தோழர் தியாகு எழுதுகிறார் : ஈழத் தமிழர் முதுகில் குத்தும் இந்திய வல்லரசு!
(தோழர் தியாகு எழுதுகிறார் : நினைவுச்சுடர் வழிகாட்டும் ஒளிவிளக்கம்!- தொடர்ச்சி) இனக் கொலைக் குற்றவாளிக்கு இனிய வரவேற்பு:ஈழத் தமிழர் முதுகில் குத்தும் இந்திய வல்லரசு! ‘மாவீரர்நாள் உரை’ நிகழ்த்த அரிதாரம் பூசி வந்த பொய்த் துவாரகைக்குக் கட்டியம் பாடிய காசி ஆனந்தனார் பேசிய வசனத்தை மறந்திருக்க மாட்டீர்கள்: “இந்திய அரசின் துணையோடு துவாரகை அரசியலில் களமாடப் போகிறார்.” ‘துவாரகை’ நாடகத்தில் விரைவாகவே திரை விழுந்து விட்டதால் சூத்திரதாரிகள் இப்போது பிரகடனக் காய்களை உருட்டத் தொடங்கியுள்ளார்கள். முதலாவதாக ‘நான்கு தூண் கொள்கை’ப் புகழ் சிடிஎஃப் சுரேன்…
ஒன்றிய அரசு செய்ய வேண்டுவன – இலக்குவனார் திருவள்ளுவன் காணுரை
முற்றம் இணையத் தொலைக்காட்சி தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன் விசவனூர் வே. தளபதி, ஆசிரியர் – முற்றம் திங்களிதழ் ஒன்றிய அரசு செய்ய வேண்டுவன பகுதி1 ஒன்றிய அரசு செய்ய வேண்டுவன பகுதி2
தோழர் தியாகு எழுதுகிறார் : நினைவுச்சுடர் வழிகாட்டும் ஒளிவிளக்கம்!
(தோழர் தியாகு எழுதுகிறார் : ஈழம் – . . . . பகைத்தது இந்தியாவா? . . . . ஈழமா? – தொடர்ச்சி) தமிழீழ மாவீரர் நினைவுச்சுடர்:வருங்காலத்துக்கு வழிகாட்டும் ஒளிவிளக்கம்! தமிழீழ விடுதலைக்காக இன்னுயிர் தந்து, தமிழீழத் தாயகத்தில் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் மட்டுமல்ல, புலம்பெயர் தமிழுலகிலும் தமிழ் மக்களின் நினைவில் நிலைத்து விட்ட பல்லாயிரம் மாவீரர்களுக்குச் செவ்வணக்கம்! அயல் ஆதிக்கத்திலிருந்து விடுபடுவதற்காகப் போராடித் தமிழீழ மாவீரர்கள் அடைந்த போர்க்கள வெற்றிகளின் அடித்தளம் சமூக விடுதலைக்கான போராட்டத்தில் அவர்கள் காட்டிய தெளிந்த உறுதியே…
தோழர் தியாகு எழுதுகிறார் : ஈழத்தைப் பகைத்தது இந்தியாவா?இந்தியாவைப் பகைத்தது ஈழமா?
(தோழர் தியாகு எழுதுகிறார் : கைச்சரக்கா மார்க்குசியம்?-தொடர்ச்சி) ஈழத்தைப் பகைத்தது இந்தியாவா? இந்தியாவைப் பகைத்தது ஈழமா? தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்தில் நம்பிக்கை கொள்ளாமல், இந்திய அரசை நத்தி ஏதாவது தீர்வு பெற்றுக் கொள்வது என்ற கோழைத்தனமான அணுகுமுறையைத் தமிழ் மக்களின் சார்பிலேயே சிலர் முன்மொழிந்து வரக் காண்கிறோம். அடிப்படையில் இந்திய வல்லரசுதான் ஈழத் தமிழர்களைப் பகைத்துக் கொண்டது என்ற உண்மையைத் தலைகீழாகக் கவிழ்த்துப் போட்டு தமிழீழ மக்கள் மீதும் புலிகள் மீதும் இவர்கள் சுற்றடியாகப் பழி போடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இப்போதைக்கு ஈழத்…
ஈழவேந்தன் அவர்கட்கு வீரவணக்கம்!
ஈக வேந்தனாக வாழ்ந்த ஈழவேந்தன் அவர்கட்கு வீரவணக்கம்! தமிழீழச் சான்றோர், தமிழீழ விடுதலைச் செம்மல் ஐயா ஈழவேந்தன் இயற்கை எய்தினார் என்ற செய்தி நெஞ்சத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தியது. தொண்ணூற்றொரு அகவையில் விடைபெற்றார் என்றாலும், மனம் துயரம் கொள்கிறது. கனடா நேரப்படி 28.04.2024 ஞாயிற்றுக்கிழமை இரவு காலமாகியுள்ளார். சில நாட்களுக்கு முன் குளியலறையில் தவறி விழுந்து, தலையில் அடிபட்டதால் ஏற்பட்ட பாதிப்பே இறப்புக்குக் காரணம் என்கிறார்கள். தமிழர்களுக்காக, தமிழீழ விடுதலைக்காக தம் வாழ்நாளை ஒப்படைத்துக் கொண்ட ஈழவேந்தனுடன், தமிழ்நாட்டில் பழகி, நட்பு கொள்ளக் கிடைத்த வாய்ப்புகள்…
தோழர் தியாகு எழுதுகிறார் : தமிழீழம் – இந்தியா – தமிழ்நாடு, திலீபன் நினைவுப் பேருரை 3
(தோழர் தியாகு எழுதுகிறார் : தமிழீழம் – இந்தியா – தமிழ்நாடு, திலீபன் நினைவுப் பேருரை 2 – தொடர்ச்சி) திலீபன் நினைவுப் பேருரை 3/3 : தமிழீழம் – இந்தியா – தமிழ்நாடு இந்த அறிவிப்பில் நேர்மை இருக்குமானால், இந்திய நாடாளுமன்றத்தில் இதற்கான தீர்மானம் கொண்டுவர வேண்டும். இலங்கையில் நடந்திருப்பது இனவழிப்பு. அதற்காக இராணுவ வகையிலும் அரசியல் வகையிலும் குற்றம் புரிந்தவவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் அவர்களைக் கொண்டுபோய் நிறுத்த வேண்டும் என்று கடந்த காலத்தில் ஐ.நா. மனித உரிமைப்…
தோழர் தியாகு எழுதுகிறார் : தமிழீழம் – இந்தியா – தமிழ்நாடு, திலீபன் நினைவுப் பேருரை 2
(தோழர் தியாகு எழுதுகிறார் : தமிழீழம் – இந்தியா – தமிழ்நாடு, திலீபன் நினைவுப் பேருரை 1-தொடர்ச்சி) திலீபன் நினைவுப் பேருரை 2/3 : தமிழீழம் – இந்தியா – தமிழ்நாடு எல்லைப் பாதுகாப்பு என்பதைப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம். எத்தனையோ வகையில் தீர்த்துக் கொள்ளமுடியும். இந்தியாவுக்கும் சீனாவுக்கும், இந்தியாவுக்கும் பாக்கித்தானுக்கும் இடையில் மட்டும்தான் எல்லைச் சிக்கல் இருக்கிறதா? தமிழ்நாட்டிற்கும் கேரளாவிற்கும எல்லைச் சிக்கல் இல்லையா? மராட்டியத்துக்கும் கருநாடகத்திற்கும் இல்லையா? இந்திய வடகிழக்கின் ஏழு சகோதரிகள் என்னும் ஏழு மாகாணங்களுக்கு இடையே இல்லையா? பாதுகாப்பு…
இணையவழியில் ஆளுமையர் உரையும் என்னூல் திறனரங்கமும் – 17.12.2023 காலை
தமிழே விழி! தமிழா விழி! கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாந் துணை. (திருவள்ளுவர், திருக்குறள் 414) தமிழ்க்காப்புக்கழகம் ஆளுமையர் உரை 79 & 80 : இணைய அரங்கம் மார்கழி 01, 2054 / 17.12.2023 முற்பகல் 10.00 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் தொடர்ந்து முற்பகல் 11.00 | என்னூல் திறனரங்கம் 4 இலக்குவனார் திருவள்ளுவனின் முந்நூல் குறித்த இணையவழித்…
தோழர் தியாகு எழுதுகிறார் : தமிழீழம் – இந்தியா – தமிழ்நாடு, திலீபன் நினைவுப் பேருரை 1.
(தோழர் தியாகு எழுதுகிறார் : கல்வியுரிமைக் கோரிக்கை விளக்கம் – தொடர்ச்சி) திலீபன் நினைவுப் பேருரை: தமிழீழம் – இந்தியா – தமிழ்நாடு கடல் கடந்து போனாலும் தமிழ் கடந்து போகாமல் தமிழ் மொழி, இன, தேச, உணர்வோடு வாழ்ந்து வரும் உலகத் தமிழர்களுக்கு நான் சார்ந்த தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் சார்பில் முதலிலே வணக்கத்தை உரித்தாக்கிக் கொள்கிறேன். ஈகத்தின் இன்னொரு பெயர் திலீபன். என்றும் நினைவில் நிலைத்திருக்கும் திலீபனை நினைவுகூர்ந்து, தமிழீழ விடுதலைப் போரில் தம்மை ஆகுதி ஆக்கிக்கொண்ட பல்லாயிரம் மாவீரர்களையும்…
ஆளுமையர் உரை76,77 & 78 : இணைய அரங்கம்-03.12.2023
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல். (குறள் ௨௱ – 200) தமிழே விழி! தமிழா விழி! தமிழ்க்காப்புக்கழகம் ஆளுமையர் உரை 76,77 & 78 : இணைய அரங்கம் கார்த்திகை 17, 2054 ஞாயிறு 03.12.2023 காலை 10.00 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன் “தமிழும் நானும்” – உரையாளர்கள்…
தோழர் தியாகு எழுதுகிறார் : அமித்துசா வாயால் இனவழிப்பு பேசப்பட்டதா?
(தோழர் தியாகு எழுதுகிறார் : “பொதுக் குடியியல் சட்டம்” – புரட்டும் புரளியும் (2) – தொடர்ச்சி) இனிய அன்பர்களே! அமித்துசா வாயால் இனவழிப்பு பேசப்பட்டதா? வெள்ளத்தில் மூழ்கிக் கொண்டிருப்பவனுக்கு ஒரு துரும்பு கிடைத்தால் கூட தெப்பமாகத் தெரியும். அந்தத் துரும்பைப் பிடித்துக் கொண்டு கரையேறி விட முடியாதா என்றுதான் நினைப்பான். இனவழிப்பு முள்ளிவாய்க்காலில் உச்சம் கண்டு ஆண்டுகள் பதினான்கு ஆன பிறகும் நீதியின் ஒளிக்கதிர் கண்ணுக்கு எட்டாத அவலநிலையில் இருக்கும் தமிழீழ மக்களுக்கு யாராவது தமிழினவழிப்பு என்று பேசி விட்டாலே மனம் நிறைந்து…
தோழர் தியாகு எழுதுகிறார் 249 : தமிழ்நாட்டில் ஏதிலியர் நெருக்கடி
(தோழர் தியாகு எழுதுகிறார் 248 : உயிரற்ற உடலும் உண்மைக்குப் போராடும் – தொடர்ச்சி) இனிய அன்பர்களே! தாழி (277) மடலில் வெளியிட்ட UPR IN TAMILNADU – THE REFUGEE CRISIS IN TAMILNADU அறிக்கையின் தமிழாக்கம் இதோ – தமிழ்நாட்டில் உலகளாவிய காலவட்ட மீளாய்வு – தமிழ்நாட்டில் ஏதிலியர் நெருக்கடி 1. தமிழ்நாடு ஓர் இந்திய மாநிலம். தமிழ்நாட்டின் ஏதிலியர் நெருக்கடி என்பது இந்தியாவின் எதிலியர் நெருக்கடியில் ஒரு பகுதியாகும். ஆனால் இந்தியாவின் ஏதிலி நிலவரையில் தமிழ்நாட்டுக்குரிய தனியிடத்தை மறுப்பதற்கில்லை. 2. தமிழ்நாடு அரசு இலங்கைத் தமிழ் அகதிகள் பற்றி 01. 06. 2021இல் …