குறள் கடலில் சில துளிகள் 17. பெருமிதத்துடன் வாழ்க! – இலக்குவனார்திருவள்ளுவன்

(குறள் கடலில் சில துளிகள் – 16. அறிவை உடைமையாக்குக!-தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 17.செருக்கும் சினமும் சிறுமையும் நீக்கிப் பெருமிதத்துடன் வாழ்க! செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம் பெருமித நீர்த்து (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: குற்றங்கடிதல், குறள் எண்: 431) அடுத்து வரும் குற்றங்கடிதல் முதலான ஆறு அதிகாரங்களையும் பேரா.சி.இலக்குவனார் ‘தள்ளற்பாலன சாற்றும் இயல்’ என்கிறார். இவற்றை நம் வாழ்விலிருந்து தள்ளிவிடுவதன் மூலம் நல்வாழ்வைக் கொள்ளலாம். செருக்கும் வெகுளியும் கீழ்மைப் பண்பும் இல்லாதவர் உயர்வு மேம்பாடானது என்கிறார் திருவள்ளுவர். தலைக்கனம், சினம், கீழ்மை முதலானவற்றில்…

சட்டச் சொற்கள் விளக்கம் 936 – 940 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 931 – 935 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 936 – 940 936. Assistant உதவியாளர்   அமைச்சுப்பணியில் கீழ்நிலையில் இருந்து இரண்டாம் நிலையில் – இளநிலை உதவியாளருக்கு மேல் நிலையில் உள்ள பணியிடம்.   சட்டத்துறையில் சட்ட உதவியாளர் அல்லது வழக்கு உதவுநர் எனக் குறிக்கப் பெறுகிறார்.   சட்ட ஆவணங்களை ஒழுங்கு படுத்தல், விசாரணையில் உதவுதல், சான்றுரைஞர்களிடம் நேர்காணல் மேற்கொள்ளல், வழக்குரைஞருக்கும் வழக்காளிக்கும் தொடர்பாளராக இருத்தல் முதலான பணிகளைப் பார்க்கிறார்.   ஒரு…

குறள் கடலில் சில துளிகள் – 16. அறிவை உடைமையாக்குக! : இலக்குவனார்திருவள்ளுவன்

(குறள் கடலில் சில துளிகள் : 15. வந்தபின் காப்பதைவிட வருமுன் காத்திடு! – தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 16. அறிவை உடைமையாக்கி எல்லாம் உடையவனாகத் திகழ்க! அறிவுடையார் எல்லாம் உடையர் அறிவிலார் என்னுடைய ரேனும் இலர் (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: அறிவுடைமை, குறள் எண்: 430) அறிவுடையார் எல்லா நலன்களும் உடையவர்; அறிவில்லாதவர் வேறு எச்செல்வம் பெற்றிருப்பினும் ஒன்றும் இல்லாதவரே ஆவார் என்கிறார் திருவள்ளுவர். உடையர்=உடைமையாகக் கொண்டவர். அறிவு மாணிக்கங்களை விட மிகுதியும் மதிப்பானது. நீங்கள் விரும்பும் எதனுடனும் அதை ஒப்பிட முடியாது(Wisdom is…

குறள் கடலில் சில துளிகள் – இலக்குவனார் திருவள்ளுவன்: 15. வந்தபின் காப்பதைவிட வருமுன் காத்திடு!

(குறள் கடலில் சில துளிகள் 14. அஞ்சவேண்டியதற்குஅஞ்சுவதேஅஞ்சாமையாகும்! –தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 15. வந்தபின் காப்பதை விட வருமுன் காத்திடு! எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை அதிர வருவதோர் நோய் (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: அறிவுடைமை, குறள் எண்: 429) எதிர் வருவதை முன்பே எதிர்நோக்கி – அறிந்து காக்க வல்ல அறிவு உடையவர்க்கு அவர் நடுங்கும் படி வரக்கூடிய துன்பம் இல்லை என்கிறார் திருவள்ளுவர். நடக்க இருப்பதை முன்கூட்டி உணர்பவர்கள் துன்பத்தைத் தடுப்பர் (Those who foresee the outcome will avoid suffering)…

விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 7 : இலக்குவனார்திருவள்ளுவன்

(விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 6 : இலக்குவனார்திருவள்ளுவன் : தொடர்ச்சி) விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 7 வணக்கம் ஐயா. வணக்கம். வாங்க, வாங்க! இன்றைக்கு என்ன பார்க்கப் போகிறோம்? ஐயா, உங்கள் புதினத்தின் மையக் கருத்து வளரும் தலைமுறையினர் மூத்த தலைமுறையினரைப் போற்றிப்பேண வேண்டும் என்பதுதானே. ஆமாம். ஆமாம். கூட்டுக் குடும்பமே இல்லாமல் போன இக்காலத்தில் கூட்டுக் குடும்பத்தின் நன்மையைக் கருதிச் செயற்பட வேண்டும். ஒரு குடும்பத்தில் மூன்று அண்ணன் தம்பியரும் ஒரு தங்கையும் உள்ளனர். மேலும், இவர்களின் சித்தியும் இங்கேயே உள்ளார். அவருக்குக்…

குறள் கடலில் சில துளிகள் 14. அஞ்சவேண்டியதற்குஅஞ்சுவதேஅஞ்சாமையாகும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

(குறள் கடலில் சில துளிகள் 13. தொலைநோக்குச் சிந்தனையே அறிவாகும்! – தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 14. அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவதே அஞ்சாமையாகும்! அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில் (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: அறிவுடைமை, குறள் எண்: 428) அஞ்சத்தக்கவற்றிற்கு அஞ்சாதிருத்தல் அறியாமை; அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுதல் அறிவுடையார் இயல்பு என்கிறார் திருவள்ளுவர். அஞ்சாமை உடையவர்கள் அஞ்ச வேண்டியதற்கு அஞ்சாமல் இருப்பதில்லை(Fearless people are not afraid to be afraid) என்கின்றனர் மனஅறிவியல் அறிஞர்கள். அஃதாவது அஞ்சவேண்டிய…

தமிழ்க்காப்புக்கழகம்: சிறப்புக் கூட்டம்: தொல்காப்பியமும் அகத்தியமும்

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு.   (திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௨௰௩ – 423) தமிழே விழி!                                                                                                  தமிழா விழி!              தமிழ்க்காப்புக்கழகம் சிறப்புக் கூட்டம்: என்றென்றும் வாழும் தொல்காப்பியமும் என்றும் இல்லா அகத்தியமும் இணைய வழி நிகழ்வு நாள் : மாசி 11, 2056 / 23.02.2025 ஞாயிறு காலை 10.00 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி / Passcode: 12345 வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன்        தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் சிறப்புரைஞர்கள் முனைவர் வா.நேரு மாநிலத்…

சட்டச் சொற்கள் விளக்கம் 931 – 935 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 926 – 930 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 931 – 935 931.  Association   கூட்டு   இயைபு   ஒன்று சேர்‌ அமைப்பு   கூடுதல், இணைதல், சேர்த்தல்,  சங்கம், கழகம், குழாம்  தோழமை, நட்பு, நெருங்கிய பழக்கம், கருத்துத்தொடர்பு எனப் பல பொருள்கள்.   சட்ட அடிப்படையில், ஒரு சங்கம் என்பது ஒரு பொதுவான நோக்கம் அல்லது ஆர்வத்தைப் பகிர்ந்து கொள்வோரின் குழுவாகும்.    இது மற்றொருவருடன் தொடர்பு கொள்வது அல்லது…

குறள் கடலில் சில துளிகள் 13. தொலைநோக்குச் சிந்தனையே அறிவாகும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

(குறள் கடலில் சில துளிகள் 12. உலகத்தார்வழியில்செல்வதேஅறிவு! – தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள், 13. தொலைநோக்குச் சிந்தனையே அறிவாகும்! அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார் அஃதறி கல்லா தவர் (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: அறிவுடைமை, குறள் எண்: 427) அறிவுடையார் எதிர்கால நிகழ்வை அறியக்கூடியவர். அறிவில்லாதவர் அறியும் திறன் இல்லாதவர் என்கிறார் திருவள்ளுவர். அறிகல்லாதவர்=அறிவதைக் கல்லாதவர்கள் = அறியமாட்டாதவர் அல்லது அறியமுடியாதவர்கள். அறிக + கல்லாதவர் =(அறிக என்பதன் ஈற்று எழுத்தான க மறைந்து) அறிகல்லாதவர் என்றும் சொல்லலாம். “கண்ணுக்கு முன்னால்…

குறள் கடலில் சில துளிகள் 12. உலகத்தார்வழியில்செல்வதேஅறிவு! – இலக்குவனார்திருவள்ளுவன்

(குறள் கடலில் சில துளிகள் 11. உலகம்தழுவியதேஅறிவு! – தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 12. உலகத்தார் வழியில் செல்வதே அறிவு! எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு.  (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: அறிவுடைமை, குறள் எண்: 426) உலகம் எவ்வாறு இயங்குகிறதோ அவ்வழியில் இயங்குவதே அறிவு என்கிறார் திருவள்ளுவர். ஆள்வோர்கள் உலகம் தழுவிச் செல்லும் அறிவை இழப்பதாலேயே போர்கள் உண்டாகின்றன என வரலாற்றிஞர்கள் கூறுகின்றனர். பரிமேலழகர், ‘உலகத்தையெல்லாம் யான் நியமித்தலான் என்னை நியமிப்பாரில்லை,’ எனக் கருதித்தான் நினைத்தவாறே ஒழுகின்,…

விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 6 : இலக்குவனார்திருவள்ளுவன்

(விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 5 : தொடர்ச்சி) விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 6 பெரிய திரை என்று மட்டுமல்ல. சின்ன திரைக் கலைஞர்களையும் கதைகளில் வருவதுபோல் காட்சிகளை அமைத்து விடுவோம். அது மட்டுமல்ல.ஒரு தொலைக்காட்சித் தொடரையும் மற்றொரு தொடரையும் அல்லது மற்ற இரு தொடர்களையும் இணைத்து ஒன்றாகக் காட்டுவோம். தொலைக்காட்சித் தொடர்களை இணைத்துக் காட்டுவீர்களா? ஆமாம். வெவ்வேறு தொடர்களில் உள்ள கதைமாந்தர்கள் சந்திப்பது போலும் ஏதேனும் சிக்கல்களைச் சேர்ந்து அவிழ்ப்பதுபோலும் உதவிக் கொள்வதுபோலும் கதைகளை அமைப்போம். குடும்பத்தினர் சேர்ந்து விளையாடுவதாகவும் காட்சிகள் வைப்போம். பாட்டுக்குப்…

குறள் கடலில் சில துளிகள் 11. உலகம்தழுவியதேஅறிவு! – இலக்குவனார் திருவள்ளுவன்

(குறள் கடலில் சில துளிகள் 10. கேட்பதிலும் சொல்வதிலும் புரிதல் வேண்டும்! – தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 11. உலகம் தழுவியதே அறிவு! உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும் கூம்பலும் இல்லது அறிவு. (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: அறிவுடைமை, குறள் எண்: 425) உலகத்தைத் தழுவிச் செல்லுதல் அறிவு. இன்பத்திற்கு மகிழ்தலும் துன்பத்திற்கு வருந்தலும் அறிவாகா என்கிறார் திருவள்ளுவர். துன்பத்திலிருந்து அறிவு வரும். ஆனால், அறிவு துன்பமோ இன்பமோ தராது என்கின்றனர் கல்வியியலறிஞர்கள். தழீஇயது என்பது  உலகத்தாரைத் தழுவிச் செல்லுதல் –…