புருவங்களை முறுக்கு! – மும்பையில் ஆதிரை முழக்கம்

தமிழ்வாழ்த்து எல்லையை இழந்தாய் வாழ்ந்த இருப்பிடம் நீ தொலைத்தாய் – இன்று முல்லையும் இழந்தாய் எங்கள் முத்தமிழ்த் தாயே என்றும் தொல்லையில் கிடந்தும் வீரத் தோள்தனைத் தூக்கி நின்றாய் இல்லையே சங்கக் காலம் ஏங்கினேன் தமிழே வணக்கம். அவை வணக்கம் கொங்கன் கடற்கரையின் செல்வமிகு நங்கை பாற்கடலில் கால்பிடிக்கும் இலக்குமியின் தங்கை பாலிவுட்டின் படச்சுருளில் பளபளக்கும் அம்பை இந்திய நகரங்களில் இவள் பூலோக ரம்பை தமிழை வளர்ப்பதில் இவள் இன்னொரு கங்கை பொன்னகராம் புதுநகராம் வருவாய் எல்லாம் குவிக்கின்ற வளநகராம் மின்னரகராம் தொழில்கள் கலைகள்…

தனக்குவமை இல்லாத் தமிழ்! – சந்தர் சுப்ரமணியன்

தொன்மத்தில் சொல்வளத்தில் தூய்வடிவில் மாறுகின்ற இன்றைக்கும் ஏற்ற எழில்நடையில் – நின்று தினம்வளரும் நேர்இல் திறமிவற்றில் என்றும் தனக்குவமை இல்லாத் தமிழ்! நாவில் நடைபழகி நர்த்தனங்கள் ஆடியொலி மேவி மொழியாக மெலெழும்பும் – பூவில் அனைத்துக்கும் முந்தோன்றி ஆளு(ம்)மொழி கட்குள் தனக்குவமை இல்லாத் தமிழ்! ஓசை வகைவிளம்பி உட்புணர்வுக்(கு) ஓர்முறையைப் பேசுமொழி ஒன்றேகாண் பூவுலகில் – தேசோ(டு) இனிக்கும் இயல்வடிவில் ஏழிசையின் ஈர்ப்பில் தனக்குவமை இல்லாத் தமிழ்! முன்னைக்கு முன்னை முதுமகளோ! இல்லையிவள் பின்னை வருமொழிகொள் பேரெழிலோ! – என்னே! அனைத்து மொழிகட்குள் அன்றின்றென்…

எங்கள் குலத் தெய்வம் தமிழ்

எங்கள் குலத் தெய்வம் தமிழ் பங்கயத்துக் குமரிமுனைப் பாதம் சேர்த்தாள் பசும்பொன்முடி வேங்கடத்தைப் புனைந்தாங்கார்த்தாள் பொங்கிவரும் காவிரியை இடையில் கோத்தாள் புரமூன்றும் கடற்கன்னி பணியப் பார்த்தாள் மங்கலம் சேர் மேலைமலைச் செங்கோ லுற்றாள் எங்கள் குலத் தெய்வம் தாய் – கவியோகி ச.து.சுத்தானந்த பாரதியார்: தமிழ்க்குமரி

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 15– ஆ.வெ.முல்லை நிலவழகன்

[முன்தொடர்ச்சி] காட்சி – 15 அங்கம்    :     அருண் மொழி, பூங்குயில் இடம்      :     அருண்மொழி இல்லம் நிலைமை  :     (கூடலுக்காக முற்றம் வந்தும் கூடிட அவளோ இல்லாததாலே ஊடல் அருணை வாட்டிடச் செய்ய! தேடியே குயிலை அலைகின்றான் தன்னுரையாக மனத்தில் எழுந்த எண்ணத்தை இங்கே உரைக்கின்றான்!) அருண்    :      வெள்ளி நிலா முற்றத்திலே பள்ளி கொள்ளவந்தால் நான்! கள்ளியவள் மறைந்தெங்கோ! தள்ளியயன்னைச் சென்றாளோ! மையிருட்டே! உன்னையவள்! பொய்யிருட்டாய் ஆக்கிடுவாள்! கைசுருட்டி ஓடி விடு! மெய்யுருட்டிச் சொல்லுகிறேன்! படுத்துறங்கும் வேளையிலே உடுத்தியவள் வருவாளோ? பால்பொழிய…

நல்லுணர்வாளர் இணைப்பு – சுமதிசுடர்

  வல்லுணர்ச்சி கொண்டசிலர் இணைந்து கொண்டு    வழிநடத்த உருவாகும் கேட்டை நீக்க, நல்லுணர்வு கொண்டோர்க்குள் இணைப்பு வேண்டும்;    நாள்தோறும் உளம்பகிர்ந்து நெருங்க வேண்டும்; நல்லுணர்ந்தோர் கண்டதெல்லாம் நன்மை நல்கும்;    நட்புடனே உறவுமுறை போற்றி வாழ்வோம்; மெல்லுணர்வு கொண்டோரும் வாழ வேண்டும்;    மேன்மையான வாழ்வுகாண இணைந்து நிற்போம்.   அன்புடன்  சுமதிசுடர்

என்னடா தமிழா !- ஈரோடு இறைவன்

என்னடா தமிழா ! மூளை ஆங்கிலத்தில் கிடக்குது ! நாக்கு ஆங்கிலத்தில் கிடக்குது ! உன் எழுத்து ஆங்கிலத்தில் கிடக்குது ! என்னடா தமிழா உன் தமிழ் எங்கே கிடக்குது ! – ஈரோடு இறைவன்

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 13– ஆ.வெ.முல்லை நிலவழகன்

(மாசி 10, 2046 / பிப்பிரவரி 22, 2045 தொடர்ச்சி) காட்சி – 13 அங்கம்    :     ஆண் சிட்டு, பெண் சிட்டு இடம்      :     மரக்கிளை நிலைமை  :     (நாடகக் கூட்டத்தின் சலசலப்பைப் பேடுக்குவிளக்குது ஆண்சிட்டு!) ஆண் :     அழகிய பேடே! பார்த்தாயா? அன்பு மனைவியின் பணிவிடையை! பெண் :     விழிகளைத் திறந்தே பார்த்திட்டேன்! பார்க்க அழகே! எனச்சொல்வேன்! (என்றே மேடையை நோக்கிய பின்) அதோ! அதென்ன ஒரு கும்பல்! நின்றே கூட்டத்தின் நடுவினிலே உரக்கக் கத்திப் பேசுவதேன்? ஆண் :     பேடை…

உயிராய்த் தெரிவது என்றன் தமிழ்மொழி மட்டும்தான்

அழகாய் எனக்குத் தெரிவது உலகில் ஔவை மட்டும் தான் நிழலாய் எனக்குத் தெரிவது காதல் நினைவுகள் மட்டும்தான். புயலாய் எனக்குத் தெரிவது பாரதி பாடிய வரிகள்தான் உயர்வாய் எனக்குத் தெரிவது தாயின் அன்பு மட்டும்தான். கனவாய் எனக்குத் தெரிவது வான எல்லையைத் தொடுவதுதான் தினமும் உழைப்பது தெரிகிற வானை வசப்பட வைப்பதுதான். சிறப்பாய் எனக்குத் தெரிவது மண்ணில் மனிதனாய் வாழ்வதுதான் பிறப்பாய் எனக்குத் தெரிவது புகழைப் பெறுகிற நாளில்தான். உயிராய் எனக்குத் தெரிவது என்றன் தாய்மொழி மட்டும்தான் பயனாய் எனக்குத் தெரிவது வாழ்க்கை பயனுற…

தமிழ் உணர்வு – காசி ஆனந்தன்

தமிழென் அன்னை! தமிழென் தந்தை! தமிழென்றன் உடன் பிறப்பு! தமிழென் மனைவி! தமிழென் பிள்ளை! தமிழென் நட்புடைத் தோழன்! தமிழென் சுற்றம்! தமிழென் சிற்றூர்! தமிழென் மாமணித் தேசம்! தமிழ்யான் வாழும் எழில்மா ஞாலம்! தமிழே என்னுயிர் மூலம்! … உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனார்

தமிழனுக்கு யாவனுளன் ஈடு?

தமிழன் உடற்குருதி சூடு! தமிழன் தனை எதிர்ப்போன் பாடுபெரும் பாடு! இமயம் கடாரமெனும் இடம் பலவென்றவனலவோ தமிழனுக்கு யாவனுளன் ஈடு? தமிழன் தாங்கு புகழைத் தமிழா! பாடு! …உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 12– ஆ.வெ.முல்லை நிலவழகன்

  காட்சி – 12 அங்கம்    :     பூங்குயில்,  அருண் மொழி  இடம்      :     அருண்மொழி இல்லம்  நிலைமை  :     (துயிலும் கணவனின் பாதங்களைத் தொட்டுவணங்கி எழுப்பிய பின்) உயிரே! அவனென அவள் எண்ணி உணர்வுப் பொங்க அழைக்கின்றாள் பூங்:            காலைக் கதிரவனே! சோலைக் குழல் வண்டே! நாளை முடிப்பதென வேளை வோட்டாமல் தூயவண்ணனென நீயே எழுந்துவிடு! அருண்:    காலை அலர் மலரே சோலை மலர்த்தேனே! காலைநான் எழவோ காலைத் தட்டுகின்றாய்? கனியின் சுவையாகக் கனிந்தே அழைக்கின்றாய்! மணியின் ஒலியாக இனிதே மொழிகின்றாய்! கட்டாய்…

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 11– ஆ.வெ.முல்லை நிலவழகன்

காட்சி – 11 அங்கம்    :     ஆண் சிட்டு, பெண் சிட்டு இடம்      :     மரக்கிளை நிலைமை  : (நாடகம் பார்க்கும் ஆவலிலே நவின்றிடும் பேடை எண்ணாது கூடாக் கோபத்தை துணைக்கொண்டு கொட்டுது சொற்களை ஆண்சிட்டு) பெண் :     அப்பப்பா! இவர்கள் என்னதான் பேசுகிறார்களோ புரியவில்லை! எப்பவும் இவர்கள் இப்படித்தான் பேசிக் கொண்டிருப்பரோத் தெரியலையே! ஆண் :     அவர்கள் ஏதோ! பேசட்டுமே! அதனால் நமக்கு வருவதென்ன? செவனே என்று சில நாழி பேசாதிருவேன் நீ கொஞ்சம்! பெண் :     விசிலும் ஊதித் திரை நீக்கி…