எதுகை மோனை தமிழ்மக்களுக்கு இயல்பாகவே கைவரப் பெற்றவை! – கி.வா.சகந்நாதன்
எதுகை மோனை தமிழ்மக்களுக்கு இயல்பாகவே கைவரப் பெற்றவை! நாடோடிப் பாடல்களுக்கென்று சிறப்பான சில இயல்புகள் உண்டு. குறிப்பிட்ட ஒரு பாடலை முதல் முதலில் யாரேனும் ஒருவர் இயற்றியிருக்கத்தான் வேண்டும். அவர் இலக்கியப்புலமை படைக்காவிட்டாலும் மற்ற பாமரர்களைப் போல் இல்லாமல் ஓரளவு சொல்வன்மை உடையவராகவே இருப்பார். கூலி வேலை செய்யும் பெண்கள் தம்மிடம் உள்ள இயற்கையான ஆற்றலால் அவ்வப்போது பாடல்களைப் பாடுவதும் உண்டு. இலங்கையில் மட்டக் களப்பு என்னும் பகுதியில் இன்றும் இவ்வாறு பாடல்கள் முளைக்கின்றன.1 எதுகை, மோனை, ஓசை என்னும் மூன்றும் தெரிந்தவர்கள் பாடல்களைப்…
மாம்பலம் ஆ.சந்திரசேகரின் மணிவிழா: “வைகறை வண்ணங்கள்” —நூலறிமுகம்
மாம்பலம் ஆ.சந்திரசேகரின் மணிவிழா “வைகறை வண்ணங்கள்” —நூலறிமுகம் [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.] [embpicasa id=”6276052191905337697″]
யாழிசை – நூலறிமுக விழா ஒளிப்படங்கள், தொரந்தோ
யாழிசை – நூலறிமுக விழா ஒளிப்படங்கள், தொரந்தோ [embpicasa id=”6278435871778876753″] [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.] செந்தமிழினி பிரபாகரன்
சாதியப் படுகொலைகளுக்கு எதிரான கூட்டமும் ‘ஊழல் மின்சாரம்’ ஆவணப் பட வெளியீடும்
அம்பேத்கருடைய 125ஆவது பிறந்தநாளில் சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான எழுச்சிப் பொதுக்கூட்டமும் ‘ஊழல் மின்சாரம்’ ஆவணப் பட வெளியீடும் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுடைய 125ஆவது பிறந்தநாளில் சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான எழுச்சிப் பொதுக்கூட்டம் மே பதினேழு இயக்கம் சார்பில் சித்திரை 01, 2047 – ஏப்பிரல் 14, 2016 அன்று சென்னை திருவொற்றியூர் பகுதியில் நடத்தப்பட்டது. எளிய மக்கள் அனைவருக்கும் மின்சாரம் வழங்கப்பட வேண்டும் என்று சட்டத்தை நடைமுறைப்படுத்திய அம்பேத்கரின் நினைவை வலியுறுத்தும் வகையில் ‘ஊழல் மின்சாரம்’ ஆவணப்படம் இப்பொதுக்கூட்டத்தில் வெளியிடப்பட்டது….
நக்கீரனுக்கு நன்றி!
நக்கீரனுக்கு நன்றி! அரசியல் செய்திகளுடன் தமிழுணர்வு செய்திகளையும் வெளியிடும் இதழ்களில் நக்கீரனும் ஒன்று. தமிழ்க்காப்புக்கழகம், தென்னிந்திய நடிகர்சங்கத்தின் மட்டையாட்டத்திற்கான அணிகளின் பெயர்களைத் தமிழில் சூட்டுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தது. இதனைப் பாரறியும் வண்ணம் தொகுதி 28, எய் 109 நாள் சித்திரை 3- 5/ ஏப்.16-18 இதழில்வெளியிட்டுள்ளது நக்கீரன். அதற்கு நாம் தமிழ்க்காப்புக்கழகம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். நடிகர் மட்டையாட்ட அணிகளின் பெயர்களுக்கு எதிர்ப்பு! பொருட்படுத்தாத நடிகர் சங்கம்! (வந்த செய்தி) உறுதிப்படுத்தப்பட்ட உண்மை: நடிகர் சங்கத்திற்கான புதிய கட்டடம் கட்டுவதற்கு 26 கோடி…
“பஞ்சம் பிழைக்க வந்த சீமை” என்ற நூல் வெளியீட்டு விழா
“பஞ்சம் பிழைக்க வந்த சீமை” என்ற நூல் வெளியீட்டு விழா மலையக மூத்த எழுத்தாளர் கலாபூசணம் மு.சிவலிங்கம் எழுதிய “பஞ்சம் பிழைக்க வந்த சீமை” என்ற நூல் வெளியீட்டு விழா பங்குனி 26, 2047 / 10.04.2016 ஞாயிற்றுகிழமை வட்டவளை அகரவத்தை மீனாட்சி தோட்ட எல்லை முனியாண்டி கோயில் முன்றிலில் நடைபெற்றது. மீனாட்சி தோட்டத் தொழிலாளியான திருமதி இராசேசுவரி மகேசுவரன் தலைமையில், மலையக அரசியல் விழிப்புணர்வு கழகமும் மலையகக் கலை, பண்பாட்டு மன்றமும் ஏற்பாடு செய்த இந் நிகழ்வில் …
உலகத்தொல்காப்பிய மன்றம், கனடா
உலகத்தொல்காப்பிய மன்றம், கனடா சித்திரை 03, 2047 / ஏப்பிரல் 16, 2016 பிற்பகல் 3.00 – மாலை 5.00 திரு பொன்னையா விவேகானந்தன் : தொல்காப்பியத்தில் களவியலும் கற்பியலும் – ஒரு நோக்கு
தமிழ்நாட்டுக் கோயில்களில் ஆடைக் கட்டுப்பாடு நீக்கம்! – உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாட்டுக் கோயில்களில் ஆடைக் கட்டுப்பாடு நீக்கம்! தமிழ்நாட்டில் கோயில்களுக்குச் செல்வோருக்கு ஆடைக் கட்டுப்பாடு போட்டுத் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் 4.4.2016 அன்று நீக்கி உத்தரவிட்டது. திருச்சி அக்கியம்பட்டி எனும் ஊரிலுள்ள கோயிலில், நாட்டுப்புற ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த ஒப்புதல் கோரிச் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விண்ணப்பம் தரப்பட்டது. அந்த விண்ணப்பத்தை 2015 நவம்பரில் உசாவிய தனி நீதிபதி, தமிழ்நாடு முழுவதும் 2016 சனவரி 1-ஆம் நாள் முதல் இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான…
திராவிடம் என்பது ஆரியல்லார் என்பதன் குறியீடு! – குளத்தூர் மணி
திராவிடம் என்பது தமிழ் என்பதன் திரிந்த வடிவம்தான்! ‘நாம் தமிழர் கட்சி’ முன் வைக்கும் கருத்துகள் குறித்துத் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் குளத்தூர் மணியிடம் இணையத்தளம் வழியாகக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்துள்ள மறுமொழிகள். பகலவன்: ‘நாம் தமிழர் கட்சி’யின் செயற்பாட்டு வரைவு படித்தீர்களா? படித்திருந்தால் அதைப்பற்றிய நிறை குறையைப் பகிர வேண்டுகிறேன்! குளத்தூர் மணி: ‘நாம் தமிழர் கட்சி’யின் செயற்பாட்டு வரைவு எமக்குக் கிடைக்கவில்லை. கிடைத்ததும் தேவையெனில் எழுதுவோம். பகலவன்: ஆந்திர, கருநாடக, கேரள மாநிலத்தவர்கள் தங்களைத் திராவிடர் என்று அடையாளப்படுத்துவது…
நா.கணேசன் சிறப்புச்சொற்பொழிவு : நிகழ்ச்சிப்படங்கள்
[பங்குனி 19, 2047 /ஏப்பிரல் 01, 2016 பிற்பகல் 3.00 தமிழ்த்துறை, சென்னைப்பல்கலைக்கழகம் பொழிவு : விண்கலங்கள் ஆய்வறிஞர் முனைவர் நா.கணேசன்: சங்கக்காலக்கலைகளில் மழுவாள் நெடியோன் தலைமை : முனைவர் அ.பாலு வாழ்த்துரை : கவிஞர் ஈரோடு தமிழன்பன் வரவேற்புரை : முனைவர் ய.மணிகண்டன் [பெரிதாகக்காணப் படங்களை அழுத்தவும்!] [embpicasa id=”6270073482500500321″]
நூலழகு பத்து – பவணந்தி முனிவர், நன்னூல்
நூலழகு பத்து சுருங்கச் சொல்லல், விளங்க வைத்தல், நவின்றோர்க்கு இனிமை, நனிமொழி புணர்த்தல், ஓசை உடைமை, ஆழம் உடைத்து ஆதல், முறையின் வைப்பே, உலகம் மலையாமை, விழுமியது பயத்தல், விளங்கு உதாரணத்தது ஆகுதல், நூலிற்கு அழகு எனும் பத்தே. சுருங்கச் சொல்லல் – சொற்கள் வீணாக விரியாது சுருங்கிநிற்கச் சொல்லுதலும் , விளங்கவைத்தல் – சுருங்கச் சொல்லினும் பொருளைச் சந்தேகத்துக்கு இடமாகாது விளங்க வைத்தலும் , நவின்றோர்க்கு இனிமை – வாசித்தவருக்கு இன்பத்தைத் தருதலும் , நன்மொழி புணர்த்தல் – நல்ல சொற்களைச் சேர்த்தலும்…
இலக்குவனார் இலக்கியப் பேரவை 9 ஆம்ஆண்டுவிழாவும் விருது வழங்கலும் – படங்கள்
பங்குனி 06, 2047 / மார்ச்சு 19, 2016 அம்பத்தூர், சென்னை [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.] [embpicasa id=”6266186694499551617″]
