பூங்கொடி 17 – கவிஞர் முடியரசன்: வெருகன் நய வஞ்சகம்

(பூங்கொடி 16 – கவிஞர் முடியரசன்: உலுத்தர் தொல்லை – தொடர்ச்சி) பூங்கொடி பூங்கா புக்க காதை வெருகன் நய வஞ்சகம் நீறுறு நெற்றியன் நிகரிலாச் செல்வன் ஏறெனப் பொலிவுறும் இளைஞன் அழகன் காண்போர் மயங்கும் காட்சியன் உலகில்அவ்     70 ஆண்போல் ஒருவனைக் காணுதல் அரிது பிறர்மனங் கவரப் பேசும் வன்மையன் அறமுறு செயலே ஆற்றுவான் போல எண்ணும் வகையில் இருப்பவன் வெருகன் நண்ணி என்னை நயவஞ் சகமாக் கடத்திச் சென்றான் கதறியும் பயனிலை விடலை தமியளை  விழ்ந்திடச் செய்தனன்; அவன்மொழி நம்பி அவன்வழிப்…

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம்: 865-880

(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம்: 851-864 – தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 865-880 (சொல், மொழி மாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு.  கி.பி.  1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) நூல்        :               மோசூர் ஆலடிப் பிள்ளையார் புகழ்ப் பத்து – (1940)                                 மூலமும் உரையும் நூலாசிரியர்         :               மோசூர் கந்தசாமி முதலியார், பி.ஏ., எம்.ஆர். ஏ.செ..                                 பச்சையப்பன் கல்லூரி (தொடரும்)உவமைக்கவிஞர் சுரதாதமிழ்ச்சொல்லாக்கம்

ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 17 : நான் எந்தக் கட்சியையும் சேராதது

(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 16 : கோயில் தருமகருத்தா வேலை – தொடர்ச்சி) ‘என் சுயசரிதை’ அத்தியாயம் 10. நான் எந்தக் கட்சியையும் சேராதது சென்னையில் பல கட்சிகள் உண்டு என்பது எல்லாரும் அறிந்த விசயமே. முக்கியமாக காங்கிரசுக் கட்சி, நீதிக் கட்சி என்று இரண்டு பெரிய கட்சிகளைப் பற்றி அறியாதோர். கிடையாதல்லவா? இவைபற்றிய என் விருத்தாந்தங்களை இங்கு எழுத விரும்புகிறேன்.. நான் கல்லூியில் படித்தபோது காங்கிரசுக் கூட்டம் சென்னையில் கூடிய போது ஒரு தொண்டராக இருந்தேன். இது நேர்ந்தது 1894-ஆம் வருசம்….

உ.வே.சா.வின் என் சரித்திரம் 55 : தளிரால் கிடைத்த தயை

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 54 : அத்தியாயம் 29. தந்தையார் விடைபெற்றுச் செல்லுதல் 2/2 – தொடர்ச்சி) என் சரித்திரம்அத்தியாயம் 30. தளிரால் கிடைத்த தயை சவேரிநாத பிள்ளையிடம் நைடதம் பாடங்கேட்டு வரும்போது இடையிடையே நான் அவரைக் கேள்விகேட்பதை என் ஆசிரியர் சில சமயம் கவனிப்பதுண்டு. என் கேள்விக்கு விடை சொல்ல முடியாமல் அவர் சும்மா இருக்கும்போது பிள்ளையவர்கள், “என்ன சவேரிநாது, இந்த விசயங்களை எல்லாம் நீ தெரிந்துகொள்ள வேண்டாமா? அவர் தாமே படித்து விசயத்தைத் தெரிந்துகொண்டிருக்கிறாரே” என்று சொல்லுவார். அப்போது எனக்கு ஒரு…

தமிழ் வளர்த்த நகரங்கள் 8 – அ. க. நவநீத கிருட்டிணன்: இலக்கிய மதுரை 2/2

(தமிழ் வளர்த்த நகரங்கள் 7 – அ. க. நவநீத கிருட்டிணன் : இலக்கிய மதுரை 1/2 தொடர்ச்சி) அத்தியாயம் 4. இலக்கிய மதுரை தொடர்ச்சி புதுப்புனல் விழா நடைபெறும் நன்னாளில் இத் துறைக்கண் குழலும் யாழும் முழவும் ஆகிய பல்வகை இன்னியங்கள் முழங்கும். அரசனால் தலைக்கோல் அரிவையென விருதுபெற்ற ஆடல் மகளிரும் பாடல் பாணரும் அத்துறையைச் சார்ந்த பொழிலிடத்தே ஆடல் நிகழ்த்துவர். நாடக மகளிரின் ஆடல் ஒலியும், இன்னியங்களின் பேரொலியும் கரையில் வந்து மோதும் வெள்ளத்தின் அலையொலியுடன் சேர்ந்து இடிமுழக்கம் போல் ஒலிக்கும்….

பூங்கொடி 16 – கவிஞர் முடியரசன்: உலுத்தர் தொல்லை

(பூங்கொடி 15 – கவிஞர் முடியரசன்: பூங்கொடி அழுகையை அருண்மொழி மாற்றுதல்- தொடர்ச்சி) பூங்கொடி உலுத்தர் தொல்லை கடைத்தெரு வழியே காரிகை தனியாய் ஏகின் சிற்றினம் எதம் விளைக்கும் ;    50 நாகிளம் பருவ நல்லியல் மாதர் உறுதுணை யின்றி ஊரில் வெளிச்செலின் நரியென வேட்டை நாயெனத் தொடர்ந்தே ஊறுகள் செய்யும் உலுத்தர் பல்கினர் மக்கட் பண்பு மங்குதல் கண்டோம்           55 தெக்கணம் இப்படித் தேய்வது நன்றாே ? அல்லியின் வரலாறு வளநகர் ஈங்குநான் வந்தது கேளாய் களமர் கெழுமிய கண்கவர் பொழில்சூழ் மயில்நகர்…

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம்  851-864

(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 831-850– தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 851-864 (சொல், மொழி மாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 851. வர்ச(ஷ)ம் –           ஆண்டு 852. கசா(ஷா)யம்         –           பொருட்களை ஊறக்கொண்டது 853. கனகம், சு(ஸ்)வர்ணம்        –           பொன்…

ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 16 : கோயில் தருமகருத்தாவாக வேலைபார்த்தது

(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 15 : 55 வயதுக்கு மேற்பட்ட சரித்திரம் – தொடர்ச்சி) 9. நான் கோயில் தருமகருத்தாவாக வேலைபார்த்தது எனக்கு ஞாபக சக்தி உ.தித்த காலமுதல், சாதாரணமாக என் விளையாட்டெல்லாம் பெரும்பாலும் பிள்ளையார், மீனாட்சி அம்மன், வெங்கடேசப் பெருமாள் இவர்களுடைய செப்பு அல்லது மர விக்குரகங்களை வைத்து அவற்றுக்கு அலங்காரம் செய்து, உற்சவம் செய்வதேயாம். சனிக்கிழமை வந்தால், முன்னாள் வெள்ளிக்கிழமை என் தாயார் விசேட பூசை செய்த பூக்களை வைத்துக்கொண்டு நான் என் நேர் மூத்தவராகிய ஆறுமுகத்துடன் சாமி தூக்கி…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 54 : அத்தியாயம் 29. தந்தையார் விடைபெற்றுச் செல்லுதல் 2/2

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 53 : அத்தியாயம் 29. தந்தையார் விடைபெற்றுச் செல்லுதல் 1/2 – தொடர்ச்சி) அத்தியாயம் 29. தந்தையார் விடைபெற்றுச் செல்லுதல் 2/2 அவ்வூரிலும் அயலூரிலும் இருந்த சங்கீத வித்துவான்கள் பாரதியாரை அடிக்கடி பார்க்க வருவார்கள். மாயூரத்தில் சாத்தனூர்ப் பஞ்சுவையர், கோட்டு வாத்தியம் கிருட்டிணையர், திருத்துறைப்பூண்டி பாகவதர், பெரிய இராமசாமி ஐயர் முதலிய சங்கீத வித்துவான்கள் இருந்தனர். வேதநாயகம் பிள்ளை முன்சீபாக இருந்தமையால் அவரிடம் உத்தியோகம் பார்த்த குமாசுத்தாக்களும் வக்கீல்களும் அவருடைய பிரியத்தைப் பெறும்பொருட்டு அவர் இயற்றிய கீர்த்தனங்களைப் பாடுவார்கள். அதற்காகச்…

தமிழ் வளர்த்த நகரங்கள் 7 – அ. க. நவநீத கிருட்டிணன் : இலக்கிய மதுரை

(தமிழ் வளர்த்த நகரங்கள் 6 – அ. க. நவநீத கிருட்டிணன் : . மதுரையின் மாண்பு தொடர்ச்சி) அத்தியாயம் 4. இலக்கிய மதுரை மாங்குடி மருதனார் காட்டும் மதுரை தென்னகத்தின் தொன்னகரும் தமிழகத்தின் தலைநகருமாகிய மதுரையை இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட சங்கப் புலவர்கள் முதல் இற்றை நாள் புலவர்கள் ஈறாகப் பலரும் புகழ்ந்து பாடியுள்ளனர். மதுரை மாநகரின் மாண்பினை விரிவாக எடுத்து விளக்கும் இலக்கியங்களும் பலவுள, அவற்றுள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன மதுரைக்காஞ்சி, பரிபாடல், சிலப்பதிகாரம், திருவிளையாடற்புராணம் என்னும் நான்கு நூல்களுமாகும். கடைச்சங்கத் தொகை…

தமிழ்ப் பெரியார் திரு. வி. கலியாண சுந்தரனார் , 1. தமிழ்க்கலை

(தமிழ்க்கலை (சொற்பொழிவுகள்): முன்னுரை – க. அன்பழகன் – தொடர்ச்சி) 1. தமிழ்க்கலை (சென்னை  ஒய்.எம்.சி.ஏ. பட்டி மன்ற முதல் ஆண்டு நிறைவிழாவில் பேசியது) தமிழ் நாட்டில் சில காலமாகப் புத்துணர்ச்சி தோன்றியுள்ளது. அவ்வுணர்ச்சி ஆக்கத்திற்குப் பயன்படுமாக! இத்தகைய பட்டிமன்றங்கள் பல இந்நாட்டில் காணப்படல் வேண்டும். இயற்கைக்கு மாறான கொள்கைகளை அழித்துவிடுங்கள். ஆனால், இயற்கை நெறிப்பட்ட கொள்கைகள் இன்று அழிக்கப்பட்டு வருதலைக்காண வருந்துகிறேன். அது கூடாது. இத்துறையில் சிறப்பாக மகளிர் முயற்சி செய்தல் வேண்டும். ஆடல், பாடல், நகைச்சுவை இவை பெரிய கலைகளாம். என்…

பூங்கொடி 15 – கவிஞர் முடியரசன்: பூங்கொடி அழுகையை அருண்மொழி மாற்றுதல்

(பூங்கொடி 14 – கவிஞர் முடியரசன்: பூங்கொடி அழுகை – தொடர்ச்சி) பூங்கொடி அழுகையை அருண்மொழி மாற்றுதல் பூங்கொடி கண்ணிர் புத்தகம் நனைத்திட ஆங்கது கண்ட அருண்மொழி வெதும்பிக் கண்ணிர் மாற்றிக் கவலையை ஆற்ற எண்ணினள் குறுகி, ஏனோ கலங்கினை? மக்கள் கலக்கம் மாற்றிடல் ஒன்றே  25 தக்கதென் றெண்ணிச் சார்ந்தனம் ஈண்டு ; நாமே கலங்குதல் நன்றாே ? நம்பணி ஆமோ பூங்கொடி! அவலம் விட்டொழி மலர்வனம் சென்று மாற்றுக் கவலை அலர்பூங் காவுள் ஆறுதல் கிட்டும் ; 30 பூம்பொழில் தந்திடும்…