ஈழத் தாயவளேதான் எங்கள் தாயம்மா! – அம்பாளடியாள்

ஈழத் தாயவளேதான் எங்கள் தாயம்மா! ஆழ்கடல் தனிலே அந்தப் பேதையின் குரலைக் கேட்டேன்! ஊழ்வினைப் பயனாய் எண்ணி உலகமே வெறுக்கக் கண்டேன்! வாழ்வினை அளிக்க வல்ல வசந்தமும் விலகிச் செல்ல மூழ்கிடும்  திருநா டெம்மின் முகவரி என்றார் அம்மா! பொன்னென விளைந்த தேசம் பொலிவினை இழக்க நாளும் இன்னலைத் தொடுத்தார் அங்கே இதயமும் மரித்துப் போக! அன்னவர் செயலைக் கண்டே அடிமைகள் விழித்த தாலே வன்முறை பொலிந்தே  இன்றும் வாழ்வினைப்  பொசுக்கு தம்மா! கற்றவர் நிறைந்த பாரில் காத்திட ஒருவர் இன்றி குற்றமே பொலிந்து…

புரட்சியில் பூத்த மலர் இலக்குவனார் – க.இந்திரசித்து

புரட்சியில் பூத்த மலர்  – க.இந்திரசித்து   பேராசிரியர் சி.இலக்குவனார் தமிழ் மொழியின் எழுச்சிக்கும், ஏற்றத்திற்கும் போராடிய போர்ப்படை மறவர்களின் வரிசையில் முன்னணியில் நின்றவர். கார்ல்மார்க்சு, இலெனின், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோருடைய வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும்போதெல்லாம் ஏற்படும் உணர்ச்சியும், உந்துதலும், வேகமும், வீரமும், கிளர்ச்சியும், கிளர்ந்து எழுவதைப் போன்றே இவருடைய வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும்போதும் தோன்றுகின்றன. என்னடா! இப்படியும் ஒரு மனிதன் வாழ்ந்து மறைந்திருக்கிறாரே – அவரை நாம் மறந்திருக்கிறோமே’ என்னும் வியப்பும், வேதனையும் ஒருங்கே எழுகின்றன. காவிய தலைவனாகவே காட்சியளிக்கும்…

பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை – திருக்குறள் ஆராய்ச்சி 1/6

பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை  – திருக்குறள் ஆராய்ச்சி  1/6 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள் காலத்தால் அழியாத கருவூலம்; உள்ளுதொறும் உள்ளுதொறும் உயர் எண்ணங்களை விளைவிக்கும் உயர்நூல்; எழுதப்பட்டது ஈராயிரம் ஆண்டிற்கு முற்பட்ட அக்காலத்தில்தான் என்றாலும் எக்காலத்திலும் ஏற்றம் தரும் வாழ்வியல் இலக்கியம்; உலகிலே எண்ணற்ற நூல்கள் தோன்றிவரினும் உலக நூலாகக் கருதக்கூடிய ஒரே ஒப்புயர்வற்ற அறநூல். ஒப்புயர்வற்ற திருக்குறளில் முற்றும் துறைபோகிய புலனழுக்கற்ற புலவர் பெருமானாய்த் திகழ்ந்தவர் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் அவர்கள். தொல்காப்பியம், சங்கஇலக்கியங்கள், திருக்குறள் ஆகியவற்றை  ஆய்ந்தாய்ந்து அகன்ற…

குவிகம் இலக்கிய வாசலின் நவம்பர் மாத நிகழ்வு

குவிகம் இலக்கிய வாசலின் நவம்பர் மாத நிகழ்வு செயகாந்தன் – ஆவணப்படமும் உரையாடலும் கார்த்திகை 04, 2047 / நவம்பர்  19,  2016 சனிக்கிழமை மாலை 6.00 மணி விவேகானந்தா அரங்கம் ,  பெ.சு.உயர்நிலைப்பள்ளி,  இராமகிருட்டிணா மடம் சாலை , மயிலை, சென்னை 600004 ஆவணப்படமும் அதன் இயக்குநர் திரு இரவி சுப்பிரமணியனுடன் உரையாடலும் இடம் பெறுகின்றன. கவிதை, கதை வாசிப்பு – வழக்கம்போல்    அனைவரும் வருக!

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் : [ஙே] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை – தொடர்ச்சி – இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙெ] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை-தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙே] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை – தொடர்ச்சி  படிப்பு, பரப்புரை ஆகியவற்றுடன் படைப்புப் பணியிலும் பேராசிரியர் இலக்குவனார் ஈடுபட்டார். பண்டைநலம், புதுப்புலமை, பழம்பெருமை அனைத்தையும் நல்கிய படைப்புப் போராளியாகவும் பேராசிரியர் தம்மை வெளிப்படுத்தி உள்ளார். கல்விக்கூட அளவில் கவிதைகளும் இதழ்கள் வழிக் கட்டுரைகளும் படைத்த பேராசிரியர் வித்துவான் தொடக்கநிலை மாணவராக இருந்த பொழுதே சிறந்த நூலாசிரியராகவும் மொழிபெயர்ப்பு வல்லுநராகவும் திகழ்ந்துள்ளார்; ‘எழிலரசி அல்லது காதலின் வெற்றி’ என்னும்…

ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 7/9 : பெங்களூரு முத்துச்செல்வன்

(ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 6/9 தொடர்ச்சி) ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 7/9   2014 இல் பா.ச.க. பதவியேற்றபோது அதன் உறுப்பினர்கள் இந்தியில் உறுதிமொழி கூறியதையும் சிலர் சமற்கிருதத்தில் உறுதிமொழி கூறியதையும் காணமுடிந்தது. அப்போது மோடி, தான் பிற நாட்டுத் தலைவர்களுடன் உரையாடும்போதும் இந்தியிலேயே உரையாடப்போவதாக அறிவித்ததையும் அறிவோம். அரசு இயக்கும் சமூக வலைத்தளங்களில் இந்தியே இடம் பெற வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டது. மத்திய அரசின் (CBSE) பள்ளிகளில் சமற்கிருதக் கிழமை(வாரம்) கொண்டாடப்பட வேண்டுமென ஆணை பிறப்பிக்கப்பட்டது….

முத்தொகுதித் தேர்தல்கள்: சில எண்ணங்கள் – இலக்குவனார் திருவள்ளுவன்

முத்தொகுதித் தேர்தல்கள்: சில எண்ணங்கள்   அரவக்குறிச்சி, கிருட்டிணகிரி ஆகிய தொகுதிகளில் நடைபெறும் தேர்தல்களை மறு தேர்தல் என்றோ இடைத்தேர்தல் என்றோ குறிப்பிடுகின்றனர். இரண்டு பொதுத்தேர்தலிடையே நடை பெறும் தேர்தல் இடைத்தேர்தல்  என்ற வகையில் இது சரிபோல்தான் தோன்றும்.   தேர்தல் நடைபெற்று – அஃதாவது வாக்குப்பதிவு முடிந்தபின்னர் குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் அல்லது தொகுதியில் நடைபெறும் தேர்தல்தான் மறு தேர்தல். தமிழ்நாட்டில், திருப்பரங்குன்றத் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பெற்ற உறுப்பினர் மறைவால் நடைபெறும் தேர்தலும் புதுச்சேரியில் நெல்லித்தோப்பு தொகுதியில்  ச.ம.உ. விலகியதால் ஏற்படும் தேர்தலும் இடைத்தேர்தல்கள்.    அரவக்குறிச்சி,…

ஆரா: பருமாவில் பரிதாப நிலையில் தமிழ்- இலக்குவனார் திருவள்ளுவன் ஆதங்கம்: ‘தமிழக அரசியல்’

  பர்மாவில் பரிதாப நிலையில் தமிழ் – பயணம் செய்த தமிழறிஞரின் ஆதங்கம்     பருமாவில்  தமிழ்க்கல்வி வளர்ச்சி மையமும் சந்திரசேகரரின் நந்தவனம் நிறுவனமும் இணைந்து கடந்த மாதம் இலக்கியப் பெருவிழாவை நடத்தின. அதில் சிறப்புரையாற்றச் சென்று சென்னை திரும்பியிருக்கிறார் தமிழ்க்காப்புக்கழகத் தலைவர்  இலக்குவனார் திருவள்ளுவன்.   அவரிடம் பருமாவில் தமிழன், தமிழின் நிலை என்ன என்று கேட்டோம். நம்மிடம் பருமா பற்றி விரிவான தகவல்களைப் பகிர்ந்து  கொண்டார் இலக்குவனார் திருவள்ளுவன்.   பர்மா( பருமா) என்று அழைக்கப்பட்ட நாட்டின் இப்போதைய பெயர்…

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 33(2.03) – உயிர்த்துணை கொள்ளல்

(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 32 (2.02) – தொடர்ச்சி) மெய்யறம் இல்வாழ்வியல் 33.உயிர்த்துணை கொள்ளல் உயிர்த்துணை தன்னுயிர்க் குதவெதிர் பாற்றுணை. உயிர்த்துணை என்பவர் நம் வாழ்க்கைக்கு ஆதரவான எதிபாலைச் சார்ந்த துணை ஆகும். அத்துணைக் கெங்கனு மொத்ததொன் றிலதே. வாழ்க்கைத் துணைக்கு ஈடு, இணை யாரும் இல்லை. ஆக்கமுங் கேடு மத்துணை யாலாம். ஒருவருடைய செல்வமும் அழிவும் அவருடைய உயிர்த் துணையால் அவருக்கு அமைகிறது. கொள்ளு மறிவெலாங் கொண்டுபின் றுணைகொளல். ஒருவன் தன் அறிவைக் கொண்டு நன்கு ஆராய்ந்து பின்னர் வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்தல்…

ஆள்வோர் பொறுப்பு மிகப் பெரிது! – சி.இலக்குவனார்

ஆள்வோர் பொறுப்பு மிகப் பெரிது!       தம் கட்சிக்குள்ளேயும் தம்மை வீழ்த்தும் பகைவர் நண்பர்போல் நடித்துக்கொண்டிருப்பர். அவர்களையும் அறிந்து களைதல் வேண்டும். உண்மை நண்பர்களை அறிந்து அவர்களிடம் பொறுப்புகளை ஒப்புவித்தல் வேண்டும். பதவியை அடைய நண்பர்போல் வருவர்; பதவியில்லையேல் பகைவராய் மாறுவர். ஆதலின், பதவி பெறினும் பெறாவிடினும் தம்மைச் சார்ந்து நிற்போரை அறிந்து அவர் உவப்பன செய்தல் வேண்டும். பகைவரையும் நண்பராக்கும் பண்பும் பெறுதல் வேண்டும். நண்பரைப் பகைவராக்கும் செயல்களில் நாட்டம் கொள்ளுதல் கூடாது. நாட்டை அடிமைப்படுத்த முயலும் பிற நாட்டாரை வெல்லும் வகையோ,…

மறுமை – மீண்டும் பதவியில் அமரும் தன்மை: சி.இலக்குவனார்

மறுமை – மீண்டும் பதவியில் அமரும் தன்மை  மனநலத்தி னாகு மறுமைமற் றஃது           மினநலத்தி னேமாப் புடைத்து (குறள் 459)    மறுமை -மீண்டும் அப்பதவியில் அமரும் தன்மை, மன நலத்தின் ஆகும்-உள்ளத்தின் சிறப்பால் உண்டாகும், மற்று அஃதும்-மீண்டும் அங்ஙனம் ஆவதும், இனநலத்தின்-சூழ்ந்திருக்கும் இனத்தின் சிறப்பால், ஏமாப்பு உடைத்து-வலிமை உடையது ஆகும்.       அரசியல் பதவிகளில் மீண்டும் மீண்டும் அமர்ந்து தொண்டாற்றும் நிலைமை எல்லோர்க்கும் கிட்டுவது அன்று. ஒரு முறை ஆண்ட பின்னர் மறுமுறை மக்களால் அமர்த்தப்பட வேண்டுமாயின், சிறந்த நற்பண்பு…

நட்சத்திரப் பொறியாளர் விருது பெற்றார் வித்தியாசாகர்!

  குவைத்து எண்ணெய்வள நாட்டில் அமைந்துள்ள நமது தமிழர்களின் அமைப்புகளில் தொழில்சார்ந்த அமைப்பான ‘தமிழ்நாடு பொறியியல் குழுமம்‘ சால்மியா எனும் நகரிலுள்ள “தி இரேடிசன் ப்ளு” உயர்தர நட்சத்திர விடுதியில் 02.11.2016 அன்று   நட்சத்திரப் பொறியாளர் விருது வழங்கும் விழாவினை எடுத்து நடத்தியது. ‘குவைத்து எண்ணெய் நிறுவனத்தின் முதன்மைத் தலைமை அதிகாரி (CEO of KPC) முன்னிலை வகித்தார்.    உலகத்தர வரிசையில் பல முன்னிலை நிறுவனங்கள் விருதிற்கு விண்ணப்பித்திருந்தனர். ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்து விருது வழங்கியது த.பொ. குழுமம்.  …