5. ஆட்சித்தமிழ்ச் செயலாக்கப் புது ஆணைத் தொகுப்பு வெளியிடுக! – இலக்குவனார் திருவள்ளுவன்

(4. தமிழில் உள்ளனவே செல்லத்தக்கன என அறிவித்திடுக!– தொடர்ச்சி) தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 5. ஆட்சித்தமிழ்ச் செயலாக்கப் புது ஆணைத் தொகுப்பு வெளியிடுக! தமிழ்நாடு ஆட்சிமொழிச்சட்டம் 1956 நிறைவேற்றப் பட்டதிலிருந்து  இதுநாள் வரை தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கத்திற்காகப் பல்வேறு அரசாணைகள், தொடர்பான சுற்றறிக்கைகள், மடல்கள், வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்வளர்ச்சித்துறை இணையத்தளத்தில் 02.08.1968 முதல் 02.11.2021 வரையிலான 120 ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றுள் சில முன்னர் வெளியிடப்பட்டவற்றையே வலியுறுத்திப் பின்னரும் வெளியிடப்பட்டனவாக இருக்கின்றன. இவ்வாறு மீண்டும் மீண்டும் வெளியிடப்பட்டுள்ளமையே தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் எந்த அளவில்…

வேற்றுமையின் வித்தே சனாதனம்!- இலக்குவனார் திருவள்ளுவன்

வேற்றுமையின் வித்தே சனாதனம்! “வேற்றுமையில் ஒற்றுமை என நாட்டைப் பற்றிக் கூறுகிறோம். சனாதனத் தருமமும் அதையேதான் கூறுகிறது. இந்தியாவின் தலைமைத்துவம் ஆன்மிகத்தின் மீது நம்பிக்கை கொண்டதாக இருக்க வேண்டும். ஆன்மிகத்தில் வளர சனாதனத் தருமம் வழி முறையாக இருக்கும்” என உயர்ந்த பொறுப்பில் இருக்கும் பெரியர் ஒருவர் முத்து உதிர்த்துள்ளார். அறிந்தே சொல்லப்படும் பொய் என்பதால் அவருக்கு விளக்கம் சொல்லத் தேவையில்லை. தமிழ்நாட்டின் தலைவர்கள் பலரும் அவருக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். எனினும் இதுபோன்ற பொய்களை நம்பும் அப்பாவிகள் உள்ளனர். அவர்களை வைத்துத்தான் பொய்களை…

தமிழ்க்காப்புக்கழகம்- ஆளுமையர் உரை 4,5 & 6 : இணைய அரங்கம்

தமிழ்க்காப்புக்கழகம் ஆளுமையர் உரை 4,5 & 6 : இணைய அரங்கம் ஆனி 02 , 2053 ஞாயிறு சூன் 19, 2022, காலை 10.00 ஆளுமையர் உரைகள் :  தமிழும் நானும் மு.முத்துராமன் தலைவர், திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம். பொதுச்செயலாளர், அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப்பேரவை இதழாளர் மும்பை குமணராசன் நிறுவனத்தலைவர், இலெமுரியா அறக்கட்டளை, மும்பை  தில்லி முகுந்தன் செயல் தலைவர், அனைத்திந்திய தமிழ்ச்சங்க பேரவை கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட…

4. தமிழில் உள்ளனவே செல்லத்தக்கன என அறிவித்திடுக! – இலக்குவனார் திருவள்ளுவன்

(3. தமிழ் வளர்ச்சி இயக்ககத்தினைத் தட்டி எழுப்புக! – தொடர்ச்சி) தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 4. தமிழில் உள்ளனவே செல்லத்தக்கன என அறிவித்திடுக! அலுவலகங்களில் தமிழை முழுமையாகப் பயன்படுத்த வேண்டியது குறித்து ஆணைகள், சுற்றறிக்கைகள், அறிக்கைகள் எனப் பலவும் வேண்டிய மட்டும் வந்துள்ளன;  வந்து கொண்டுள்ளன. இருப்பினும் முழுப்பயனில்லை. உண்மையிலேயே  ஆட்சிமொழிச்சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றால், ஒரே ஓர் ஆணை மட்டும் பிறப்பித்தால் போதும். அந்த ஆணை, தமிழில் உள்ள செயல்முறை ஆணைகள், அலுவலக ஆணைகள், நிதி ஆணைகள், பட்டியல்கள், படிவங்கள், ஒப்பந்தங்கள்,…

3. தமிழ் வளர்ச்சி இயக்ககத்தினைத் தட்டி எழுப்புக! – இலக்குவனார் திருவள்ளுவன்

(2. ஆட்சித்தமிழ்த் துறை எனப் பெயர் மாற்றுக! – தொடர்ச்சி) தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 3. உறங்குகின்ற தமிழ் வளர்ச்சி இயக்ககத்தினைத் தட்டி எழுப்புக! தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க தூங்காது செய்யும் வினை (திருவள்ளுவர், திருக்குறள் 672) உரிய காலத்தில் செய்ய வேண்டியவற்றைக் காலந்தாழ்த்திச் செய்ய முற்படுவது, தனக்குரிய பணிகளைச் செய்யாமல் தட்டிக் கழிப்பது ஆகியவற்றிற்கு விருது தர வேண்டும் என்றால் தமிழ் வளர்ச்சித் துறைக்குத்தான் தர வேண்டும். எனவே, சிறப்பாகத் தமிழ்வளர்ச்சித்துறையைக் கொண்டு செல்ல வேண்டும் என்னும் முனைப்பிலுள்ள இத்துறையின்…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1713-1719 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1712 இன் தொடர்ச்சி) 713. வானகத் தொல்லியல் Astroarcheaology 1714. வானக Astro – வான், விண், அசுரோ, சோதிடம், உடு எனக் கூறப்படுகின்றன. அசுரோ என்பது ஒலிபெயர்ப்புச் சொல். சோதிடம் தமிழ்ச்சொல்லல்ல. உடு என்பதற்கு விண்மீன் என்பது பொருள். எனவே, இந்த இடத்தில் உடு என்பது பயன்படுத்தப்பட வேண்டா. வானின் அகத்தே உள்ள பொருள்கள் என்னும் பொருளில் வானகம் எனலாம். முன்னொட்டுச் சொல்லிற்கு வானக  – Astro என்று குறிக்கலாம்.     Astro   1715….

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1712 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1707-1711 இன் தொடர்ச்சி) 1712. வானகவியல்   Astronomy – வானியல், வானசாத்திரம், ககோளசாத்திரம், வான நூல், வான வியல், வானவியல் வான நூல், வானூல், வான்கோள ஆய்வியல், விண்ணியல், கணிதசாத்திரம், சோதிட நூல், காலக்கணிதம், காலக் கணனம்பற்றிய வானசாத்திரம், சோதிசாத்திரம் எனக் கூறப்படுகின்றது என்பதைப் புரிந்து கொள்ளலாம். இவற்றுள் வானியல் என்பதையும் கணனம்(சோதிடம்) என்பதையும் Astronomy குறிப்பிடுகிறது. Ástron என்னும் கிரேக்கச் சொல்லுக்கு வானிலுள்ள பொருள்கள் எனப் பொருள். அஃதாவது, கோள்கள், நட்சத்திரங்கள் முதலியவை. Astrologia என்னும்…

ஆளுமையர் உரை 2 & 3 : பேரா. வெ.அரங்கராசன் & புதிய மாதவி

தமிழ்க்காப்புக்கழகம் ஆளுமையர் உரை 2 & 3 : இணைய அரங்கம் நாள்: வைகாசி 22 , 2053 ஞாயிறு சூன் 05.2022 காலை 10.00 ஆளுமையர் உரைகள் :  எழுத்தும் நானும் பேராசிரியர் வெ.அரங்கராசன் எழுத்தாளர் புதிய மாதவி, மும்பை கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)                                வரவேற்புரை: தமிழாசிரியை உரூபி                           தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன் தொகுப்புரை: தோழர் தியாகு நன்றியுரை: …

தமிழ்ப்பெயர் சூட்டாதாரை இரும்புக் கரம் கொண்டு அடக்கிடுக! – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ்ப்பெயர் சூட்டாதாரை இரும்புக் கரம் கொண்டு அடக்கிடுக! உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது கொள்வாரும் கள்வரும் நேர் (திருவள்ளுவர், திருக் குறள் 813) பயன்கருதிப் பழகுநருக்கும் பரத்தையருக்கும் கள்வருக்கும் ஒப்பாகத் தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தாமல் பிற மொழிச்சொற்களைப் பயன்படுத்துவோரைக் கூறலாம். ஏனெனில் அவர்கள் தமிழ்ச்சொற்களை மக்கள் பயன்படுத்த இயலா வண்ணம் கவர்ந்து அகற்றி விடுகிறார்கள். பொதுநலம் பார்க்காமல் பிறருக்குப் பொதுவாக இருந்து புன்னலம் தோயும் விலைமக்களுக்கு ஒப்பாகத் தமிழ் நலம் பார்க்காமல் வாழ்கிறார்கள். குமரி முதல் இமயமலை வரை வழங்கி வந்த தமிழ் மொழி,…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1707-1711 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1701-1706 இன் தொடர்ச்சி) 1707. வாழ்க்கைப் புள்ளியியல்   இன்றியமையாத புள்ளி விவரங்கள், உயிர்ப் புள்ளியியல், உயிர்ப் புள்ளிவிவரவியல், பிறப்பு இறப்பு விவரங்கள், உயிர்நிலைப் புள்ளிவிவரம், குடிவாழ்க்கைப் புள்ளியியல், குடிசனப் புள்ளிவிபரம், சனன மரணக் கணக்கு, சனங்களின் பிறப்பிறப்புப் பதிவுப் புத்தகம், பிறப்பிறப்பு விபரங்கள், பிறப்பிறப்புப் புள்ளிகள், பிறப்பு இறப்பு விவரங்கள், பிறப்பு-இறப்புப் புள்ளி விவரங்கள், முதன்மைப் புள்ளிவிவரங்கள், வாழ்க்கைப் புள்ளிவிபரம், வாழ்க்கைப் புள்ளிவிவரவியல் எனப் பலவாறாகக் கூறப் படுகின்றது.   உயிர், உயிர் நிலை, முதலானவற்றைக் கையாள்…

திராவிட ‘மாடல்’ ஏன்? முன்முறை அல்லது நன்முறை என்று சொல்லலாமே! -இலக்குவனார் திருவள்ளுவன்

திராவிட ‘மாடல்’ ஏன்? முன்முறை அல்லது நன்முறை என்று சொல்லலாமே! தமிழுக்குத் தலைமை அளிக்கும் வகையில் செயல்படுவதைத் தமிழக அரசு இலக்காகக் கொண்டுள்ளது. ஆனால், சொற்கள்தாமே செல்வம். நாம் தமிழ்ச்சொற்களைக் கைவிடலாமா? பிற மொழிச் சொற்களை இறக்குமதி செய்துவிட்டுத் தமிழை வளர்க்கிறோம் என்பதில் பயனில்லையே! இதற்கு எடுத்துக்காட்டாகத் ‘திராவிட மாடல்’ என்று பயன்படுத்துவதைக் கூறலாம். கேம்பிரிட்சு பல்கலைக்கழக அச்சக வெளியீடாக செட்டம்பர் 2011 இல் உருவாக்கப்பட்ட ஒரு நூல் நவம்பர் 25, 2011 இல் வெளிவந்தது. அந்த நூலின் பெயர் “திராவிட மாதிரி: தமிழ்நாட்டின்…