்தமிழகம்! பிரபாகரன் வாழும் காலத்தில் வாழ்கிறோம் என்னும் பெருமையை எமக்கீந்த…

விண் தொலைக்காட்சி எதிரும் புதிரும் நிகழ்ச்சியில் இலக்குவனார் திருவள்ளுவன்

விண் தொலைக்காட்சியில் கார்த்திகை 12, 2046 / நவம்பர் 28, 2015 சனிக்கிழமை இரவு 7.00 மணிக்கு ஒளிபரப்பாகும் எதிரும் புதிரும் நிகழ்ச்சியில் நான் பங்கேற்கிறேன்.   இந்திய நாடாளுமன்றத்தில் இந்திய அரசியல் யாப்பு, அம்பேத்கார்,நேரு குறித்து நடைபெறும் வாதுரை தொடர்பான வாதுரையாக இந்நிகழ்வு அமையும்.   மறு ஒளிபரப்பு இன்று யாமம் 1.00 மணி. http://wintvindia.com இணையத் தளத்திலும் காணலாம்.   வாய்ப்புள்ளவர்கள் காண்க.   அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் தமிழே விழி! தமிழா விழி!

ஈடில்லா மகள் ஈழமலர் ஈரைம்பது ஆண்டுகள் வாழியவே! 1/2

ஈடில்லா மகள் ஈழமலர் ஈரைம்பது ஆண்டுகள் வாழியவே!    தி.பி. 2018, கார்த்திகை 09 / கி.பி.1987 நவம்பர் 25 அன்று, நான் சைதாப்பேட்டைஅலுவலகத்தில் இருந்த பொழுது தம்பி அம்பலவாணன், ஈழமலர் பிறந்த தொலைவரிச் செய்தியை எடுத்து வந்திருந்தான். ஆம், பிறக்கும் முன்னரே ஈழமலர் எனப் பெயர் சூட்டியிருந்தோம். உயிர்க்கொடைப்போராளி திலீபனைப்பற்றியே பேசிக் கொண்டிருந்ததால், “ஆண் குழந்தை என்றால் திலீபன் எனப் பெயர் சூட்டுவீர்கள், பெண் குழந்தை என்றால் திலீபி என்று பெயர் வைப்பீர்களா” எனத் தம்பி கேட்டான். திலீபன் மட்டுமா? குட்டிமணி, செகன்…

தமிழ் இந்து நாளிதழ் – வாசகர் திருவிழா, சென்னை

 சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட வாசகர்களுக்கான கொண்டாட்டம் இரண்டாம் ஆண்டு நிறைவு கார்த்திகை 13, 2046 / நவம்பர் 29, 2015 காலை 09.30 – நண்பகல் 1.00   எசு.இராமகிருட்டிணனின் “வீடில்லாப் புத்தககங்கள்” நூல் வெளியீடு  

கண்டுபிடிக்கப்பட்டது இனஅழிப்பு வதை முகாம் : நாம் என்ன செய்யப் போகிறோம்?

கண்டுபிடிக்கப்பட்டது இனஅழிப்பு வதை முகாம் : நாம் என்ன செய்யப் போகிறோம்?   திருகோணமலையில் இயங்கிய கமுக்க முகாம் என்பது தடுப்பு முகாம் அல்ல. அது.இனஅழிப்பு வதை முகாம்.   வகைதொகையில்லாமல் ஓர் இனத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்களைக் கமுக்க இடத்தில் வைத்து ஒரு வேற்றின அரசின் படைகள் சித்திரவதை செய்து படுகொலை செய்வதென்பது இனஅழிப்பு உள்ளடக்கங்களைக் கொண்டது.  யூதர்களை இனஅழிப்பு செய்ய கிட்லர் பயன்படுத்திய ஆசுட்டுவிச்சு படுகொலை முகாமிற்கு எந்தவகையிலும் குறைந்ததல்ல தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் திருகோணமலை இனஅழிப்பு வதைமுகாம்.   பலவந்தமாகக் காணாமற்போகச் செய்யப்பட்டோர்…

திருக்குறள் குமரேச வெண்பாவின் அறக்கதைகள் – இ. சூசை

திருக்குறள் குமரேச வெண்பாவின் அறக்கதைகள்     இளங்காலைப் பொழுதில் புதுப்பொலிவோடு செயல்களைத் தொடங்கும் வானொலி நேயர்களே! வணக்கம்.   இன்றைக்குச் சற்றேக் குறைய நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தலை சிறந்த தமிழ் இலக்கிய ஆய்வாளர் செகவீரபாண்டியனார். கவிராசப் பண்டிதர் என்று உலகம் அவரை அழைத்தது. தூத்துக்குடியில் 1920-களில் தொடங்கி  வாழ்ந்தவர். அன்றைய ஆங்கில அரசு அவரின் நூல்களைப் பாடநூலாகக் கல்வி நிறுவனங்களில் வைத்தது. அன்றைய தமிழ் கூறும் உலகில் அவர் புகழோடு இருந்தார். கம்பஇராமாயணத்தை ஆராய்ந்து, கம்பன் கலைநிலை என்று பல…

அவதானப் புலவர் அபூபக்கர் – பேராசிரியர் மு. அப்துல் சமது

  தமிழிலக்கியப் புலமையும் இலக்கணப் புலமையும் நினைவாற்றலும் மிக்கவர்களால் நிகழ்த்தப்படும் ஓர் அரிய கலை ‘அவதானம்’   “வாயொன்று சொல்லவும் கையொன்று செய்யவும் வாய்த்தமிழ்    ஆயென்ற போதாத னேர்விடை கூறவும், ஆசினிக்கு    ஈயென்ற சொல்லை யிணைக்கலம் இட்டிசை யின்னவையோ    டேயென்ற ஆறும் அவதானம் செய்பவர் மகியைந்தவையே” என்று சதாவதானி செய்குத் தம்பிப் பாவலர் அவதானக் கலையை நிகழ்த்துபவர்கள் பெற்றிருக்கும் திறனை அளவிட்டுள்ளார்.   ஒரே நேரத்தில் பல்வேறு நுட்பமான செய்திகளைக் கவனத்தில் நிறுத்தி, கேட்கும் கேள்விகளுக்கு விடைகூறும் விதத்தில் இக்கலை…

திருவள்ளுவர் நாட்குறிப்பேடு – 2016, வாங்கிப் பயனுறுக!

2016ஆம் ஆண்டிற்கான தமிழ் நாட்குறிப்பேடு வாங்கிப் பயனுறுக!   எமது பன்மைவெளி வெளியீட்டகத்தின் சார்பில், 2016ஆம் ஆண்டிற்கான தமிழ் நாட்குறிப்பேடு (Dairy), சிறப்பாக ஆயத்தமாகியுள்ளது. ஒவ்வொரு பக்கத்திற்கும் தனித்தாள் (மொத்தம் 400 பக்கங்கள்) ஒவ்வொரு தாளிலும் அந்த நாளுக்குரிய வரலாற்று நிகழ்வுகள் (ஆண்டுக் குறிப்புகளோடு) உலகறிந்த தலைவர்களின் பிறந்த நாள் – நினைவு நாள் குறிப்பு நாடுகள் விடுதலை பெற்ற குறிப்புகள் திருக்குறள், புறநாநூறு, பாரதிதாசன் வரையிலான உரையுடன் கூடிய நற்செய்திக் குறிப்புகள் எனப் பல்வேறு செய்திகளும், ஒவ்வொரு நாளுக்கும் தமிழ் எண், தலைவர்களின்…