தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 309-315

(தமிழ்ச்சொல்லாக்கம்: 305- 308 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 309-315 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 309-315. ஏழிசை ஒலிகள் 309. ச, சட்சம்         —        மயிலொலி 310. ரி, ரிடபம்       —        எருத்தொலி 311. க, காந்தாரம்            —        யாட்டொலி 312. ம, மத்திமம்   —        கிரவுஞ்சவொலி 313. ப, பஞ்சமம்    —        குயிலொலி 314. த, தைவதம்   —        குதிரையொலி 315. நி, நிடாதம்    —        யானையொலி நூல்   :           மொழிநூல் (1913) பாயிரவியல், பக்கம் 15 நூலாசிரியர்         :           மாகறல் கார்த்திகேய முதலியார்…

தமிழ்ச் சுவடிகள் தந்த தமிழ்த் தாத்தா – சி.பா.  2/4

(தமிழ்ச் சுவடிகள் தந்த தமிழ்த் தாத்தா – சி.பா.1/4 தொடர்ச்சி) சான்றோர் தமிழ் 1. தமிழ்ச் சுவடிகள் தந்த தமிழ்த் தாத்தா – சி.பா.  2/4 ‘நான் தமிழ் படிக்க வேண்டுமென்று தொடங்கிய முயற்சி வறுமையாலும் வேறு காரணங்களாலும் தடைப்பட்டுத் தடைப்பட்டுச் சோர்வடைந்தது. ஆனால் அப்படியே நின்றுவிடவில்லை; எல்லாருடைய வற்புறுத்தலுக்கும் மாறாக என் உள்ளம் இளமையிலிருந்தே தமிழ்த் தெய்வத்தின் அழகிலே பதிந்து விட்டது. மேலும் மேலும் தமிழ்த்தாயின் திருவருளைப் பெற வேண்டுமென்று அவாவி நின்றது.’(என் சரித்திரம் ; பக்கம் : 221-222)என்று சாமிநாத( ஐய)ரே…

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ 1

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ நூல்,  ஆசிரியர் முன்னுரை) இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 1 1. மொழியின் சிறப்பு  மக்களினத்தைப் பிற உயிர்களினும் உயர்ந்ததாகச் செய்வனவற்றுள் மொழியே தலைசிறந்ததாகும். மக்களினம் மொழியால் உயருகின்றது. மொழியின்றேல் மக்கள் வாழ்வு மாக்கள் வாழ்வேயாகும். ஆனால், மக்களினம் மொழியின்றி வாழ்ந்த காலமும் உண்டு.   மொழியின் துணையின்றித் தமக்குத் தாமே  செய்து கொள்ளக்கூடிய செயல்கள் பல உள. பிறர் கூட்டுறவுடன் செய்து கொள்ளக்கூடிய செயல்களும்  சில உள. நாம் ஆற்ற வேண்டிய செயலில் சிக்கல் சிறிது இருப்பினும் அதனை நீக்கிக்கொள்ளப் பிறர்…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  63

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 62 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்அத்தியாயம் 23 கள்ளக்கருத்தை எல்லாம் கட்டோடு வேரறுத்து – இங்குஉள்ளக் கருத்தை உணர்ந்திருப்பது எக்காலம்?     – சித்தர் பாடல் ஒரே கரும்பின் ஒரு பகுதி இனிப்பாகவும் மற்றொரு பகுதி உப்பாகவும் இருக்கிற மாதிரி மனிதனுக்குள் நல்லதும் கெட்டதும் ஆகிய பல்வேறு சுவைகளும், வெவ்வேறு உணர்ச்சிகளும் கலந்து இணைந்திருக்கின்றன. எல்லா கணுக்களுமே உப்பாக இருக்கிற ஒருவகைக் கரும்பு உண்டு. அதற்குப் ‘பேய்க்கரும்பு’ என்று பெயரிட்டிருக்கிறார்கள். அதற்குக் கரும்பு போலவே தோற்றம் இருக்கும். ஆனால் கரும்பின் இனிமைச்…

  புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6. 13 – 1.6. 17

(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.8 – 1.6.12 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 6. தாய்மொழிப் படலம் 13.     ஈங்கொரு புதுமை யில்பொரு ளுவமை                       யெனத்தகு சிறுமுகை மணம்போற்                  பாங்கொடு மக்கள் பற்பல பெற்றும்                       பழமையென் றளவிடு மகவுந்                  தாங்கிய தாவிற் கன்னியா யிளமை                       ததும்பிடுந் தண்டமிழ்த் தாயை                  நீங்கிய விளமைச் சிறியவ ருலக                       நெறியிலா ரொத்துளே மெனலே.           14.     வண்புகழ் மூவ ரொடுதமிழ்க் குயிரை                       வழங்கிய…

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 305- 308

(தமிழ்ச்சொல்லாக்கம்: 302-304 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 305-308 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 305. சர்வசுதந்தரம் – முற்றூட்டு இராசநீதிகளையும், ஆசாராதிகளையும், வழக்கங்களையும், தெய்வத்தையும், புண்ணிய பாவ மோட்ச நரசாதிகளையும், சிவஞானத்தையும் யாவர்க்கும் உணர்த்துவதும், பூர்வ சரிதங்களை விளக்குவதும் இவ்வியற்புலமையன்றோ? இத்தகைய உயர்வு தாழ்வுகளையறிந்தே பூர்வ அரசர்களில் எத்தனையோ பேர், இயற்புலவர்கட்கு முற்றூட்டாகப் (சர்வசுதந்தரம்) பல கிராமங்களைத் தானஞ்செய்தும் பற்பல ஆடையாபரண வாகன முதலிய விசேட மரியாதைகளைச் செய்தும் பாதுகாத்ததுடன் தமக்கு முக்கிய மந்திரிகளாகவும், உயர்ந்த துணைவர்களாகவும், தம்மினுமிக்க மரியாதையுடன் எப்போதுந்தம்முடன் (இவ்வியற்புலவர்களையே) வைத்து, அவர்கள்…

பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் – 9

(பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் 8 இன் தொடர்ச்சி) குமரிக் கோட்டம் அத்தியாயம் 2 தொடர்ச்சி அரைகுறையாகக் கட்டப்பட்டிருந்த கோயிலிலேயே ஒரு சிறு அறை, செட்டியார் தங்கி இருந்த இடம். அகல் விளக்கு அதிகப் பிரகாசமின்றி எரிந்து கொண்டிருந்தது. வேலையாட்கள் தூங்கும் சமயம். குமரி அவசரமாக ஓடி வந்தாள் கோயிலுக்கு. அறை யிலே செட்டியார் உலவிக் கொண்டிருக்கக் கண்டு, ” என்னாங்க உடம்புக்கு ! என்னமோ நொப்பும் நுரையுமா தள்ளுது, போய்ப் பாருடி, யாரையும் எழுப்பாதே. யாருக்கும் சொல்லாதே என்று மீனா அக்கா சொன்னாளே…

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 302-304

(தமிழ்ச்சொல்லாக்கம்: 295 – 301 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 302-304 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 302. Atoms – உயிரணு பூமியில் எங்கு பார்த்தாலும் பதார்த்தங்கள் நிறைந்திருக்கின்றன. இப்பதார்த்தங்களை (இ)ரசாயன சாசுதிரிகள் பலவிதமாகச் சோதனை பண்ணிக் கடைசியில் அவை துண்டு பண்ண முடியாமலிருக்கும்படியான நிலைமையை அடைகின்றன என்று தாபித்திருக்கிறார்கள். அப்பேர்ப்பட்ட நிலைமையை உடையன ஏறக்குறைய எண்பது விதமானவை. அவற்றை உயிரணு (Atoms) என்று சொல்வது வழக்கம். நூல்   :           வியாசப்பிரகாசிகை (1910), பக்.97. பதிப்பாளர்            :           பி. எசு. அப்புசாமி (ஐயர்) (உரிமையாளர்    :          …

உ.வே.சா.வின் என் சரித்திரம், பதிப்புரை

உ.சா.வின் என் சரித்திரம் பதிப்புரை ஏடு தேடி யலைந்தவூ ரெத்தனை        எழுதி யாய்ந்த குறிப்புரை யெத்தனைபாடு பட்ட பதத்தெளி வெத்தனை        பன்னெ றிக்கட் பொருட்டுணி வெத்தனைநாடு மச்சிற் பதிப்பிக்குங் கூலிக்கு        நாளும் விற்றபல் பண்டங்க ளெத்தனைகூட நோக்கினர்க் காற்றின வெத்தனை        கோதி லாச்சாமி நாதன் றமிழ்க் கென்றே!        – இரா.இராகவையங்கார்தமிழ்த்தாத்தா அறிஞர் உ.வே.சா. அவர்கள் எழுதிய தன் வரலாற்று நூல் இது. இந்நூலைக்…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  62

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  61 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம் 22 தொடர்ச்சி “நானே தபாலாபீசுக்குப் போய்விட்டு வருகிறேன் அம்மா!” என்று மீனாட்சிசுந்தரம் புறப்பட்டு விட்டார். முருகானந்தம் வசந்தா உறவு மிகக் குறுகிய காலத்தில் உள்ளுக்குள்ளே கனிந்திருக்க வேண்டுமென்று அவளுக்குத் தோன்றியது. கடந்த தினங்களில் வசந்தாவின் உற்சாகத்துக்குக் காரணம் என்னவாக இருக்கும் என்பது இப்போது அவளுக்கு விளங்கிற்று. அன்று அவள் பெயருக்கு வந்திருந்த கடிதத்தின் முகவரி எழுத்து இப்போது பூரணிக்கு மறுபடியும் நினைவு வந்தது. அது முருகானந்தத்தின் எழுத்தே என்பதையும் அவளால் உறுதி செய்ய…

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 295 – 301

(தமிழ்ச்சொல்லாக்கம்: 289-294 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் : 295-301 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 295. சாமானியம்  —        பொதுமை 296. விசேடம்         —        சிறப்பு 297. இரசம்  —        சுவை 298. பரிமாணம்    —        அளவு 299. பேதம்  —        வேற்றுமை 300. பிரயத்தனம் —        முயற்சி 301. சத்தம்  –           ஓசை நூல்   :           தருக்க கெளமுதி (செளமிய ௵ (1910) நூலாசிரியர்         :           தஞ்சை மாநகரம் வெ. குப்புசுவாமி இராசு (தொடரும்) உவமைக்கவிஞர் சுரதா தமிழ்ச்சொல்லாக்கம்

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.8 – 1.6.12

(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.3- 1.6.7 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 6. தாய்மொழிப் படலம்           8.     ஒருமொழி யேனு மினையநாள் காறு                      முலகெலாந் தேடியு மடையா                 இருவகைக் கைகோ ளன்பினைந் திணையோ                      டெழுதிணை யகம்புற மென்னும்                 பொருளினை யுடைய பழந்தமிழ்த் தாயைப்                      பொருளிலா ளெனப்புகல் பொய்யர்                 மருளினை யுண்மைப் பொருளென மதிப்போர்                      மதியினுக் குவமையம் மதியே.           9.     பேசுநற் குணமு மெழுதெழில் வனப்பும்                      பெரியர்சொற்…