கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 29 & 30

(கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 27 & 28 தொடர்ச்சி)  திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 29 & 30   இருபத்தொன்பதாம் பாசுரம் இளையாரையே இனிப் பயிற்றுவோம்! யாமும் பலவாற்றான் நல்லுரைகள் ஓதிநின்றோம்! தாமும் செவியுள் தமிழினத்தார் போட்டுவைத்தே ஆமாம் எனப்பகன்றார்; ஆயின்வழி ஏற்பாரோ? மீமிசை மீமிசை யாமுரையோம் அன்னவர்க்கே ! நீம மிகுவெழில் நன்முகச் சிற்றகவைத் தூமனத்து நன்னிலத்தில் தூவிடுவோம் நற்றமிழை! பூமி விதந்தேத்தப் பொற்புதல்வர் செய்வார்காண்! மேன்மை தமிழினம் பூணுமடி, எம்பாவாய் !   முப்பதாம் பாசுரம் இல்லமும் நாடும் ஓங்குக!…

எண்ணிக்கை – சந்தர் சுப்பிரமணியன்

எண்ணிக்கை   ஒன்று – உலகின் சூரியன் ஒன்று! இரண்டு – இரவு பகலென் றிரண்டு! மூன்று – முத்தாய்த் தமிழ்காண் மூன்று! நான்கு – நாட்டில் பருவம் நான்கு! ஐந்து – அமைந்த புலன்கள் ஐந்து! ஆறு – அருசுவை வகைகள் ஆறு! ஏழு – இத்தரைப் பெருங்கடல் ஏழு! எட்டு – எதிர்படும் திசைகள் எட்டு! ஒன்பது – உடலின் வாசல் ஒன்பது! பத்து – பற்றிடும் விரல்கள் பத்து!    – இலக்கியவேள் சந்தர் சுப்பிரமணியன் புன்னகைப் பூக்கள்  பக்கம்…

சுந்தரச் சிலேடைகள் 8 : பல்லியும் காதலியும்

 சுந்தரமூர்த்தி கவிதைகள் சிலேடை  அணி 8 பல்லியும் காதலியும் உடலுயிர் கால்வைத்தே ஊர்ந்தோடும், வாழ்தல் திடங்கொண்டு முத்தமிடத் தீம்புண்.-விடமுண்டாம் சத்தமிட்டு முத்துருட்டும் சங்கச் சிரிப்பாலே ! உத்தமிக்குப் பல்லியுநே ரொப்பு. பொருள்: காதலி: 1)நம் மனத்தில் உடலில் ஒன்றாகி நினைவுகளில் இனிக்க அங்குமிங்கும் ஓடுவாள். 2) முத்தம் கடுமையானால் உதடுகள் புண்ணாகும். 3) காதல் விடத்தால் நோய்தருவாள் ; உயிரைக்கூட எடுப்பாள். 4) அவள் சிரிப்பு முத்துக்களை உருட்டிவிட்டதுபோல் இருக்கும். பல்லி: 1) சுவரில் இங்குமங்கும் ஓடும். 2) பல்லிகள் வாயிலிருந்து வரும் உமிழ்நீரானது…

தமிழ்த்தாய் வணக்கம் 16-20 : நாரா. நாச்சியப்பன்

 (தமிழ்த்தாய் வணக்கம் 11-15 தொடர்ச்சி)   தமிழ்த்தாய் வணக்கம் 16-20 பூங்காவில் வாழ்வோன் பொந்தனைய இல்லத்தே பாங்காய்ச் சுழல்விசிறி பாய்ச்சுவளிக்-கேங்குதல்போல் உள்ள தமிழ்நூல் உயர்வறியார்; வேற்றுமொழி யுள்ளித் திரிவார் உழன்று! (16)   எண்ணி முயறால் இயலாத வொன்றில்லை வண்ணத் தமிழில் வடித்தெடுக்க – மண்ணில் அறிவுத் துறைச்சொல் அகராதி யாக்கம் உறல்கடிதோ அன்னய் உரை.  (17)   பெற்றதாய்க் காக.அறம் பேசும் வலிவற்றோர் முற்றும் அறிவில்லா மூடரெனக்-குற்றம் உரைப்பேனைச் சூழ்ந்தெதிர்க்க ஓரா யிரம்பேர் திரண்டாலும் அஞ்சேன் சிறிது. (18)   எங்கும் தமிழாய்…

திருக்குறள் அறுசொல் உரை : 123. பொழுது கண்டு இரங்கல் வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை : 122. கனவு நிலை உரைத்தல் தொடர்ச்சி)   திருக்குறள் அறுசொல் உரை காமத்துப் பால்    15. கற்பு இயல் 123.  பொழுது கண்டு இரங்கல்       பிரிந்த காதலர், துயர்மாலைப் பொழுது கண்டு மனம்வருந்தல். (01-10 தலைவி சொல்லியவை) மாலையோ அல்லை; மணந்தார் உயிர்உண்ணும்       வேலைநீ; வாழி! பொழுது. மாலையே நீ பொழுதே இல்லை; பிரிந்தார் உயிர்குடிக்கும் கூர்வேல்.   புன்கண்ணை வாழி! மருள்மாலை; எம்கேள்போல்,       வன்கண்ண தோநின் துணை? மாலையே!  நீஏன் வருந்துகிறாய்?…

திருக்குறள் அறுசொல் உரை : 122. கனவு நிலை உரைத்தல் : வெ. அரங்கராசன

(திருக்குறள் அறுசொல் உரை : 121. நினைந்தவர் புலம்பல் :  தொடர்ச்சி)   திருக்குறள் அறுசொல் உரை 3. காமத்துப் பால் 15.கற்பு இயல் 122. கனவு நிலை உரைத்தல்   தலைவி, தான்கண்ட கனவு நிலைகளை, எடுத்து மொழிதல்.   (01-10 தலைவி சொல்லியவை) காதலர் தூதொடு வந்த கனவினுக்கு,       யாதுசெய் வேன்கொல் விருந்து? காதலர் வரவைக் கூறிய கனாத்தூதுக்கு, என்ன விருந்திடுவேன்?   கயல்உண்கண், யான்இரப்பத் துஞ்சின், கலந்தார்க்(கு),       உயல்உண்மை சாற்றுவேன் மன். கண்கள் தூங்கின், நான்வாழ்வதைக் காதலர்க்குக்…

சொல்லடா! – சுரதா

சொல்லடா! – சுரதா கோங்கம் மலர் பூத்த-பசுங் குன்றம் முழுநிலவை வாங்கிப் புசிக்குதுபார்-குளிர் வண்ணப் பனிச்சிரிப்பே ! தீங்கனிச் செந்தமிழ்தான்-எங்கள் சிறப்பு விளக்கமென்றே மாங்கனி வாய் திறந்து- நான் மகிழ்ந்திடச் சொல்லாயோ!   “இச்சகத் தார்க்குநாங்கள்-எதிலும் இளைத்தவ ரல்லகாண்! அச்சம் இடித்துவிட்டோம்- நாங்கள் ஆண்மை வரிப்புலிகள்: உச்சி இமயத்திலே-புகழ் ஒங்கும் மறக் குலத்தின் மச்சக் கொடிபறக்கும்’-என்று மாமல்லா நீ சொல்லடா!   ‘வானை அளந்திடுவோம்-புது வையம்  நிறுத்திடுவோம்! தேனைநிகர் தமிழ்க்குத்-துளி தீங்கு விளைப்போர் பெரும் ஆனைகள் போல்வரினும்- நாங்கள் ஆயிரம் சிங்கங்கள்தாம்”‘- எனச் சேனை…

தமிழ் வாழ்க! – வாணிதாசன்

தமிழ் வாழ்க! எடுப்பு தமிழைக் காப்போம் நாம் தாயடிமை போமே ! தாயடிமை போமே    (தமிழைக்)   மேல் எடுப்பு   பூமியினில் தனித்தமி ழாலே பூரித்திடும் நம்மிரு தோளே ! நாமினிமேல் அஞ்சுதல் இலமே ! நாம்நமையே ஆண்டிடு வோமே !   ஏமம் நெஞ்சில் துள்ள ஏற்றமடை வோமே ! ஏற்றமடை வோமே !   (தமிழைக் )   அமைதி   ஆரியத்தின் கலப்பத னாலே அடங்கியதே தமிழ்புவி மேலே ! ஒர்ந்துநாம் எல்லோரும் உழைப்போம் தமிழ்க்காக! . உழைப்போம் தமிழ்க்காக…

அகரப் பாடல் – சந்தர் சுப்பிரமணியன்

அகரப் பாடல்   அறிவைத் தீட்டு ஆணவம் ஓட்டு இறையைப் போற்று ஈகை ஆற்று உறவோடு இணை ஊக்கம் துணை எளிமை நாடு ஏழைமை கேடு ஐந்தின் பயன்காண் ஒன்றிப் பிழை ஓயாது உழை ஔவெனப் பழகு அஃதுடற்கு அழகு    – இலக்கியவேள் சந்தர் சுப்பிரமணியன் புன்னகைப் பூக்கள் :  பக்கம் 32

நன்றி நவிலல் – ஆத்மாநாம்

நன்றி நவிலல் இந்தச் செருப்பைப் போல் எத்தனைப் பேர் தேய்கிறார்களோ! இந்தக் கைக்குட்டையைப் போல் எத்தனைப்பேர் பிழிந்தெடுக்கப்படுகிறார்களோ! இந்தச் சட்டையைப் போல் எத்தனைப் பேர் கசங்குகிறார்களோ! அவர்கள் சார்பில் உங்களுக்கு நன்றி இத்துடனாவது விட்டதற்கு!   கவிஞர் ஆத்துமாநாம் ஆத்மாநாம் படைப்புகள்

தமிழாமோ? – மீரா

தமிழாமோ? திங்கள்முக மங்கைவிரல் தீண்டித்தரும் இனிமை தெங்கின்குலை இளநீர்ச்சுவை தேக்கித்தரும் இனிமை செங்கள்தரும் இனிமை நறுந் தேமாதரும் இனிமை எங்கள் தமி ழினிமைக்கொரு இணையாய்வரு மாமோ?   கடலில் விளை முத்தும்நிலக் கருவில்விளை பொன்னும் தொடவும் முடி யாமல்முகில் தொட்டேவிளை சாந்தும் தொடரும்மலைக் கூட்டம்விளை தூய்மைநிறை மணியும் சுடரும்தமி ழுயர்வுக்கிணை சொல்லத்தகு மாமோ?   குயிலின்மொழி குழலின்மொழி குழந்தைமொழி கட்டில் துயிலும்பொழு திசைக்கும் இளந் தோகைமொழி கேட்டுப் பயிலும் ஒரு கிளியின் மொழி பண்யாழ்மொழி எல்லாம் உயிரில்எம துளத்தில் உரம் ஊட்டும்தமி ழாமோ? கவிஞர்…

பாடுவேன், ஊதுவேன்! – அழ.வள்ளியப்பா

பாடுவேன், ஊதுவேன்!   பாட்டுப் பாடுவேன்-நான் பாட்டுப் பாடுவேன். பலரும் புகழ, இனிய தமிழில் பாட்டுப் பாடுவேன். கேட்டு மகிழவே-நீங்கள் கேட்டு மகிழவே, கிளியின் மொழிபோல் இனிய தமிழில் கீதம் பாடுவேன்-நான் கீதம் பாடுவேன்.   குழலை ஊதுவேன்-புல்லாங் குழலை ஊதுவேன். கோகு லத்துக் கண்ணன் போலக் குழலை ஊதுவேன்-நான் குழலை ஊதுவேன். அழகாய் ஊதுவேன்-மிக்க அழகாய் ஊதுவேன். அனைவர் மனமும் மகிழும் வகையில் அழகாய் ஊதுவேன்-நான் அழகாய் ஊதுவேன்.   குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா : சிரிக்கும் பூக்கள்