தமிழக வரலாறு  2/5 – மா.இராசமாணிக்கனார்

 (தமிழக வரலாறு 1/5 – மா.இராசமாணிக்கனார் : தொடர்ச்சி) தமிழக வரலாறு  2/5  ஆட்சி முறை   சங்கக் காலத்தில் நாட்டை ஆட்சிபுரிவதில் அரசனுக்கு உதவியாக ஐம்பெருங் குழுவும் எண்பேராயமும் இருந்தன. பிற்காலத்தில் பலதுறை அமைச்சர்களும் பலதுறை அலுவலர்களும் இருந்தனர் என்பது கல்வெட்டுகளால் அறியப்படுகின்றது. அரசனுடனிருந்து ஆட்சி முறைகளைக் கவனித்த அமைச்சர்கள், ‘உடன் கூட்டத்து அதிகாரிகள்’ எனப்பட்டார்கள். நாடு பல மண்டலங்களாகவும், மண்டலம் வளநாடு, நாடு, கூற்றம், சிற்றுார் என்றும் பலவாறு பிரிக்கப்பட்டிருந்தன. ஊராட்சி  ஒவ்வோர் ஊரும் ஊரவையார் ஆட்சியில் இருந்தது. ஒவ்வோர் ஊரும்…

இரண்டாம் உத்தமத்தில் என்ன நடக்கிறது? நேர்மையாளர்களே விடையிறுங்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

இரண்டாம் உத்தமத்தில் என்ன நடக்கிறது? நேர்மையாளர்களே விடையிறுங்கள்!    உத்தமம்  (உலகத்தமிழ்த்தகவல் தொழில் நுட்ப மன்றம் –  International Forum for Information Technology in Tamil – INFITT) என்னும் அமைப்பு தகவல்தொழில்நுட்பம் மூலமாகத் தமிழை வளர்ப்பதற்காகத் தோன்றிய அமைப்பு. 1997இல்  முதல் தமிழ் இணைய மாநாட்டை நடத்தியிருந்தாலும் 2000இல்தான் முறையாக  இவ்வமைப்பு வடிவம் பெற்றது. இதுவரை 16  தமிழ் இணைய மாநாடுகளை 5 நாடுகளில் நடத்தி 800க்கு மேற்பட்ட கட்டுரைகள் அரங்கேற்றியுள்ளது. எனினும் இவ்வமைப்பில் கணிநுட்பர்களுக்கு முதன்மை அளித்துத் தமிழறிஞர்களும் தமிழார்வலர்களும்…

மறைமலையடிகளின் நாட்குறிப்பு விளக்கம் – மறை. திருநாவுக்கரசு

மறைமலையடிகளின் நாட்குறிப்பு விளக்கம்  சூரியநாராயண சாத்திரியாரிடம் நீண்ட நேரம் பேசினேன்.   விளக்கம்: இவர்தாம் வி.கோ. சூரிய நாராயண சாத்திரியார், என்னும் மாபெரும் புலவர், இவர் கிறித்துவக் கல்லூரியின் தலைமைத் தமிழ்ப் பேராசிரியர் ஆவர். அடிகள் தனித் தமிழியக்கம் காண்பதற்கு முன்பே தமது வடமொழிப் பெயரைத் தனித்தமிழிற் பரிதிமாற் கலைஞன்’ என்று மாற்றிக் கொண்டவர். ‘தம் கல்லூரியிற் பணிபுரியத் தேவைப்பட்ட தமிழாசிரியரைத் தேர்ந்து கொள்ள நடைபெற்ற புலமையாளர் தேர்வில் அடிகளைத் தேர்ந்து கொண்டவர். அப்பணியை அடிகளைப் பெறச் செய்தவர். அடிகள்பால் அளவில்லா நட்பு கொண்டவர்….

இலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 1/3 – இலக்குவனார் திருவள்ளுவன்

இலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 1/3   சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம் தமிழ் உணர்விற்கு வந்ததடா பஞ்சம் என்பதுதான் இன்றைய தமிழ்நாட்டவர் நிலை. எனினும் பல தரப்பு மக்களிடையேயும் நம்நாடு தமிழ்நாடு நாமெல்லாம் தமிழ் மக்கள் என்ற எண்ணம் அரும்பி வருகிறது. எனவே, எண்ணி மகிழுதடா நெஞ்சம் தமிழ் உணர்வு மலருதடா கொஞ்சம் எனச் சிறிது மகிழ்ச்சி கொள்ளலாம். உலகின் முதல் இனம் நம் தமிழினம், உலக முதல் மொழி நம் தமிழ் மொழி என்றெல்லாம் நாம் பெருமை பேசிக் கொண்டாலும்  கல்வி…

புறநானூற்றுச் சிறுகதைகள்:  நா. பார்த்தசாரதி: அடிப்படை ஒன்றுதான்

புறநானூற்றுச் சிறுகதைகள் 6. அடிப்படை ஒன்றுதான்   “உலகில் அங்கு இங்கு என்னாதபடி எங்கும் பரந்து வாழும் மனித குலத்திற்குள், வாழும் முறையாலும் துறையாலும் வேறுபாடுகள் காண்கிறோம். ஆனால் வாழ்க்கை என்ற ஒன்றின் மூலமான அடிப்படையில் வேறுபாடு இருக்கிறதா? ‘மனித வாழ்க்கை’ என்ற ஒரு பொதுவான தத்துவத்தில் வேறுபாடு இருப்பது பொருந்துமா? இருக்கத்தான் முடியுமா? வாழ்க்கையின் சூத்திரக் கயிறு தொடங்கும் இடத்தையே ஆராய்ந்து பார்க்க விரும்பும் இந்தத் தத்துவரீதியான வினா நக்கீரர் என்ற பெரும் புலவருக்கு எழுந்தது. இன்றைக்குப் பலநூறு ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த…

பேராசிரியர் சி.இலக்குவனார் 108ஆவது பிறந்தநாள் பெருமங்கலம்,திருநகர், மதுரை 625006

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும்.   தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் 108ஆவது பிறந்தநாள் பெருமங்கலம்   கார்த்திகை 01, 2048 / நவம்பர் 11, 2017 காலை 9.00 இலக்குவனார் இல்லம் முன்பு 4ஆவது நிறுத்தம், திருநகர், மதுரை 625006       9 ஆம் வகுப்பில்  பள்ளி அளவில் முதல் 10 இடங்கள் பெற்று 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணாக்கியருக்கு அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் நூல்கள் பரிசாக வழங்கப்பெறுகின்றன. தமிழன்பர்கள் புகழுரை ஆற்றுவர். அன்புடன் இரா.பா.முருகன்…

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (28) – வல்லிக்கண்ணன்

[ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (27)   தொடர்ச்சி]   ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (28) அறந்தவறாமல் வாழ்ந்தால் அகத்தினிய வலிமை ஓங்கும் திறந்தவறாமல் வாழ்ந்தால் செம்மைசால் நலங்கள் தேங்கும் சிறந்தபேர் பணிகள் செய்தால் செய்தவக் கனிபழுக்கும் உறவெனக் கவிதை கண்டால் உளமூன்றும் வாழ்க்கை சூடும்!” மனிதர்களுக்குள் காணப்படும் மாறுபாடுகள் புற்றியும், அவை நீங்குவதற்கான வழிகள் குறித்தும் பெருங்கவிக்கோ சிந்தனைகள் வளர்த்துள்ளார். மன்பதை அல்லலில் மனவேறு பாட்டினில் மதி கெடத் துடித்தலும் ஏன்? ஏன்? மனிதர்கள் மனிதர்க்குள் மாவேறு பாடுகள் மல்கிடப் பிழிந்ததும் ஏன்? ஏன்?…

இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  02–  சி.இலக்குவனார்

(இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 01 – தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  02–  சி.இலக்குவனார் ஆ. பதிப்புரை  & நன்றியுரை   பதிப்புரை(2002)      தமிழின் தொன்மைச் சிறப்பையும், முதன்மைச் சிறப்பையும், தமிழ் மக்களின் விழுமிய பண்பாட்டையும் உயரிய நாகரிகத்தையும்  உலகுக்கு உணர்த்துவன சங்க இலக்கியங்களே!   சங்க இலக்கியங்களை உலக ஆராய்ச்சியாளர்கள் அறிந்தால்தான் தமிழ் உலகமொழிகளின் தாய் என்பதை உணர்வர் என்பதை வலியுறுத்தி வந்தவர் பெரும் பேராசிரியர் முனைவர் சி. இலக்குவனார். அறிஞர் கால்டுவல் …

தொலைத்தகவல் (Telematics) பயன்பாடு-சிறப்புப் பார்வை 2/3 : சிறுமி பேரரசி முத்துக்குமார்

(தொலைத்தகவல் (Telematics) பயன்பாடு–சிறப்புப் பார்வை 1/3 தொடர்ச்சி) தொலைத்தகவல் (Telematics) பயன்பாடு-சிறப்புப் பார்வை 2/3  இந்த ஆய்வு  பயிற்சி ஆசிரியர்கள் தேவையான விவரங்களைப் பெற்றுக் கற்பித்தலில்,  தொலைத்தகவல்பயன்பாட்டினை வளர்த்துக் கொள்ள உதவியது மலேசியக் கல்வியில் தொலைத்தகவல்     21 ஆம் நூற்றாண்டில் தகவல் தொழில்நுட்பம் படிநிலை வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இதில் குறிப்பிடத்தக்கது தொலைத்தகவல். இதுவானது தொழில்நுட்பத்தையும் தகவல்களையும் இணைக்கும் மாபெரும் ஆற்றலாக விளங்குகிறது. கல்வித் துறையிலும் இதன் பயன்பாடு அளப்பரிய சேவையாற்றுகின்றது. மலேசியக் கல்விக் கொள்கைகளில் இதன் பயன்பாடு பல வடிவங்களில் செயலாக்கம்முதன்மை காண்கிறது….

தமிழ் இலக்கியங்களில் வாழ்வியல் கூறுகள் – உலகளாவியக் கருத்தரங்கம்

தமிழ்த்துறை கே.எசு.இரங்கசாமி கலை அறிவியல் கல்லூரி, திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம்   தமிழ் இலக்கியங்களில் வாழ்வியல் கூறுகள் – உலகளாவியக் கருத்தரங்கம் திசம்பர்  2017

அனைத்துலக முருக இலக்கிய மாநாடு

அன்புடையீர், வணக்கம். தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடித்துறையும் கோயம்புத்தூர் கௌமார மடாலயமும் இணைந்து  2049  சித்திரையில் / 2018  ஏப்பிரல் – மே மாதத்தில் மூன்று நாள் அனைத்துலக முருக இலக்கிய மாநாடு நடத்திடத் திட்டமிடப்பட்டுள்ளது.  இம்மாநாட்டில் தாங்கள் கலந்து கொண்டு கட்டுரை வழங்க அன்புடன் அழைக்கின்றேன். இவண் முனைவர் மோ.கோ. கோவைமணி துறைத்தலைவர் ஓலைச்சுவடித்துறை தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்-10. அலைபேசி எண்.9042511390, 8903447547 தரவு : முனைவர் ந.மணிமேகலை

கலைகளால் செழிக்கும் செம்மொழி – தொடர் நிகழ்வு

அன்புடையீர்,  வணக்கம். ஐப்பசி 28, 2048 / 14.11.2017 செவ்வாய் அன்று மாலை 06.30 மணியளவில் பாரதிய வித்யா பவனில் நடைபெற இருக்கும் இலக்கியவீதி அமைப்பும் கிருட்டிணா இனிப்பகமும் இணைந்து நடத்தும் கலைகளால் செழிக்கும் செம்மொழி – தொடர் நிகழ்விற்கு வருமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.   தலைமை : முனைவர் சிலம்பொலி செல்லப்பன் முன்னிலை : இலக்கியவீதி இனியவன் மக்களிசை செம்மொழிக்கு ஆற்றியப் பங்களிப்பைப் பற்றி சிறப்புரை : மக்களிசைவாணர் புட்பவனம் குப்புசாமி அவர்கள் அன்னம் விருது பெற இருப்பவர் : மக்களிசைவாணி அனிதா…