தமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் பேரகரமுதலி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

தமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் பேரகரமுதலி தமிழ் அகராதிகளில் பாராட்டுதலுக்குரிய முதன்மை அகராதி செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி. 12 மடலங்களாகவும் இவை 31 பிரிவுகளாகவும் வந்துள்ள மிகுதியான சொல் வளம் உடைய அகராதியாகும். இது தமிழின் சொல்வளத்தை உலகிற்கு உணர்த்தும் சிறப்பான அகராதியாகத் திகழ்கிறது.. இவ்வகராதி மேலும் சிறப்பாக அமைய, நிறைகாணும் முயற்சியில் சில கருத்துகளைக் காண்போம். சமசுகிருதச் சொல், மயக்கமாக உள்ளவற்றை அவை தமிழ்ச்சொற்களே என்பதை இப்பேரகரமுதலி விளக்குகிறது. எனினும் அயற்சொற் மடலத்தில் இடம் பெற்றுள்ள சொற்களுள் நூற்றுகணக்கான தமிழ்ச்சொற்களும் இடம் பெறுகின்றன. இதேபோல் …

நாலடி இன்பம்!- 12 பற்கள் மூலம் சில சொற்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்

நாலடி இன்பம்!- 12 பற்கள் மூலம் சில சொற்கள்! பருவம் எனைத்துள பல்லின்பால் ஏனை இருசிகையும் உண்டீரோ என்று – வரிசையால் உண்ணாட்டம் கொள்ளப் படுதலால் யாக்கைக்கோள் எண்ணார் அறிவுடை யார். (நாலடியார், பாடல் 18) பொருள்: வயது எவ்வளவு கடந்துள்ளது? பற்களின் வலிமை எவ்வாறுள்ளது? வலிமையான உணவையும் உண்ண முடியுமா? என்று கருதப்படும் மறைந்துவரும் இளமையை அறிவுடையவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள். சொல் விளக்கம்: பருவம்=அகவை; எனைத்து=எத்தனை; உள=ஆகியுள்ளன; பல்லின்=பற்களினுடைய; பால்=வலிமைத்தன்மை; ஏனை=எவ்வளவு; இருசிகையும்= இரண்டு பிடியளவேனும் அல்லது வன்மை மென்மை ஆகிய இருவகை…

நாலடி இன்பம் – 11: வாழ்க்கைப் பயணத்தின் கட்டுச்சோறு! – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்

நாலடி இன்பம் – 11: வாழ்க்கைப் பயணத்தின் கட்டுச்சோறு! ஆட்பார்த் துழலு மருளில்கூற் றுண்மையால் தோட்கோப்புக் காலத்திற் கொண்டுய்ம்மின் – பீள் பிதுக்கிப் பிள்ளையைத் தாயலறக் கோடலான் மற்றதன் கள்ளங் கடைப்பிடித்த னன்று. (நாலடியார், பாடல் 20) பொருள்: தான் கொண்டு போகவேண்டிய உயிரைத் தேடித் தேடி அலைந்து கொண்டுபோகும் அருளற்றவன் யமன். கருவில் இருந்தாலும் அல்லது பிறந்த குழந்தையாய் இருந்தாலும் தாய் அழ அக்குழந்தையின் உயிரை எடுத்துச் செல்லும் இரக்கம் அற்றவன் அவன். அவன் வஞ்சகத்தைப் புரிந்துகொண்டு, வழிப்பயணத்தில் உதவும் கட்டுச்சோறு போன்ற…

நாலடி இன்பம்!- 10. காற்றில் காய்களும் விழும்! – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்

நாலடி இன்பம்!- 10. காற்றில் காய்களும் விழும்! மற்றறிவா நல்வினை யாமிளைய மென்னாது கைத்துண்டாம் போழ்தே கரவா – தறஞ்செய்ம்மின் முற்றி யிருந்த கனியொழியத் தீவளியா னற்கா யுதிர்தலு முண்டு. (நாலடியார், பாடல் 19) பொருள்: கொடுங்காற்றால் கனி மட்டும் அல்ல, கனியாத காய்களும் வீழ்வதுண்டு. எனவே, இளமையாகத்தான் உள்ளோம், பின்னர் நல்வினை புரியலாம் என எண்ணாது உள்ளதை மறைக்காது அறம் செய்க! சொல் விளக்கம்: முற்றி=முதிர்ந்து; இருந்த= இருந்த; கனி=பழங்கள்; ஒழிய= மட்டுமல்லாமல்; தீவளியால்= வலிய காற்றால்; நல்= நல்ல; காய்=காய்கள்; உதிர்தலும்=விழுதலும்;…

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 48, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.) 48 கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாந் துணை  (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கேள்வி, குறள் எண்: 414) அறிவு நூல்களைக் கற்கும் வாய்ப்பை இழந்தாலும் அவ்வாறு கற்றவர்களிடம்  கேட்டறிக! இது தளர்ச்சியின் பொழுது ஊற்றுநீர்போல் பெருகித் துணை நிற்கும் என்கிறார் திருவள்ளுவர். தயான்னே சில்லிங்கு(Dianne Schilling) முதலான கல்வியாளர்கள்…

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 47, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்  (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.) 47 செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின் ஆன்றாரோ டொப்பர் நிலத்து  (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கேள்வி, குறள் எண்: 413) செவி உணவாகிய கேள்வியறிவைப் பெறுபவர்கள் அவி உணவு கொள்ளும் ஆன்றோர்க்கு இணையாக மதிக்கப்படுவர் என்கிறார் திருவள்ளுவர். உணவு, பண்பை வரையறுக்கிறது என இவான் திமித்திரசெவிக்கு(Ivan Dimitrijevic) முதலான பல வலைத்தளங்களில்…

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 46, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.) 46 செவிக்குண வில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும்  (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கேள்வி, குறள் எண்: 412) செவிக்கு உணவாகிய கேள்வியறிவு இல்லாதபோது வயிற்றுக்கும் சிறிது உணவு அளிக்கப்படும் என்கிறார் திருவள்ளுவர். உணவு அளவு, உணவின் தன்மை ஆகியவற்றிற்கும் காம உணர்விற்கும் தொடர்பிருப்பதாகப் பாலியற் கல்வியாளர் முனைவர் மாரியன்…

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 45, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)  45 செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கேள்வி, குறள் எண்: 411) செல்வங்களுள் சிறப்புடையது செவிச்செல்வம். அது எல்லாச் செல்வங்களிலும் தலைமையானது என்கிறார் திருவள்ளுவர். கல்வியின் சிறப்பையும் கல்லாமையின் இழிவையும் கூறிய திருவள்ளுவர் அடுத்துக் கேள்வியை வைத்துள்ளார். கேள்வி என்றால் வினா என்று…

தேவரடியார் கலையே வாழ்வாக – அ.வெண்ணிலாவின் ஆய்வு நூல் குறித்த அரங்கம்

ஆத்மாநாம் அறக்கட்டளைஅகநி வெளியீடு இணைந்து நடத்தும்‘தேவரடியார் கலையேவாழ்வாக’ முனைவர் அ.வெண்ணிலாவின் ஆய்வுநூல் குறித்த விவாத அரங்கம்புரட்டாசி 04, 2050 சனி 21.09.2019 மாலை 5.30அண்ணா நூற்றாண்டு நூலகம் முதல் தளம், கோட்டூர்புரம் – கவிஞர் மு.முருகேசு  

நாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும்! : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்

  நாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும்! பனி படு சோலைப் பயன் மரம் எல்லாம் கனி உதிர்ந்து வீழ்ந்தற்று, இளமை; ‘நனி பெரிதும் வேல்-கண்ணள்!’ என்று இவளை வெஃகன்மின்; மற்று இவளும் கோல்-கண்ணள் ஆகும், குனிந்து பொருள்: இன்று கனிந்தும் குளிர்ந்தும் விளங்கும் இளமை பின்னர் நிலைமாறிக் கெடும். ஆதலின் அழியும் இளமையை விட அழியா நற்செயல்களில் கருத்து செலுத்துக. சொல் விளக்கம்: இளமை=இளமைப்பருவமானது; பனி=குளிர்ச்சி; படு= பொருந்திய; சோலை=சோலையில், பயன்= பலனைத்தரும்; மரம் எல்லாம்= எல்லா மரங்களிலும்;…

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)  44 விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனை யவர் (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கல்லாமை, குறள் எண்: 410) சிறந்த நூல்களைக் கற்றவர்களே மக்கள். கற்காத மற்றவர்கள் விலங்கிற்கு ஒப்பாவர் என்கிறார் திருவள்ளுவர். “கல்வி கற்காத மனிதர்கள் புதிய விலங்கிற்குச் சமமாவர்” என்று கூறிக் கல்வியை அரசறிவியலறிஞர்கள் வலியுறுத்துகின்றனர். அனையர்…