நீலகிரி மாவட்டத்தில் பெருங்கற்காலச் சிற்பங்கள்!

  உதகமண்டலத்தில் கிடைத்த பெருங்கற்காலச் சுடுமண் சிற்பங்கள்   செய்தியாளர்கள் என்பவர்கள் தம்முன் நடப்பதைப் பதிவு செய்பவர்கள் என்றுமட்டும்தான் பலருக்கும் தெரியும் ஆனால் சில செய்தியாளர்கள் அதையும்தாண்டித் தங்கள் மண்ணின் வளமையையும் மக்களின் பெருமையையும் உலகிற்குப் பறைசாற்றுபவர்களாகவும் இருக்கின்றனர். அவர்களில் உதகமண்டலத்தில் உள்ள செய்தியாளர் பிரதீபனும் ஒளிப்படக்கலைஞர் இரகுவும் குறிப்பிடத்தகுந்தவர்கள்.   நீலகிரி மாவட்டதின் பல்வேறு சிறப்புகளைத் தேடித்தேடிக் கண்டுபிடித்துச்,செய்தியாகவும் படமாகவும் வெளியிட்டு மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்து வருகிறார்கள்   அந்த வகையில் தற்போதைய அவர்களது பதிவுதான் பெருங்கற்காலச் சுடுமண் சிற்பங்கள். இதுகுறித்து, தொட்டபாலி…

கடல்வழி போக்குவரவினை முதலில் கண்டறிந்தவர் தமிழரே!

    தமிழ்வேந்தர்கள் அமைத்த கோட்டைகளின் இயல்பு சங்க இலக்கியங்களிற் குறிக்கப்பட்டுள்ளது. நகரங்களின் புறத்தே காவற்காடும் அதனை அடுத்து, ஆழ்ந்த அகழியும், அதனைச் சார்ந்து வானளாவ ஓங்கிய மதிலும், அரண்களாக கொள்ளப்பட்டன. முற்றுகையிட்ட பகைவர் படையினை உள்ளிலிருந்து எய்தற்குரிய போர்க் கருவிகள் மதிலில் அமைக்கப்பட்டு இருந்தன. கோட்டையில் சிறந்த பகுதி மதிலாகும். சுடுமண்ணாகிய செங்கற்களாற், சுண்ணாம்பு சாந்திட்டு மதில்கள் கட்டப்பட்டன. அங்ஙனம் கட்டப்பட்ட மதில்கள் செம்பினாற் செய்தாற் போன்ற தோற்றமும் திண்மையும் உடையவனாய் அமைந்தன. புறத்தேயுள்ள பகைவர் காணாதபடி உள்ளிருப்பார் மறைந்து நின்று போர்…

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 28 – ஆ.வெ.முல்லை நிலவழகன்

(அகரமுதல 82, வைகாசி 24, 2046 / சூன் 07, 2015 தொடர்ச்சி) காட்சி – 28 அங்கம்    :     அன்பரசன், கவிஞர் இடம்      :     குடிலின் முன்வாசல் நிலைமை  :     (ஒவ்வொரு காட்சியும் ஒவ்வொரு நினைவாய்க் கவிஞரின் உள்ளத்தைக் கக்கவே வைக்க இவ்வொரு காட்சியோ! இன்னும் தூண்ட அவிழ்த்தே விரித்தார்! பட்டப்பகலாய்) கவி  :     பார்த்தாயா தம்பி! பணம் பேசும் பேச்சை! சொல்லால் சொல்ல வழியும் உண்டா? அன் :     பரம்பரையாகக் கொள்ளயடித்தே வருவோரை நாம் தான் செய்வது என்ன? கவி  :    …

இயல்பான கணிணி மொழி பெயர்ப்பிற்குச் செய்ய வேண்டுவன – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ் இணையமாநாடு 2015, சிங்கப்பூர்   இயல்பான கணிணி மொழி பெயர்ப்பிற்குச் செய்ய வேண்டுவன – இலக்குவனார் திருவள்ளுவன் thiru2050@gmail.com முன்னுரை:     உலகின் முதல் குடியாகிய தமிழ்க்குடி தோன்றிய பின்னர், இயற்கைச் சீற்றங்களால், கடல் கோள்களால், நிலத் திட்டு நகர்வுகளால் மக்களினம் பிரியும் சூழல் ஏற்பட்டது. அங்கங்கே பிரிந்து சென்றவர்கள் தாய்க்குடியுடன் தொடர்பின்றி அங்கங்குள்ள சூழலுக்கேற்பப் பேசி புதிய மொழிகள் பிறந்தன. பல மொழிகள் பிறந்ததும், வெவ்வேறு மொழி பேசுவோரிடையே தொடர்பு   ஏற்பட்டதும் மொழிபெயர்ப்பும் உருவானது. தமிழில் கிடைத்துள்ள மூவாயிரம் ஆண்டிற்கு…

தமிழ்ச்சங்கங்களில் இசைஆராய்ச்சியும் நடைபெற்றது.

  வடிம்பலம்ப நின்றானும் அன்றொருகால் ஏழிசை நூற்சங்கம் இருந்தானும் கிழக்கத்திய இசை (Oriental Music) சீரிலும் சிறப்பிலும் மிக உயர்ந்தது என்றும் மிகவும் திருத்தம் பெற்றது என்றும் அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. கிழக்கத்திய இசை என்பதில் தமிழிசை உட்படுகிறது என்பதை அறிய வேண்டும். இது ஐந்திசை, ஆறிசை, ஏழிசை என்ற முறையில் முன்னேறித் திருத்தமடைந்துள்ளதாக, அமெரிக்கக் கலைக் களஞ்சியம் குறிப்பிட்டுள்ளது. (The Encyclopaedia Americans, Vol.19. page. 627) – முனைவர் ஏ.என். பெருமாள்: தமிழர் இசை: பக்கம்.14

தமிழ் நாடு – பாவேந்தர் பாரதிதாசன்

சேரன் செங்குட்டு வன்பிறந்த வீரம் செறிந்த நாடிதன்றோ?   சேரன் செங்குட்டுவன்… பாரோர் புகழ் தமிழ்ச் சேயே பகை யஞ்சிடும் தீயே நேரில் உன்றன் நிலையை நீயே நினைந்து பார்ப் பாயே.   சேரன் செங்குட்டுவன்… பண்டி ருந்த தமிழர் மேன்மை பழுதாக முழு துமே கண்டி ருந்தும் குகையிற் புலிபோல் கண்ணு றக்கம் ஏனோ?   சேரன் செங்குட்டுவன் … – பாவேந்தர் பாரதிதாசன்

இந்தியக் கலை மரபு யாவும் தமிழரது கலைகளே!

இந்தியக் கலையியலை ஆராய்ந்த மேற்குநாட்டு அறிஞரும் யாவரும், தென்னாட்டு தமிழ்நாட்டு கலைமரபைத் “திராவிடக் கலைமரபு’ என்னும் பெயராலேயே போற்றியுள்ளனர். நூறு ஆண்டுகளுக்கு முன்னர், “இந்திய, கிழக்கத்திய சிற்பக்கலை’ எனும் நூலை எழுதி சேம்சு பர்கூசன் என்பவர், திராவிடக் கலைமரபு’ என்னும் பெயராலேயே விரிவாக எழுதியுள்ளார். “”இந்தியாவின் மதிநலமிக்கப் படைப்புகள் அனைத்தும் ஆரியர்களுடைய சாதனை எனச் சொல்லுவது தவறாகும். வேத உபநிடதங்கள் போன்று எழுதப்பட்டவை ஆரியர் அளித்தவை என்பதனை உடன்படலாம். ஆனால், இந்தியாவில் கட்டப்பட்டவை யாவும், கலை நயத்தோடு படைக்கப்பட்டவை யாவும் ஆரியரல்லாத அந்நாட்டுப் பழங்குடி…

கலைகள்

  கலைமரபில் ‘ஆயகலைகள் அறுபத்து நான்கு’ என்னும் மரபு தோற்றம் பெற்றுள்ளது. காதர்பரி, பாகவத புராணம், விட்ணு புராணம், அரிவம்சம், இலலித விசுதாரம், காமசூத்திரம் முதலான நூல்கள் 64 கலைகளைப் பற்றிக் குறிக்கின்றன. ஆனால், ஒவ்வொன்றிற்கும் சிற்சில வேறுபாடுகள் காணப்படுகின்றன. சில நூல்கள் சிலவற்றைக் கூட்டியும் சிலவற்றை நீக்கியும் கொடுத்¬துள்ளன. ஆனால், 64 என்கின்ற எண்ணிக்கையை எல்லா நூல்களும் ஒரே நிலையாகப் பின்பற்றியுள்ளன. (கு.வெ.பாலசுப்பிரமணியன்: சங்க இலக்கியத்தில் கலையும் கலைக்கோட்பாடும்: பக்கம்.13) சிலம்பில் 64 என்கின்ற எண்ணிக்கை குறிப்பிட்டப்பட்டுள்ளது. (சிலப்பதிகாரம்: ஊர்சூழ்வரி: அடி. 116)…

கலைகளைத் தன்னுள் கொண்டிருக்கும் தமிழின் பெருமையை விரித்துரைப்பது எளிதன்று!

  உலகம் நாகரிகம் கண்டறியாத அக்காலத்திலேயே கோட்டை கொத்தளம் கட்டி, தனக்கெனச் சில வரையறைகள் உண்டாக்கி அரசு நடத்தி, உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் அகிலும் தோகையும் முத்தும் பட்டும் அனுப்பிச் செல்வம் கொழித்த நாடு தம் தாய்த் திருநாடாம் தமிழகம். பல்வேறு நாட்டாரின் விருப்புக்கும் தேவைக்கும் உகந்த நாடாக இருந்து, வந்தவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து இறுமாந்து நின்றது தமிழ்நாடு. என்று பிறந்தது, என்று ஆய்ந்து காலத்தை அறுதியிட்டுக் காட்ட முடியாத நம் மொழியும் இனமும் இதற்குச் சான்று பகரும். சங்கம் கண்டு தமிழ்…

நாட்டிய நங்கையர் அறிவதற்கெனச் சிறந்து விளங்கிய கலைகளில் சில

  வேத்தியல், பொதுவியல் என்றிரு திறத்துக் கூத்தும், பாராட்டும், தூக்கும், துணிவும், பண்ணியழ்க் கரணமும், பாடைப் பாடலும், தண்ணுமைக் கருவியும், தாழ்தீங் குழலும், கந்துக் கருத்தும்,மடைநூற் செய்தியும், சுந்தரச் சுண்ணமும், தூநீ ராடலும் பாயற் பள்ளியும், பருவத்து ஒழுக்கமும், காயக் கரணமும், கண்ணியது உணர்தலும் கட்டுரை வகையும், கரந்துறை கணக்கும், வட்டிகைச் செய்தியும், மலராய்ந்து தொடுத்தலும், கோலம் கோடலும், கோவையின் கோப்பும் காலக் கணிதமும், கலைகளின் துணிவும், நாடக மகளிர்க்கு நன்கனம் வகுத்த ஓவியச் செந்நூல் உரைநூற் கிடக்கையும் கற்றுத் துறைபோகிய பொற்றொடி நங்கை…

கருநாடக இசை என்பது தமிழிசையின் பிற்கால வளர்ச்சியே

 நம்நாட்டில் மிகப் பழமையானது, தொன்மைச் சிறப்பு வாயந்தது என்று போற்றப்படுவது தென்னாட்டுக் கருநாடக இசையாகும். ஆனால் இக்கருநாடக இசையின் வரலாற்றினை நடுநிலையான உள்ளத்தோடும், நெறியுடனும் ஆராய்ந்து நோக்கினால், அது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் நாட்டிலே தோன்றி பண்டைய தமிழர்களால் அரும்பாடுபட்டு வளர்ந்த ஓர் இசை முறையின் பிற்காலத்துப் பரிணாம வளர்ச்சி என்று நன்கு விளங்கும். – முனைவர் சு.சீதா: தமிழகக் கலைச் செல்வங்கள்: இசைக்கலை: பக்கம்.86

தமிழர்இசையின் சிறப்பைச் சங்க நூல்கள் இயம்புகின்றன.

  காலத்தால் முந்தியும் கருத்தால் நிறைந்தும் பண்டைத் தமிழ் மக்களின் வாழ்வியலை நன்கு எடுத்துக் காட்டியும் இலக்கியச் செம்மையில் சிறந்தும் விளங்குகின்ற சங்கப் பாடல்கள் இசைச் செய்திகளைப் பலவாறு பற்பல இடங்களில் கூறியுள்ளன. கிறித்துவுக்கு முன்னர் இரண்டும் பின்னர் இரண்டுமான நான்கு நூற்றாண்டுகளில் தமிழர் இசை எவ்வாறு இருந்திருக்க வேண்டும் என்பதைச் சிந்தித்து உணரும் சிறந்த வாயில்களாகச் சங்ககால இலக்கியங்கள் விளங்குகின்றன. பண்ணும் பாடலும் பண்பட்டு வளர்ந்த நிலையை நன்குணருமாறு பல செய்திகளைச் சங்கச் செய்யுள்கள் தாங்கி மலர்ந்துள்ளன. – முனைவர் ஏ.என்.பெருமாள்: தமிழர்…