செஞ்சீனா சென்றுவந்தேன் 20 – பொறி.க.அருணபாரதி

       (ஐப்பசி 6, 2045 / நவ.2, 2014 தொடர்ச்சி) 20. சீன மக்களைக் கொல்லும் உலகமய நுகர்வியம்     நுகர்விய வெறிப் பண்பாடு செழித்தோங்கும் வட அமெரிக்காவில் அவ்வப்போது பள்ளிகளில் துப்பாக்கிச் சூடு நிகழ்வுகள் நடைபெறுவதை நாம் கண்டும் கேட்டும் வருகிறோம். கைப்பேசி – காணாட்டம்(வீடியோ கேம்) முதலான பல மின்னணுக் கருவிகளிலும், வன்முறை நிறைந்த விளையாட்டுகளைப் பழகும் வடஅமரிக்க இளையோர், சமூகத்தில் அதனைப் பயன்படுத்திப் பார்க்க விழையும் போது, அது பள்ளிகளிலும், பொது இடங்களிலும் நடைபெறும் துப்பாக்கிச்…

மிளிரின் இராசம் கிருட்டிணன் நினைவஞ்சலி

அகநாழிகை, சென்னை  ஐப்பசி 29, 2045 / நவ.15,2014 மிளிர் இலக்கிய அமைப்பு நடத்தும்  எழுத்தாளர் இராசம் கிருட்டிணன் நினைவஞ்சலிக் கூட்டம் வரவேற்புரை: நாச்சியாள் முன்னிலை: திரு. செயகுமார் நினைவுகூர்வோர் : எழுத்தாளர் திருப்பூர் கிருட்டிணன் எழுத்தாளர்  சோடி குரூசு பேரா. பாரதி சந்துரு நன்றியுரை: கவிஞர். பரமேசுவரி இடம்: அகநாழிகை புத்தக உலகம் நேரம்:   ஐப்பசி 29, 2045 15-11-2014 மாலை 5.30 மணி

இசுலாமிய இளைஞர்கள் இந்துச்சிறுமிக்கு மருத்துவ உதவி

இசுலாமிய இளைஞர்கள் இந்துச்சிறுமிக்கு மருத்துவ உதவி பரமக்குடியில் கண் குறைபாடு கொண்ட இந்து சமயத்தைச் சார்ந்த சிறுமியின் மருத்துவத்திற்குக் கீழப்பள்ளிவாசல் இசுலாமிய இளைஞர்கள் நிதியுதவி திரட்டி வழங்கினர். இன்று மாலை கீழப்பள்ளிவாசலில் இந்நிகழ்வு நடைபெற்றது. கீழப்பள்ளிவாசல் தலைவர் எசு.என்.எம். முகம்மது யாக்கூப், எமனேசுவரம் காவல் நிலையத் துணை ஆய்வாளர், ஆசிரியர் எம்.பெரோசுகான், ஆசிரியர் க.இதாயத்துல்லா, அசுலம், சியாவுல் ஆகியோர் கலந்து கொண்டனர். காவல்துறை துணை ஆய்வாளர் நிதியுதவியை வழங்கினார். சமயச் சார்பற்ற உண்மையான உதவியை அனைவரும் பாராட்டினர். தரவு : முதுவை இதாயத்து

வைகை அணையில் தண்ணீர் திருடும் கும்பல்

(வைகை அணையை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள கிணறு)     பொதுப்பணித்துறையினர் உடந்தையுடன் வைகை அணையில் தண்ணீர் திருடும் மருமக்கும்பல்   வைகை அணையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடந்தையுடன் ஆழ்துளைக்கிணறுகள் அமைத்துத் தண்ணீர் எடுப்பதால் வைகை அணையில் நீர்மட்டம் மளமளவெனச் சரியத் தொடங்குகிறது.   முதலக்கம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட வைகைஅணையின் கரையில் பெரிய தொழிற்சாலைகள் வைத்திருப்பவர்கள் அணையின் கரையை ஒட்டி நிலங்களை வாங்கி அதனை வேளாண்மைக்குப் பயன்படுத்துகிறோம் என்று பெயரளவில் வாங்கிச் சீமை இலுப்பை (sapota / sapodilla), எலுமிச்சை போன்றவற்றைப் பயிரிடுகின்றனர்.   இவ்வாறு அமைக்கப்படும்…

பறவைகளின் சரணாலயமாக மாறிவரும் தேனி மாவட்டம்

  தேவதானப்பட்டி பகுதி சிறுவேடந்தாங்கலாக அக்டோபர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை காட்சியளிக்கும். காரணம் இப்பகுதியில் வைகை ஆறு, மஞ்சள் ஆறு, சோத்துப்பாறை ஆறு, கும்பக்கரை அருவி, எலிவால் அருவி எனப் பல அருவிகளும் மத்துவார்குளம் கண்மாய், வீரன் கண்மாய், குள்ளப்புரம் கண்மாய், செங்குளத்துப்பட்டி கண்மாய், சில்வார்பட்டி கண்மாய் என ஏராளமான கண்மாய்களும் குளங்களும் அதிக அளவில் உள்ளன. இப்பகுதியில் மழை பொழிந்தால் நீர் நிறைந்து காணப்படும். இதனால் கொக்கு, காடை, நாரை, கூழக்கிடாய், வெளிநாட்டுப்பறவைகள் முதலியன இனப்பெருக்கத்திற்குக் கண்டம் விட்டு கண்டம்…

கொடைக்கானல் செல்லும் சாலை மூடப்பட்டதால் வெறிச்சோடிய உணவகங்கள்

    தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள டம்டம்பாறை அருகே ஏறத்தாழ 16க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.    இப்பகுதியில் இதுவரை 110க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் ஏற்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் இப்பொழுது ஏற்பட்டுள்ள நிலச்சரிவு கொடைக்கானல் செல்லும் பாதையை நிலைகுலைய வைத்தது. இந்நிலையில் கொடைக்கானல் செல்பவர்கள் தாண்டிக்குடி, பழனி வழியாகக் கொடைக்கானல் சென்றனர். இப்போது இருசக்கர, சிறிய வகை ஊர்திகள் மட்டுமே பயன்பாட்டிற்காகத் திறந்துவிடப்பட்டுள்ளன.    இந்நிலையில் மலைப்பகுதியில் தொடர்ச்சியாகத் தொடர்ந்து மழை பொழிவதால் சுற்றுலாப் பயணிகள் இப்பகுதியில்…

இலக்கு நவம்பர் நம்பிக்கைத் தொடர்

அறிவுநிதி விருது வழங்கல் சிறப்புரை சுப.வீரபாண்டியன் வணக்கம்.. நலம் – வளம் சூழ வேண்டுகிறோம்.. தங்கள் இல்லத்து இளைய தலைமுறையோடும், உறவு, நட்போடும் நிகழ்வுக்கு வருகை தர வேண்டுகிறோம்.. தொடரும் தங்கள் நல் ஆதரவுக்கு நன்றி.. வாசுகி பத்ரிநாராயணன்

பகுத்தறிவு சூடி – அரிஅரவேலன்

யாரால் எங்கே எப்பொழுது என்ன எப்படி யாருக்கு ஏன்என வினவிப் பகுத்து விளைவை அறிந்து வாழ ஊக்கும் வகையில் வகுத்த பாவே பகுத்தறிவு சூடி என்னும்இந் நூலே   01 அறிவியலுணர்வு கொள் 02 ஆருடம் பொய் 03 இழிதொழில் ஏது? 04 ஈட்டுக அறிவு 05 உன்னை அறி 06 ஊர்நலம் பேண் 07 எளிமையே மேல் 08 ஏனெனக் கேள் 09 ஒழுக்கம் உயர்வு 10 ஓம்புக மானுடம் 11 கடவுள் இல்லை 12 காலம் கருது 13 கிலியைக் கொல் 14 கீழ்மை அறு 15 குலம்பல எதற்கு 16 கூடி வாழ் 17 கெடுமதி விடு 18 கேண்மை போற்று 19 கொடுமை எதிர் 20 கோலம்…

மருந்துகளைத் தெளித்து மீன்களைப் பிடிக்கும் மருமக் கும்பல்-நோய்கள் பரவும் பேரிடர்

  தேனிப் பகுதியில் மருந்துகள் தெளித்து மயக்கமடையச் செய்த மீன்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதனால், உடலுக்குக் கேடு விளையும் கண்டம் உள்ளது.  தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, குள்ளப்புரம், முதலக்கம்பட்டி பகுதிகளில் ஆறுகளில் உள்ள பாறைகள், பாறைகளின் இடுக்குகள், ஆறு, கண்மாய், ஓடைகளில் உள்ள சந்து பொந்துகளில் குரவை மீன்களும் வேறு சில வகை மீன்களும் வாழுகின்றன. இவ்வகை மீன்களை வலைவீசியோ தூண்டில் போட்டோ பிடிக்க முடியாது. இவ்வகை மீன்கள் விலையும் அதிகம்.  இதனால் இவ்வகை மீன்கள் வாழும் இடத்தைக் கண்டறிந்து மீன்கள்…

நற்றமிழாலே உயர்வோம்! – யாழ்ப்பாவாணன்

நாம் பாடுவோம் தமிழைப் பாடுவோம் நாம் தேடுவோம் நற்றமிழைத் தேடுவோம் நாளை நம்மக்கள் தூயதமிழைப் பேணவே! நாம் படிப்போம் தமிழைப் படிப்போம் நாம் எழுதுவோம் நற்றமிழில் எழுதுவோம் நாளை நம்மக்கள் தூயதமிழை வெளிப்படுத்தவே! நாம் கேட்போம் தமிழைக் கேட்போம் நாம் சொல்லுவோம் நற்றமிழில் சொல்லுவோம் நாளை நம்மக்கள் தூயதமிழை வாழவைக்கவே! நாம் ஆடுவோம் தமிழைப்பாடி ஆடுவோம் நாம் பாடுவோம் நற்றமிழில் பாடுவோம் நாளை நம்மக்கள் தூயதமிழுக்கு உயிரூட்டவே! நாம் நிமிர்வோம் தமிழாலே நிமிர்வோம் நாம் உயர்வோம் நற்றமிழாலே உயர்வோம் நாளை நம்முலகம் தூயதமிழைப் பேசும்வேளை!…