வேட்பாளர்களும் வாக்காளர்களும் பங்கேற்க வேட்பாளர் மேடை
வேட்பாளர்களும் வாக்காளர்களும் பங்கேற்க
வேட்பாளர் மேடை
வரும் சட்டமன்றத்தேர்தலில்(2016) தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க ‘வேட்பாளர் மேடை’ என்னும் புதிய பகுதி (அகரமுதல மின்னிதழில்) தொடங்கப்படுகிறது.
வாக்காளர்களும் தங்கள் தொகுதிக்கு எத்தகைய வேட்பாளர் வரவேண்டும் என்று தங்கள் விருப்பத்தைத்தெரிவிக்கலாம்.
தத்தம் ஒளிப்படம், முகவரி, தொலை பேசி, அலைபேசி எண்கள் விவரங்கள், மின்னஞ்சல், சார்ந்துள்ள கட்சி அல்லது அமைப்பு அல்லது தற்சார்பு (சுயேச்சை) விவரம், தொகுதி விவரம், தேர்தல் சின்னம் தெரிவிக்கப்படவேண்டும்.
தொகுதிக்கான தேவைகள், தொகுதியில் நிறைவேற்றக் கருதியுள்ள திட்டங்கள், இதற்கு முன் மக்கள் சார்பாளராக இருந்திருப்பின் அல்லது ஏதும் பொறுப்பில் இருந்திருப்பின், அப்பொழுது் ஆற்றிய பணிகள், அப்பொழுது நிறைவேற்றமுடியாமல் போனவற்றை மீண்டும் எவ்வாறு நிறைவேற்றலாம் என்பது குறித்த திட்டம் ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும்.
தமிழ்வழிக்கல்வியையும் தமிழ் வழிபாட்டையும் நடைமுறைப்படுத்த ஆவன செய்வேன் என்ற உறுதிமொழியை இறுதியில் தெரிவிக்க வேண்டும்.
வாக்காளர்கள் தங்கள் ஒளிப்படத்துடன் முதலில் குறித்த விவரங்களைத் தெரிவிக்க வேண்டும்.
எத்தகையவர் தம் தொகுதிக்குத் தேவை என்பதையும் குறிப்பிட்ட வேட்பாளரை ஆதரிப்பவராக இருப்பின், அதற்கான காரணங்கள் ஆகியவற்றையும் பெயர், சின்னம் முதலான விவரங்களுடன் குறிக்க வேண்டும்.
இவை 3 பக்க அளவில அமைய வேண்டும்.
அனுப்பவேண்டிய மின்வரி : madal@akaramuthala.in
ஆசிரியர், அகரமுதல மின்னிதழ்
Leave a Reply