மு.பாலசுப்பிமணியன் எழுதிய ‘அன்னப்பறவை’ சிறுவர் பாடல் நூலுக்கு விருது
புதுவை மு.பாலசுப்பிமணியன் எழுதிய
‘அன்னப்பறவை’ சிறுவர் பாடல் நூலுக்குக்
குன்றக்குடி அடிகளார்விருது
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், புது நூற்றாண்டு (என்.சி.பி.எச்.) புத்தக நிறுவனம் இணைந்து விருது வழங்கும் விழா – 2016 நடத்தின. புதுக்கோட்டையில் நடைபெற்ற இவ் விழாவில் சிறந்த நூல்களுக்காண விருதுகள் பல துறைகளில் வழங்கப்பட்டன. சிறுவர் இலக்கியத்துக்கான தவத்திரு குன்றக்குடி அடிகளார் நினைவு விருது புதுவைத் தமிழ்ச் சங்கச் செயலர் மு.பாலசுப்பிமணியன் எழுதிய ‘அன்னப்பறவை‘ சிறுவர் பாடல் நூலுக்கு வழங்கப்பட்டது.
தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் முனைவர் க.பாசுகரன் விருதினை வழங்கினார்.
விழாவில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத் தலைவர் சி.சொக்கலிங்கம், பொதுச் செயலாளர் முனைவர்.இரா.காமராசு, முனைவர் .இராமச்சந்திரன், என்.ஆர்.சீவா, கவிஞர்.ஞா.சிங்கமுத்து, கவிஞர் மீரா.செல்வக்குமார், எழுத்தாளர் சந்திரகாந்தன், பெருமன்ற / புத்தக நிறுவனப் பொறுப்பாளர்கள், படைப்பாளர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்
– புதுவைச் செய்தியாளர்
Leave a Reply