இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 8

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 7 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 3.பழந்தமிழ் தொடர்ச்சி             4.         அம் மொழியின் எழுத்து ஓவிய ஒலியெழுத்தாகும். ஓவியமாக நின்று உருவப்பொருளையும் ஒலியடையாளமாக நின்று அருவப் பொருளையும் அவ் வெழுத்து அறிவித்தது.             5.         எழுத்தடையாளங்கள் அசைகளை அறிவியாது முழுச் சொற்களையே அறிவித்தன.   உலக மொழிகள் அனைத்தும் முதலில் ஓவிய எழுத்துகளைக் கொண்டிருந்தன;பின்னர் அவற்றினின்றும் ஒலி எழுத்துகள் தோன்றின. ஆங்கில அ, ஆ என்பன ஓவிய எழுத்துகளிலிருந்து தோன்றியனவே. தமிழ் எழுத்துகளும் அவ்வாறு தோன்றியிருக்க வேண்டும்….

ஊரும் பேரும்: இரா.பி.சேது(ப்பிள்ளை):– 6

(ஊரும் பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 5 தொடர்ச்சி) ஊரும் பேரும் – 6 மருத நிலம்‌ தொடர்ச்சி பெரும்பாலும் தென்னாட்டில் உள்ள நதிகள் மலைகளிலே பிறக்கும். அவ்வாறு பிறவாமல் சமவெளியாம் முல்லை நிலத்தில்தன்னூற்றாகப் பொங்கி எழுந்து, கயமாகப் பெருகிச் சிறு ஆறாக ஓடும் சிறப்பினைக் கண்டு, அதற்குக் கயத்தாறு என்று முன்னையோர் பெயரிட்டார்கள். இந் நாளில் அப்பெயர் ஆற்றின் பெயராக வழங்காவிடினும் அவ்வாற்றங் கரையிலுள்ள கயத்தாறு என்ற ஊரின் பெயராகக் காணப்படுகின்றது.60      ஆற்றின் அருகே யமைந்த ஊர் ஆற்றூர் எனப்படும். தமிழ்…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 70

(குறிஞ்சி மலர் 69 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்அத்தியாயம் 25 தொடர்ச்சி “ஒரு நாள் ஓரூரில் சாயங்காலச் சந்தையொன்று கூடியது. சில செம்படவப் பெண்கள் தாம் கொண்டு வந்த மீனை அங்கு விற்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பிப் போய்க் கொண்டிருந்தனர். முன்னிருட்டு வந்துவிட்டது. மழையோ பாட்டம் பாட்டமாகப் பெய்யத் தொடங்கியது. பாவம்! அவர்கள் என்ன செய்வார்கள்? பக்கத்தில் ஒரு பூக்கடைக்காரனுடைய குடிசை இருப்பதைப் பார்த்து அங்கு ஓடினர். அந்தப் பூக்கடைக்காரன் மிகவும் நல்லவன். “அவன் அங்கு வந்த அப்பெண்களின் பரிதாபகரமான நிலைமையைக் கண்டு தனது குடிசையின் ஒரு பகுதியை அவர்கள்…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.7.1-1.7.5.

(இராவண காவியம்: 1.6.41- 1.6.43 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 7. கடல்கோட் படலம்         1.      இங்ஙனம் பல்சிறப் பியைந்து பல்வள                முங்கியே செந்தமிழ் மொழியை யோம்பியே                தங்களுக் கரசர்கள் தாங்க ளாகவே                மங்கலம் பொருந்திட வாழ்ந்து வந்தனர்.         2.      இவ்வகை வாழ்கையி லினிது போற்றிடும்                செவ்வியர் பொருளினைத் தீயர் நன்றென                வவ்வுத லுலகியல் வழக்கம் போலவே                கவ்வைநீர் வேலையுங் கருத்துட் கொண்டதால்.         3.     அல்லது வழியிற்கேட் பாரற்…

தமிழ்க்காப்புக்கழகம்: ஆளுமையர் உரை 16,17 & 18: இணைய அரங்கம்

புரட்டாசி 01, 2053 ஞாயிறு , 18.09.2022, காலை 10.00 கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாந் துணை.   (திருவள்ளுவர், திருக்குறள் – 414) தமிழ்க்காப்புக்கழகம் ஆளுமையர் உரை 16,17 &18 : இணைய அரங்கம் “தமிழும் நானும்” உரையாளர்கள்: 3.) பேரா.முனைவர் ந.தெய்வசுந்தரம் கணிணி மொழியியல் ஆய்வர் 1.) முனைவர் தமிழ்ப்பரிதி மாரி திட்ட முதன்மையர், தமிழ்ப்பேழை 2.) நிரலர் நீச்சல்காரன் இராசாராமன் வாணி பிழை திருத்தி உருவாக்குநர் கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ;…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 7

(உ.வே.சா.வின் என் சரித்திரம், 6 இன் தொடர்ச்சி) அத்தியாயம் 4 சில பெரியோர்கள் ஐயாக்குட்டி ஐயர் என் சிறிய பாட்டனாராகிய ஐயாக்குட்டி ஐயர் முதலில் நன்றாக வேதாத்தியயனம் செய்தார்; பிறகு வடமொழியில் காவிய நாடகங்களைக் கற்றார்; இராமாயணம், பாரதம், பாகவதம், ஆலாசிய மாகாத்துமியம் முதலியவற்றைப் படித்து உபந்நியாசம் செய்யும் திறமை அவர்பால் இருந்தது; வைத்தியம், சோதிடம், மந்திரம், யோகம் இவற்றிலும் அவருக்கு நல்ல பயிற்சி உண்டு, சங்கீதமும் வரும்; மலையாளத்தில் இருந்த ஒரு பெரியாரிடம் மந்திர உபதேசம் செய்துகொண்டார். ஒருவர் பின் ஒருவராக மூன்று…

தமிழ்நாடும் மொழியும் 5 – பேரா.அ.திருமலைமுத்துசாமி

(தமிழ்நாடும் மொழியும் 4 தொடர்ச்சி) தமிழ்நாடும் மொழியும் புதிய கற்காலம் தொடர்ச்சி பழைய கற்கால மனிதன் நாடோடியாக அலைந்தான். ஆனால் காலப்போக்கில் ஆடு, மாடு, கோழி ஆகியவற்றை வளர்க்கக் கற்றுக் கொண்டான். மேலும் கூட்டம் கூட்டமாகவும் வாழ்ந்தான். நிலத்தைப் பயன்படுத்தவும் கற்றுக் கொண்டான். எனவே ஓரளவு நிலைத்த வாழ்க்கையே புதிய கற்காலத்துக்கு அடிப்படையாகும். பழைய கற்கால மனிதன் குகைகளில் வாழ்ந்தான். புதிய கற்கால மனிதனோ புல்லும் ஓலையும் கொண்டு வேய்ந்த குடிசைகளிலே வாழ்ந்தான். நாற்புறமும் சுவர் எழுப்பி மேலே கூரை வேய்ந்து பானையைக் கவிழ்த்த குடிசைகள்…

3. தனித்தமிழ் இயக்கங் கண்ட அடிகளார்  2/3

(தனித்தமிழ் இயக்கங் கண்ட அடிகளார் 1/3 – சி. பா. தொடர்ச்சி) 3. தனித்தமிழ் இயக்கங் கண்ட அடிகளார் 2/3 27-6-1898இல் அடிகளாருக்குக் கொடிய நோய் ஒன்று, கண்டது. அதனைத் தீர்க்குமாறு திருவொற்றியூர் முருகனை அடிகள் வேண்டிக் கொண்டார். நோய் நீங்கியபின் முருகனை நினைத்து “திருவொற்றி முருகர் மும்மணிக் கோவை” என்னும் அருள்நூலைப் பாடினார். சங்கப் பனுவல்களின் கருத்தும், நடையும் பொலிந்து விளங்கும் சிறந்த நூல் இது. தமக்குச் சைவ சித்தாந்த நூல்களை விளக்கிப் பாடம் சொன்ன சோமசுந்தர நாயகர் (22-2-1901) இயற்கை யெய்திய…

வ.உ.சி.பிறந்தநாள், இலக்குவனார் நினைவு நாள், மாநிலக் கல்லூரி

சென்னை மாநிலக்கல்லூரித் தமிழ்த்துறையினர் மூன்றாம் வாரக் கருத்தரங்கமாகத் தமிழறிஞர் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. அவர்கள் பிறந்த நாளையும் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவு நாளையும் இணைத்து அன்று தம் கல்லூரியில் நடத்தினர்.பேராசிரியர் முனைவர் ப.தாமரைக்கண்ணன் தலைமையுரை யாற்றினார்.மாணவர் செல்வி ம.காவேரி வரவேற்புரையாற்றினார். மாணவர் செல்வி வ.சுதாமணி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.துறைத்தலைவர் பேராசிரியர் முனைவர் கி.ஆதிநாராயணன் தொடக்கவுரை யாற்றினார்.மாணவர் செல்வி கோ.கோமதி, விடுதலைப்போராளி வ.உ.சி. குறித்துச் சிறப்புரையாற்றினார்.இலக்குவனார் திருவள்ளுவன், தமிழ்ப்போராளி பேரா.முனைவர் சி.இலக்குவனார் குறித்துச் சிறப்புரை யாற்றினார். மாணவர் செல்வன் ஆரணி பாரதி நன்றி நவின்றார்….

புரட்சி விதைகளை விதைத்தாரே இலக்குவனார்

புரட்சி விதைகளை விதைத்தாரே! தத்தனா தானனத் …… தனதான                              தத்தனா தானனத் …… தனதான ……… பாடல் ……… வற்றிடா நீர்வளச் சிறப்போடு உற்றசீர் வாய்மேடு–தலம்வாழ்ந்த சிங்கார வேலர் இரத்தினத்தாச்சி செய்தவப் பயனென உதித்தாரே ஒப்பிலாப் போர்க்குண மறத்தோடு முத்தமிழ் காத்திடப் பிறந்தாரே வளைந்திடாத்  துணிவுக்கு உருவாக வையகம் போற்றிய இலக்குவரே! தத்தன தனதன தத்தன தனதன                              தத்தன தனதன …… தனதான முற்றிய  புலவரின்  உற்றநல்  துணையொடு நற்றமி   ழறிவினை –உளமாரப் பெற்றபின்   இளையவர்  கற்றிடும் வகையினில்…