தமிழாமோ? – மீரா

தமிழாமோ? திங்கள்முக மங்கைவிரல் தீண்டித்தரும் இனிமை தெங்கின்குலை இளநீர்ச்சுவை தேக்கித்தரும் இனிமை செங்கள்தரும் இனிமை நறுந் தேமாதரும் இனிமை எங்கள் தமி ழினிமைக்கொரு இணையாய்வரு மாமோ?   கடலில் விளை முத்தும்நிலக் கருவில்விளை பொன்னும் தொடவும் முடி யாமல்முகில் தொட்டேவிளை சாந்தும் தொடரும்மலைக் கூட்டம்விளை தூய்மைநிறை மணியும் சுடரும்தமி ழுயர்வுக்கிணை சொல்லத்தகு மாமோ?   குயிலின்மொழி குழலின்மொழி குழந்தைமொழி கட்டில் துயிலும்பொழு திசைக்கும் இளந் தோகைமொழி கேட்டுப் பயிலும் ஒரு கிளியின் மொழி பண்யாழ்மொழி எல்லாம் உயிரில்எம துளத்தில் உரம் ஊட்டும்தமி ழாமோ? கவிஞர்…

பாடுவேன், ஊதுவேன்! – அழ.வள்ளியப்பா

பாடுவேன், ஊதுவேன்!   பாட்டுப் பாடுவேன்-நான் பாட்டுப் பாடுவேன். பலரும் புகழ, இனிய தமிழில் பாட்டுப் பாடுவேன். கேட்டு மகிழவே-நீங்கள் கேட்டு மகிழவே, கிளியின் மொழிபோல் இனிய தமிழில் கீதம் பாடுவேன்-நான் கீதம் பாடுவேன்.   குழலை ஊதுவேன்-புல்லாங் குழலை ஊதுவேன். கோகு லத்துக் கண்ணன் போலக் குழலை ஊதுவேன்-நான் குழலை ஊதுவேன். அழகாய் ஊதுவேன்-மிக்க அழகாய் ஊதுவேன். அனைவர் மனமும் மகிழும் வகையில் அழகாய் ஊதுவேன்-நான் அழகாய் ஊதுவேன்.   குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா : சிரிக்கும் பூக்கள்

கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 27 & 28

(கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 25 & 26 தொடர்ச்சி)    திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 27 & 28   இருபத்தேழாம் பாசுரம் தமிழரை ஒன்றுபடுத்த வணங்கவேண்டும்! ஏடி, தமிழினத்தை ஏந்தவந்த பெண்கிளியே! நாடிநம் மக்களின் இற்றைநிலை கேளாயோ ! கூடி முழங்கிவிட்டு ஊன்கழிந் தோய்ந்திடுவார் ! பாடு படுவார்; பிறவினத்தார் தாள்பணிவார் ! மூட வழியேற்றே முன்னேற்ற வாழ்விழப்பார் ! பீடுநிறை தங்குலத்துப் பேர்புகழைத் தாம்காவார்! சாடா தவர்நெஞ்சத் தாள்திறந்தே, தம்முள்ளே கூடிப் பணியாற்றக் கும்பிடவா , எம்பாவாய் !  …

சுந்தரச் சிலேடைகள் 7 – ஆசானும் நன்னீரும்

சுந்தரமூர்த்தி கவிதைகள் சிலேடை  அணி 7 ஆசானும் நன்னீரும் தாகத்தைத் தீர்க்கும், தடுமாற்றம் போக்கிடும், பாகத்தான் மேலே பரந்தோடும்.-பாகாக்கும் தெள்ளிய தூய்மைக்கும்,தேயமுய்யும் ஓங்கலுக்கும் , பள்ளியனும் நன்னீரும் ஒன்று. பொருள்: ஆசிரியர்: 1)மாணவர்களின் கல்வித் தாகத்தைத் தீர்ப்பார். 2)மாணவர்தம் அறியாமையால் ஏற்படும் தடுமாற்றம்  தீர்க்கப்படுகிறது. 3)ஈசனும் ஆசானே.அவன் உடல் உள்ளத்தின் மேல் கல்வி பரந்தோடுகிறது. 4)ஆசிரியர்  ஒவ்வொருவரையும் பாகாக்கும் வல்லமை உடையவர் இனிமையான பேச்சைக் கொண்டவராக்கும் திறமை பெற்றவர்.அருந்தமிழ்ப் பாக்களைக் காக்கும் பண்புள்ளவராகவும் உள்ளார். 5) ஆசிரியர் தீயன களைந்து மாணவர்களைத் தூய்மையாக்குகிறார் 6)உலகம்…

தமிழ்த்தாய் வணக்கம் 11- 15 : நாரா. நாச்சியப்பன்

(தமிழ்த்தாய் வணக்கம் 6-10 தொடர்ச்சி)   தமிழ்த்தாய் வணக்கம் 11-  15   நல்ல தமிழிங்கு நாடாள வேண்டுமென்றால் புல்லர் தலையெடுத்துப் பொங்குகின்றார்-வல்ல தமிழ்த்தாயே உன்மக்கள் தாமாய்க் குழியில் அமிழுந் துயரை அகற்று.   (11)   பொய்யும் புரட்டும் புதுவாழ்வு சேர்க்குமென நையும் தமிழர் நலங்காண-மெய்யறிவைத் தந்துகாப் பாற்றத் தமிழே அருள்பொழியச் சிந்தை செலுத்து சிறிது.  (12)   அன்பு மொழியாலே நெஞ்சை அணைக்கின்ற இன்பத் தமிழே எழில்வடிவே-உன்புகழைப் பாடுகின்ற போதெல்லாம் பாய்கின்ற இன்பத்தால் ஆடுகின்ற தென்றன் அகம். (13)   தென்னகத்தைச் சேர்ந்திருக்கும்…

கறுப்புப் பூனை -சந்தர் சுப்பிரமணியன்

கறுப்புப் பூனை   கறுப்புப் பூனை கண்கள் மூடி என்ன பண்ணுது? – அங்கு என்ன பண்ணுது? – அது கடந்து போகும் எலியைத் தின்னக் காத்திருக்குது! – அங்குக் காத்திருக்குது!   சுறுசுறுப்பாய் ஓடும் எலி என்ன பண்ணுது? – அங்கு என்ன பண்ணுது? – அது தூங்கு கின்ற பூனைக் காலைப் பார்த்திருக்குது! – காலைப் பார்த்திருக்குது!   –சந்தர் சுப்பிரமணியன் புன்னகைப் பூக்கள்  பக்கம் 31

வண்ணப் படம் – சந்தர் சுப்பிரமணியன்

வண்ணப் படம்   வண்ணம் தெளித்து வரைகின்றேன்! – நான் வரிசைப் பூக்கள் வரைகின்றேன்! கண்கள் கூட வரைகின்றேன்! – அதில் கருப்பாய் மணிநான் வரைகின்றேன்!   காட்டுப் புலிநான் வரைகின்றேன்! – அதன் கரத்தில் நகங்கள் வரைகின்றேன்! ஆட்டைப் பார்த்து வரைகின்றேன்! – உடன் அருகம் புல்லும் வரைகின்றேன்!   கோட்டுப் படங்கள் வரைகின்றேன்! – ஒரு கோவில் கூட வரைகின்றேன்! வீட்டுச் சுவரில் மாட்டிவிட – நான் விரைவாய் வரைந்து தருகின்றேன்! – சந்தர் சுப்பிரமணியன் புன்னகைப் பூக்கள்  பக்கம் 29…

கவிஞாயிறு தாராபாரதி 23 (நிறைவு) – சந்தர் சுப்பிரமணியன்

(கவிஞாயிறு தாராபாரதி 21 & 22 – தொடர்ச்சி) கவிஞாயிறு தாராபாரதி 23 (நிறைவு) வெறுங்கை என்பது மூடத்தனம் – உன் விரல்கள் பத்தும் மூலதனம் என்னும் இடித்துரை வரிகளுக்குச் சொந்தக்காரர் கவிஞர் தாராபாரதி. தமிழில் போற்றப்படவேண்டிய புலவர்களும் கவிஞர்களும் எண்ணிறந்தோர் உள்ளனர். அவர்களுள் முதன்மையாகக் குறிப்பிடத்தக்கவர்களுள் ஒருவர் கவிஞர் தாராபாரதி. தன் நெருப்புச் சொற்களால் உயிர்ப்பு கொடுப்பவர் கவிஞர் தாராபாரதி.   ‘கவிஞாயிறு தாராபாரதி கவிமலர்’ என அவரைக் கவிப்பூக்களால் வழிபட்டிருப்பவர் கவிஞர் சந்தர் சுப்பிரமணியன்.   கவிஞர் சந்தர் சுப்பிரமணியன் ஒரு பன்னாட்டு…

கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 21 & 22

(கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 19 & 20 தொடர்ச்சி)  திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 21 & 22   இருபத்தோராம் பாசுரம் மேம்பட்ட தமிழர் நாகரிகம் ஆதி உலகினில்பே ராட்சி நடத்தியவர்; யாதுமே ஊரென்றார்; யாவருமே கேளிரென்றார்; பூதலமே தாம்பெறினும் ஓர்பழி ஒவ்வாதார்; சாதலும் ஏற்பார் புகழ்கொள வையத்தில்! யாதினிய நாகரிகம், தீதிலாப் பண்பாடு! ஈதுணரும் நெஞ்சமில் லாராய்த் தமிழரிந்நாள் காதலே யின்றி இன,மொழிகா வாதிருக்கும் தீதினைச் சுட்டித் திருத்திடவா, எம்பாவாய் !   இருபத்திரண்டாம் பாசுரம் தமிழ்க்கடமைகள் பலப்பல செயவேண்டும் கத்துகடல்…

கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 19 & 20

(கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 17 & 18 தொடர்ச்சி) திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 19 & 20   பத்தொன்பதாம் பாசுரம்  தமிழ் கற்குமுன் அயல்மொழிகள் கற்க அயன்மொழிகள் கற்க அவாவுடையோர் கற்க, முயன்றே முழுதாக; முத்தமிழிற் போந்தால் , வியனோங்கு விண்ணளவு, வாரிதியின் ஆழம் பயன்தூக்கும் கற்பார் பிறமேற்செல் லாரே ! நயத்தக்க பேரிளமை நங்கையின்பாற் காதல் வயப்படுவார் மீளார்; மயங்கிடுவார் நாளும் ! கயலொத்த கண்பெற்ற காரிகையே ! தூங்கும் கயலிலையே! காதல்கொளக் கண்திறவாய், எம்பாவாய் !   இருபதாம்…

கவிஞாயிறு தாராபாரதி 21 & 22 – சந்தர் சுப்பிரமணியன்

(கவிஞாயிறு தாராபாரதி 19 & 20 தொடர்ச்சி)   கவிஞாயிறு தாராபாரதி 21 & 22   கவிமொந்தை! கருத்துடந்தை! கள்ளார் சிந்தை! கால்மறக்கும் மனமந்தை! கனவுச் சந்தை! செவியுந்தும் தமிழ்ச்சிந்தும்! தேனைத் தந்தும் திகட்டாத ஒருபந்தம்! தெரியா தந்தம்! புவியெங்கும் புதுக்கந்தம்! புதிதாய் வந்தும் புதிரவிழ்க்கும் அவர்சிந்தும்! புலமை முந்தும்! அவையெங்கும் புகழ்தங்கும்! அவருட் பொங்கும் அறிவொளியில் இருள்மங்கும்! அவர்பாச் சிங்கம்! (21) அமிலத்தில் கரைத்தெடுத்த அமுதச் சாற்றை அளிக்கின்ற பாற்கடல்தான் அவர்தம் பாக்கள்! கமலத்தின் கள்ளூற்றில் கரைந்த தீப்பூ! கவிதைக்குள் குறுவாளாய்க்…

திருக்குறள் அறுசொல் உரை : 121. நினைந்தவர் புலம்பல்: வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை : 120. தனிப்படர் மிகுதி தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை காமத்துப் பால்  15.கற்பு இயல்  நினைந்தவர் புலம்பல்    இருவரும் கூடிப்பெற்ற இன்பத்தைப், பிரிவினில் நினைந்து புலம்புதல்.   (01-02 தலைவன் சொல்லியவை)  உள்ளினும், தீராப் பெருமகிழ் செய்தலால்,       கள்ளினும், காமம் இனிது. காதலை, நினைத்தாலே இனிக்கும்; கள்ளைவிடவும், காதலே இனிக்கும்.   எனைத்(து)ஒன்(று) இனிதேகாண், காமம்;தாம் வீழ்வார்       நினைப்ப, வருவ(து)ஒன்(று) இல். காதலியை நினைத்தாலே துன்பம் வாராதே; காதல்தானே இனிது.   [03-10 தலைவி…