தமிழ் இளையோர் அமைப்பு – கற்க கசடற

2018 தமிழ் இளையோர் அமைப்பு கற்க கசடற  தொல்காப்பியம்  திருக்குறள் ஆத்திசூடி போட்டிகள் அறிவதற்கு 07427261785  அல்லது  07915379101 எண்ணுக்கு அழையுங்கள்.   சுசிதா / Sujitha  

இலக்கியச் சிந்தனையின் 571  ஆவது நிகழ்வு & குவிகம் இலக்கிய வாசலின் 32 ஆவது நிகழ்வு

கார்த்திகை 09, 2048   25-11-2017   சனிக்கிழமை  மாலை 6.00 மணி   சீனிவாச காந்தி நிலையம்,  (Gandhi Peace Foundation)                            அம்புசம்மாள் தெரு                                                ஆழ்வார்பேட்டை சென்னை 600018   இலக்கியச் சிந்தனையின் 571  ஆவது நிகழ்வு  ‘ சருதார் வல்லபாய் படேல்’ – உரையாற்றுபவர்  திரு. புதுவை  இராமசாமி  …… தொடர்ந்து குவிகம் இலக்கிய வாசலின் 32 ஆவது நிகழ்வு நூல் வெளியீடும் அறிமுகமும்  ‘வைகறைக் காற்று’ (மரபுக் கவிதைகள்) ஆசிரியர்:  தில்லை வேந்தன்  அறிமுக உரை : திரு  பாலகிருட்டிணன்   (சுபா) அனைவரும் வருக…

மாணிக்கவாசகர் கூறும் கரு வளர் நிலைகள் – இலக்குவனார் திருவள்ளுவன்

மாணிக்கவாசகர் கூறும் கரு வளர் நிலைகள்   கரு உருவாவதில் இருந்து குழந்தையாகப் பிறக்கும் வரை இயற்கையாகவே பல இடையூறுகள் நேருகின்றன. அவற்றை எல்லாம் எதிர்கொண்டு தாக்குதல்களில் இருந்து தப்பித்தால்தான் நிறைவான நலமான மகப்பேறு நிகழும். இதனை முன்னைத் தமிழ் மக்கள் நன்கறிந்திருந்தனர். மாணிக்கவாசகர் திருவாசகத்தில் இறைவனைப் போற்றிப் பாடும்பொழுது இத்தகைய இடையூறுகளில் இருந்தெல்லாம் பிழைத்து வந்தமைக்காக நன்றிகூறிப் பாராட்டுகிறார். மானுடப் பிறப்பினுள் மாதர் உதரத்து ஈனம்இல் கிருமிச் செருவினில் பிழைத்தும் ஒருமதித் தான்றியின் இருமையில் பிழைத்தும் இருமதி விளைவின் ஒருமையில் பிழைத்தும மும்மதி…

எம்மை ஆள எமக்குத் தெரியும்! – ம.குமரவேல்

எம்மை ஆள எமக்குத் தெரியும்!   வடவோர்சிலர் தமிழோர் தமை வதையே புரிகுவதா – இறை மதவோர் பலர் இனமோர் நமை இழிவெனப் பழிப்பதுவா கரமோடு உளிசெய் நம்கடவுளர் கருவறை தடுப்பதுவா – மறை களவொடு சதிசெய் நால்வருணம் நம்கருப்பத்தில் விதிப்பதுவா இறையாண்மை இலா மண்ணில் இருப்பது இறைத்தன்மையா முறைசாரா முடிமன்னன் தில்லி வீணமர்வது பழந்தமிழருக்கா பயனிலாத்தமிழுடன் பண்ணிலா இசையும் இங்கு பலன்தருமா பதவிஆசையில் தமிழ்த்துரோகம் செய்யப்பன்றிகளும் மேவுமா ஆளுநர் உயர்சாதி தனிஅதிகாரி உயர்சாதி நீதியரசரும் அரசுத் தலைமைச் செயலரும் இவர்சாதி உறங்குதே தமிழ்ச்சாதி…

உறக்கம் வருமோ? சொல்வீர்! – மறைமலை இலக்குவனார்

உறக்கம் வருமோ? சொல்வீர்!   எரிக்கும் வறுமைத் துயர் தாளாமல் எரியில் மூழ்கிச் சாகத் துடிக்கும் தமிழ்க்குடி மக்களின் அவலம் ஒருபுறம்; கல்வி பயின்றிடப் பொருளைத் தேடிக் கழுத்தை நெரித்திடும் வங்கிக் கடனால் அல்லலுற்றிடும் மாணவர் ஒருபுறம்; விரும்பிய கல்வியை வேண்டிப் பெற்றிட வழியில்லாமல் வாடி வதங்கித் தற்கொலைக் குழியில் அமிழ்ந்து அழிந்திடும் பச்சிளங் குருத்துகள் படுதுயர் ஒருபுறம்; வாடிய பயிரைக் கண்டது,ம் வருந்திச் சாவூர் சென்றிடும் உழவர் ஒருபுறம்;; வேலை தேடியே சாலையில் நின்றிடும் இளைஞர் துன்ப ஓலம் ஒருபுறம்; துயருறும் மக்கள்…

தமிழக வரலாறு  3/5 – மா.இராசமாணிக்கனார்

(தமிழக வரலாறு 2/5 – மா.இராசமாணிக்கனார் தாெடர்ச்சி) தமிழக வரலாறு  3/5 – மா.இராசமாணிக்கனார்     வாணிகம்   கிறித்துவிற்கு முன்பு பல நூற்றாண்டுகளாகத் தமிழர், மேல் நாடுகளுடனும் கீழ்நாடுகளுடனும் கடல் வாணிகம் செய்து வந்தனர். மிக மெல்லிய ஆடைகள், மிளகு, யானைத்தந்தம், மணப்பொருள்கள் முதலியன வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. பலவகைப் பொறிகள், கண்ணாடிப் பொருள்கள் முதலியன இறக்குமதியாயின. தமிழர் கடல் கடந்து சென்று வெளிநாடுகளில் தங்கி, வாணிகம் செய்தனர்; பல நாடுகளுடன் பழகினர்; அவர்தம் மொழிகளைக் கற்றனர். இங்ஙனம் அயலாரோடு நெருங்கிய…

இலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்

(இலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 1/ 3 தாெடர்ச்சி இலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 2/3 எழுத்து நெறி :   மொழியின் வாழ்வு எழுத்தில்தான் உள்ளது. எழுத்தைச் சிதைக்கும் பொழுது அம்மொழியும் அம்மொழி இலக்கியங்களும் சிதைந்து அம்மொழி பேசும் இனமும் அழிகின்றது என்பதை ஓயாமல் உணர்த்தியவர் பேராசிரியர் இலக்குவனார். “ஒவ்வொரு மொழிக்கும் அதனதன் எழுத்தே உடலாகும். உடலாம் எழுத்தை அழித்த பின் உயிராம் மொழி வாழ்வது எங்ஙனம்? எனவே இந்தியமொழிகள் அனைத்தும் இந்திமொழியாம் தேவநாகரியில் எழுதப்படவேண்டும் என விதிக்கும் நடுவணரசின்…

மறைமலையடிகளின் நாட்குறிப்பு விளக்கம் – “வாயுள நாவுள’’ – மறை. திருநாவுக்கரசு

மறைமலையடிகளின் நாட்குறிப்பு விளக்கம் “வாயுள நாவுள’’ தண்டலம் முதலியாரிடம் ‘கற்றுக் கொள்வன வாயுள நாவுள’’ விளக்கம்  தண்டலம் முதலியார் என்றது தண்டலம் பாலசுந்தரம் முதலியாரை ஆம். அடிகள் கிறித்துவக் கல்லூரியில் தமிழாசிரியர் பணி ஏற்றுத் தம் குடும்பத்தாருடன், சென்னையிற் குடியேறினார். அடிகளார்க்குச் சென்னை வாழ்க்கை. இனிது இயங்கியதற்குப் பேருதவி புரிந்தவர் இம்முதலியாரேயாவர். இவர் அரசாங்க மொழி பெயர்ப்பாளராய்ப் பணிபுரிந்தவர். சிறந்த குடியில் தோன்றியவர். புலமையறிந்து போற்றும் புலமையர். அடிகளைத் தன் மகனெனக் கொண்டு அவரையும் அவர் குடும்பத்தையும் தம்மில்லத்தே வைத்துச் சில காலம் பாதுகாத்தவர்…

வேண்டா வரன் கொடை! –  சி. செயபாரதன்

வேண்டா வரன் கொடை!       பேயும் இரங்குமாம் பெண்ணென்றால் ! கருப்பிணித் தாயோ கருவழிப்பாள்  தான்விரும்பி !  – காயிலே பெண்கருவைத் தாயழித்தால் பின்னெங்கே ஆண்வருக்கம் ? கண்ணிரண்டும்  போன கதை !   ஈழத்தில் இட்டதீ சீதைக்கு ! எழில்மதுரை சூழத்தீ  இட்டது கண்ணகிக்கு ! – வாழாது மீண்டும் நகைச்சண்டை !  மேனியில்தீ  தங்கைக்கு ! வேண்டாம் வரதட் சணை !   தாலிகட்ட நூறுபவுன் ! தாயாக்க வேறுபவுன் ! கூலிமுதல் தந்தால்மூ கூர்த்தமெனும் – வாலிப ஆண்மகனும்…

கசங்கிய காகிதங்களின் கருணைமனு – தமிழ்சிவா

கசங்கிய காகிதங்களின் கருணைமனு   நகர நரகத்தில் கைவிடப்பட்ட கட்டடங்களாய், தூய்மையையே காணாத கழிவறைகளாய், தூய்மை இந்தியாவில் நாங்கள்!   நகரத் திராணியற்ற நத்தையின் முதுகில் நான்காயிரம் பலமேற்றியதில் கல்வி வண்டி கவிழ்ந்தது எங்கள்மேல்தான்!   அந்த இண்டு இடுக்கில் எட்டிப்பார்த்தவேளையில் காலைத் திணிக்க இரண்டுறைகள் நூல்களைத் திணிக்கப் பையுறை உங்கள் விருப்பத்தைத் திணிக்க நாங்கள் எங்களைத் திணிக்கப் பள்ளி உந்துகள் கழுத்துக்குக் கோவணம் மாட்டி மூளையை அம்மணமாக்கினீர்கள்!   எங்கள் நாக்கைக் கசக்கியதில் நாண்டுகொண்டது எங்கள் மொழி!   பள்ளிக்கழிவறையில் பதைத்துச் செத்தது…

வழ.செம்மணிமீதான தாக்குதலுக்குக் கண்டன ஆர்ப்பாட்டம்

கார்த்திகை 04, 2048 –  திங்கள் – நவம்பர் 20, 2017 மாலை 5.00 மதுரை வழ.செம்மணிமீதான தாக்குதலுக்குக் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழக மக்கள் முன்னணி முற்போக்கு இயக்கம்    

தேசிய நூலக வாரவிழா – கடலூர்

கார்த்திகை 04, 2048 –  திங்கள் – நவம்பர் 20, 2017 மாலை 3.30  முப்பெருவிழா: பதிப்பாளர்விழா, வாசகர் விழா, நூலகர் விழா பெ.விசயலக்குமி,  மாவட்ட மைய நூலகர், கடலூர்