அகல் விளக்கு – மு.வரதராசனார்: 58
(அகல் விளக்கு – மு.வரதராசனார். 57. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 24 ஏதாவது ஒரு வேலை வேண்டும் வேண்டும் என்று மாலன் அடிக்கடி கடிதம் எழுதிக் கொண்டிருந்தான். நண்பராகிய நகர்மன்றத் தலைவரிடம் அவனுடைய நிலையை எடுத்துரைத்தேன். உள்ளூரிலே ஒன்றும் இல்லையே என்று அவர் வருந்தினார். அவருடைய பொதுத் தொண்டு காரணமாகச் சென்னையில் அவருக்கு நல்ல செல்வாக்கு இருந்த காரணத்தால் அங்காவது ஒரு வேலை தேடித் தருமாறு வேண்டிக் கொண்டேன். அவ்வாறே அவர் அடுத்த முறை சென்னைக்குச் சென்றபோது இதே கூட்டுறவுத் துறையில் நூறு…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 914 – 927 இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 895 – 913 இன் தொடர்ச்சி) 914. நகரக மானிடவியல் Urban Anthropology 915. நகரகப் பொறியியல் Urban Engineering 916. நகரக் குமுகவியல் Urban sociology 917. நகர வளைசலியல் Urban Ecology 918. நகரப் புவியியல் Urban geology 919. நகராட்சிப் பொறியியல் Municipal Engineering 920. நகையியல் நகை என்பது இங்கே நகைச்சுவையைக் குறிக்கிறது. Humorology 921. நஞ்சியல் நச்சூட்டவியல், விடவியல், நச்சாய்வியல், நச்சியல், நச்சுயியல், நச்சுவியல், நச்சூட்டாய்வு நூல்,…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 895 – 913 இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 876 -894 இன் தொடர்ச்சி) 895. தொல்லியல் Archaeology 896. தொழிலக உளவியல் Industrial Psychology 897. தொழிலக நுண்ணுயிரி யியல் Industrial Microbiology 898. தொழிலக மின்னணுவியல் Industrial Electronics 899. தொழிலக வானிலை யியல் Industrial Meteorology 900. தொழிலக வேதி யியல் Industrial Chemistry 901. தொழிலகக் குமுகவியல் Industrial Sociology 902. தொழிலகப் பொருளியல் Industrial Economics 903. தொழிலகப் பொறி யியல் Industrial Engineering 904. தொழில்முனைவோரியல் கெளவை என்றால்…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 33
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 32 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் 13 பாளையாந் தன்மை செத்தும் பாலனாந் தன்மை செத்தும்காளையாந் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும்மீளும் இவ்வியல்புமின்னே மேல்வரும் மூப்பும் ஆகிநாளும் நாம் சாகின்றோமால் நமக்கு நாம் அழாததென்னோ? — குண்டலகேசி வாழ்க்கையின் பொருளடக்கம் போல் வகையாக வனப்பாக அமைந்த வீதி அது. மேலக் கோபுரத்திலிருந்து மதுரை நகரத்து இரயில் நிலையம் வரையிலுள்ள வீதிக்குப் பகலும் இல்லை இரவும் இல்லை. எப்போதும் ஒரு கலகலப்பு. எப்போதும் ஒரு பரபரப்பு. கையில்…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 876 -894 இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 868 – 875 இன் தொடர்ச்சி) 876. தையல் நுட்பியல் Stitch technology 877. தொகுப்பு வானிலையியல் Synoptic Meteorology(1) 878. தொடரியல் Phraseology 879. தொடரி யியல் Latin இலத்தீன் சொற்களான ferrum, equus என்பனவற்றிற்கு முறையே இரும்பு, குதிரை என்று பெயர். இரும்புக்குதிரை என்பது தொடர்வண்டியைக், குறிப்பாக அதன் பொறியைக்குறிக்கிறது. தொடர்வண்டி என்பதன் இன்றைய வடிவமே தொடரி என்பது. Ferroequinology 880. தொடர்கொலை யியல் இலண்டனில் வெண்கோயில் (Whitechapel) நகரில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த…
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.36-40
(இராவண காவியம்: 1.2.31-35 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 2. தமிழகப் படலம் குறிஞ்சி 36. அடுப்பிடு சாந்தமோ டகிலின் நாற்றமும் துடுப்பிடு மைவனச் சோற்றி னாற்றமும் மடுப்படு காந்தளின் மணமுந் தோய்தலாற் கடைப்படு பொருளெலாங் கமழுங் குன்றமே. 37. தண்டமி ழகமெனுந் தாயின் மங்கலங் கொண்டணி விழவயர் குறிச்சி முன்றிலிற் றொண்டக முழங்கிடத் தோலின் யாக்கையர் கண்டெனு மொழிச்சியர் களிப்ப வாடுவர். 38. சந்தன முன்றிலிற் றங்கை பாவையை மந்திகை செய்துள மகிழச் செய்யுமால்; குந்தியே கடுவனுங் குழந்தை முன்மட…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 868 – 875 இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 855 – 867 இன் தொடர்ச்சி) 868. தேராய்வு உளவியல் Experimental Psychology 869. தேராய்வுச் சூலியல் Experimental Embryology 870. தேராய்வுவளைசலியல் Experimental ecology 871. தேர்தலியல் Psephology – தேர்தல் புள்ளியியல், தேர்தலியல், கருத்துக் கணிப்பியல், வாக்களிப்பியல் எனப்படுகிறது. Psephos என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் கூழாங்கல். அப்போது கூழாங்கல்லைப் பயன்படுத்தித் தேர்தல் நடத்தியதால் இச்சொல் உருவானது. (அதுபோல் சிறிய பந்து என்னும் பொருள் கொண்ட ballotte என்னும் பிரெஞ்சு சொல்லில் இருந்துதான் ballot உருவானது.)…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 855 – 867 இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 850 – 854 இன் தொடர்ச்சி) 855. துருக்கியியல் Turkology 856. துருவார்ப்பியல் Uredinology / Urenology 857. துறைமுகப் பொறியியல் Harbor Engineering 858. தூசியியல் koniology – துகளியல், தூசுயிர்த் தொடர்பியல், தூசி யியல். Konía என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் தூசி. எனவே, நாம் சுருக்கமான தூசியியல் – koniology என்பதையே பயன்படுத்தலாம். Koniology / Coniology 859. தூய இலக்கிய இயல் hiero- என்னும் பழங்கிரேக்கச் சொல் தூய நிலையையும் அதன் வழித்…
அகல் விளக்கு – மு.வரதராசனார்: 57
(அகல் விளக்கு – மு.வரதராசனார். 56. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 23 தொடர்ச்சி இருந்தாலும், புத்தகப் படிப்பில் அவளுக்கு, ஆர்வம் இல்லை. போகப் போக அதை நன்றாக உணர்ந்தேன். புத்தகப் படிப்பில் அக்கறை இல்லாவிட்டாலும், அறிவுப் பசி மட்டும் இருந்தது. செய்தித்தாள் படித்து ஏதாவது சொன்னால், ஆர்வத்தோடு கேட்பாள். வார இதழிலிருந்து ஏதாவது கதை படித்துச் சொன்னால் கேட்பாள். நாளடைவில் அவளே அந்த இதழ்களில் இருந்த கதைகளைப் படித்துப் பழகினாள். பழக்கம் விடவில்லை. வார இதழ்கள் எப்போது வரும் என்று காத்திருந்தாள். சிறு…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 32
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 31 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் 12 தொடர்ச்சி “அவர் உளறவில்லை! உண்மையைத்தான் சொல்லுகிறார். அன்று உங்களைப் பார்த்ததும் பார்க்காததுபோல் வேண்டுமென்றேதான் நான் எழுந்து போனேன். சந்தர்ப்பம் அப்படி அமைந்துவிட்டது. அன்று உங்களை ஏமாற்றிய வேதனை இன்னும் என்னை முள்ளாகக் குத்திக் கொண்டிருக்கிறது. அந்த வேதனையினால்தான் இந்தக் காய்ச்சல் வந்தது. அதுதான் என்னைப் படுக்கையில் தள்ளியது.” பேச முடியாமல் தொண்டைக் கரகரத்துக் குரல் வந்தது பூரணிக்கு. கண்களில் நீர் பனிக்க அரவிந்தனின் முகத்தைப் பார்த்தாள் அவள். அவன் அமைதியாக இருந்தான்….
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.31-35
(இராவண காவியம்: 1.2.26-30 தொடர்ச்சி) 1. தமிழகக் காண்டம் 2. தமிழகப் படலம் ஐந்நிலம் – குறிஞ்சி வேறு 31.இவ்வகை நான்குட னியன்று பல்வளந் துவ்விய தமிழகத் துணிந்த மேலவர் செவ்விய முறையினிற் சென்ற வைந்நிலக் குவ்வையின் முதலிய குறிஞ்சி காணுவாம். 32.இடிகுரல் யானைதன் னிளைய வின்னுயிர்ப் பிடிபசி களைந்திடப் பெரிய யாக்கிளை முடியது படியுற முறிக்கு மோசையாற் படிசிறு கிளியினம் பறந்து செல்லுமால். 33.அருவிய முருகிய மார்ப்பப் பைங்கிளி பருகிய தமிழிசை பாடப் பொன்மயில் அருகிய சிறைவிரித் தாடப் பூஞ்சினை மருவிய குரக்கினம்…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 850 – 854 – இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 835 – 849 இன் தொடர்ச்சி) 850. துண்ட நகர்வியல் Plate Tectonics என்பது கண்டத்தட்டு நகர்வியல், தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பு, புவித்தட்டு நகர்வியல், புவித்தட்டுக் கட்டுமானவியல் எனப் பலவகையாகக் கூறப் படுகின்றது. பழங்கிரேக்கத்தில் tecton என்றால் கட்டுமானம் எனப் பொருள். Plate என்பது இங்கே புவித்தட்டை / புவியின் கண்டத் தட்டைக் குறிப்பிடுகிறது. எனவே, கட்டுமானம் அல்லது கட்டமைப்பு நீங்கலாகப் பிற பொருள்கள் யாவும் சரியே. ஆனால், வெவ்வேறு கலைச்சொற்களைப் பயன்படுத்துவது குழப்பத்தைத் தருகின்றது. எனவே, ஒரே…
