தொல்காப்பியமும் பாணினியமும் – 2 :பாணினியின் அ(சு)ட்டாத்தியாயி பிரிவுகள் – இலக்குவனார் திருவள்ளுவன்

(தொல்காப்பியமும் பாணினியமும் – 1 : தொடர்ச்சி) தொல்காப்பியமும் பாணினியமும் 2 பாணினியின் அ(சு)ட்டாத்தியாயி பிரிவுகள் எட்டு அத்தியாயங்களை உடைய நூல் என்னும் பொருளில் பாணினி தன் நூலுக்கு அட்டாத்தியாயி என்று பெயர் வைத்தார். தமிழில் அட்டம் என்றால் எட்டைக் குறிக்கும். எட்டுபோல் காலைக் குறுக்கே மடக்கி அமர்வதை அட்டக்கால் என்று இன்றும் கூறிவருகிறோம். தமிழ் அட்டத்திலிருந்து வந்ததே சமற்கிருத அசுட்டம். எனவே, எட்டு அத்தியாயங்களைக் கொண்டது என்னும் பொருளில் அட்டகம் என்றும் கூறுகின்றனர்.  இதனைத் தமிழில் வேறுவகையில் குறிப்பிடுவதானால் எண்(8) இயல்கள் பகுக்கப்பட்டுள்ள…

தொல்காப்பியமும் பாணினியமும் – முன்னுரை: இலக்குவனார் திருவள்ளுவன்

தொல்காப்பியமும் பாணினியமும் முன்னுரை கனடாவில்  முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு நிகழும் திருவள்ளுவர் ஆண்டு 2055, புரட்டாசித் திங்கள், 04, 05, 06ஆம் நாள்களில் (2024-09-20, 2024-09-21, 2024-09-22) கனடா, தொரண்டோ (Toronto) நகரில் சிறப்பாக நடைபெற்றது. கனடாத் தொல்காப்பிய மன்றமும் (தமிழ்நாட்டின்) இலக்குவனார் இலக்கிய இணையமும் இணைந்து இதனை நடத்தின. அதன் கருத்தரங்கத்தில் வாசிக்க நான் ‘தொல்காப்பியமும் பாணினியமும்’ என்னும் கட்டுரையை அனுப்பியிருந்தேன். நான் பொதுவாகக் கருத்தரங்கங்களில் பங்கேற்கும்போது விரிவான கட்டுரையை  அனுப்பிவிட்டு அதன் பின்னரே சுருக்கத்தை எழுதியனுப்புவது வழக்கம். ஏனெனில்…

தமிழ்த்தாய்மையும் கன்னடச் சேய்மையும் இணைய அரங்கம்

தமிழ்க்காப்புக்கழகம் இலக்குவனார் இலக்கிய இணையம் தமிழ்த்தாய்மையும் கன்னடச்சேய்மையும் இணைய அரங்கம் அனைவருக்கும் வணக்கம்! தமிழ் மொழியையும் அதன் கிளை மொழிகளையும் திராவிட மொழிகள் என்று சொல்லாமல் தமிழ்க்குடும்ப மொழிகள் என்று சொல்ல வேண்டும் என்பார் செந்தமிழ்மாமணி முனைவர் சி.இலக்குவனார். இவற்றுள் இந்தியத் துணைக் கண்டத்தில் தென் தமிழ்க்குடும்பப் பிரிவில் 34 மொழிகளும், தென்-நடுத் தமிழ்க்குடும்பப் பிரிவில் 21 மொழிகளும், நடுத் தமிழ்க்குடும்பப் பிரிவில் 5 மொழிகளும், வட தமிழ்க்குடும்பப் பிரிவில் 5 மொழிகளும், வகைப்படுத்தப் படாதவையாக 8 மொழிகளுமாக மொத்தம் 73 மொழிகள் கண்டறியப்…

தமிழ் அமைப்புகள் நடத்தும் ஞாலத்தலைவர் மேதகு பிரபாகரன் புகழ் வணக்க நாள் – 18.05.25

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும்.   (திருவள்ளுவர், திருக்குறள், ௨௰௮ – 28) தமிழ்க்காப்புக் கழகம் பிற அமைப்புகளோடு இணைந்து நடத்தும் ஞாலத்தலைவர் மேதகு பிரபாகரன் புகழ் வணக்க நாள் “தமிழினத்தின் தேசிய அடையாளத்தை நிலை நிறுத்தி முள்ளிவாய்க்கால் இறுதிப் போர் வரையும் உறுதி குலையாது, படைநடத்தி, தான் வரித்துக் கொண்ட உயரிய இலட்சியத்தையும் தனது வழிநடத்தலையும் உளமார ஏற்று உயிர்களை விதையாக்கிய மாவீரர்களின் ஈகங்களையும் இலட்சியக் கனவுகளையும் நெஞ்சிருத்தி, எதிரிப்படையோடு இறுதிக் கணம் வரை துணிவோடு களமாடிய“ ஞாலத்தலைவர் மேதகு…

ஆளுமையர்உரை 124 & 125; என்நூலரங்கம்-கருவிகள் 1600

ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால் காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு.   (திருவள்ளுவர், திருக்குறள், ௬௱௪௰௨ – 642) தமிழே விழி!                                                    தமிழா விழி! தமிழ்க் காப்புக் கழகம் ஆளுமையர் உரை 124 & 125; என் நூலரங்கம் இணையவழி யரங்கம் கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி / Passcode: 12345 பங்குனி 09, 2056  ஞாயிறு 23.03.2025  காலை 10.00 மணி தலைமை:  இலக்குவனார் திருவள்ளுவன் வரவேற்புரை : கவிஞர் தமிழ்க் காதலன் “தமிழும் நானும்”  –…

ஞாலத்தலைவர் மேதகு பிரபாகரன் புகழ் வணக்க நாள்

ஞாலத்தலைவர் மேதகு பிரபாகரன் புகழ் வணக்க நாள் “தமிழினத்தின் தேசிய அடையாளத்தை நிலை நிறுத்தி முள்ளிவாய்க்கால் இறுதிப் போர் வரையும் உறுதி குலையாது, படைநடத்தி, தான் வரித்துக் கொண்ட உயரிய லட்சியத்தையும் தனது வழிநடத்தலையும் உளமார ஏற்று உயிர்களை விதையாக்கிய மாவீரர்களின் தியாகங்களையும் இலட்சியக் கனவுகளையும் நெஞ்சிருத்தி, எதிரிப்படையோ இறுதிக் கணம் வரை துணிவோடு களமாடி பிரபாகரன், 2009-ம் ஆண்டு மே மாதம் 18-ஆம் நாள், வீரச்சாவைத் தழுவிக் கொண்டார் என்பதை தமிழீழ மாவீரர் பணிமனை அறியத் தருகிறது. பிரபாகரன், வீரச்சாவினை உறுதிப்படுத்தி நெஞ்சைப்…

தமிழ்க் காப்புக் கழகம்: ஆளுமையர் உரை 122 & 123; எம் நூலரங்கம்

நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம் யாநலத்து உள்ளதூஉம் அன்று.   (திருவள்ளுவர், திருக்குறள், ௬௱௪௰௧ – 641) தமிழே விழி!                                                    தமிழா விழி! தமிழ்க் காப்புக் கழகம் ஆளுமையர் உரை 122 & 123; எம் நூலரங்கம் கூட்ட இணைப்பு  கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி / Passcode: 12345 மாசி 25, 2056  ஞாயிறு 09.03.2025  காலை 10.00 மணி தலைமை:  இலக்குவனார் திருவள்ளுவன்  வரவேற்புரை : கவிஞர் தமிழ்க் காதலன் “தமிழும் நானும்”  – ஆளுமையர்கள்…

விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 3 – இலக்குவனார் திருவள்ளுவன்

(விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 2 – தொடர்ச்சி) விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 3 ஆமாம். நீங்கள் மனப்பாடம் செய்வதுபோல் என் புதினத்தை நன்கு படித்துள்ளீர்கள். உங்களிடம் படமாக்கும் பொறுப்பை ஒப்படைப்பது மகிழ்ச்சியாகத்தான் உள்ளது. ஆனால், இப்பொழுது உணவுப் பொருள்களில் செய்யும் கலப்படத்தை உணராமலும் உணர்ந்தாலும் தட்டிக் கேட்காமலும்தான் மக்கள் இருக்கின்றனர். அப்புறம் எங்கே மொழிக்கலப்பைத் தடுப்பார்கள் என்று அஞ்ச வேண்டியுள்ளது. இளைஞர்கள் பலர் நாம் தமிழ்த்தேசியர்கள் என்பதை உணர்ந்து செயற்பட்டு வருகிறார்கள். எனவே, தமிழ் அழிவிலிருந்து காப்பாற்றப்படும் என்று சிறிது நம்பிக்கை வருகிறது. இவற்றை…

ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 15 : பாலத்தீனத்துடனான வாணிகம் – புலவர் கா.கோவிந்தன்

(ஆரியர்க்கு முற்பட்ட வெளிநாட்டு வாணிகம் 2 – புலவர் கா.கோவிந்தன் – தொடர்ச்சி) ஆரியர்க்கு முற்பட்ட வெளிநாட்டு வாணிகம் 3 பாலத்தீனத்துடனான வாணிகம் கி.மு. இரண்டாம் ஆயிரத்தாண்டு முடிவதற்குச் சிறிது முன்னர், எபிரேயர்கள், எகிப்தில் அடிமைத் தளையிலிருந்து விடுபட்டுப் பாலத்தீனத்திற்குக் குடிபெயர்ந்துவிட்டனர். அவர்களோடு சென்ற இனிய மணப்பொருள்கள், புனிதத் தன்மை வாய்ந்தனவாக மதிக்கப்பட்டன. இசுரேல் அரசின் தோற்றத்தில் வளம் கொழிக்கும் வாணிகம் முக்கியத்துவம் வாயந்ததாகிவிட்டது. ஆகவே அரேபிய வாணிகர்களால் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட இலவங்கம், எபிரேய மத குருக்களின் புனித திருநெய்யாட்டு எண்ணெய்யின் சலவைப் பொருள்களுள்…

மொழிப் போராளிகள் நாள்: தை 13, 2056/ 26.01.2025: இணையவழிப் புகழ் வணக்கம்

மொழிப் போராளிகள் நாள் தை 13, 2056/ 26.01.2025 ஞாயிறு காலை 10.00 மணி தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய மன்னுயிர் எல்லாம் தொழும் (திருவள்ளுவர், திருக்குறள் ௨௱௬௰௮ – 268) தமிழ்க்காப்புக் கழகம் இணையவழிப் புகழ் வணக்கம் கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345 வரவேற்புரை: முனைவர் மு.சோதிலட்சுமி தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன் மொழிப் போராளிகளை வணங்குநர் : முனைவர் சந்திரிகா சுப்பிரமணியன், முன்னணி வழக்குரைஞர், ஆத்திரேலியா தமிழ்த்திரு ஆ.நடராசன் கவிஞர் தமிழ்க்காதலன் நன்றியுரை :…

ஆரியர்க்கு முற்பட்ட வெளிநாட்டு வாணிகம் 2 – புலவர் கா.கோவிந்தன் – புலவர் கா.கோவிந்தன்

(ஆரியர்க்கு முற்பட்ட வெளிநாட்டு வாணிகம் – புலவர் கா.கோவிந்தன்-தொடர்ச்சி) ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 14 வெளிநாட்டு வாணிகம் 2 சலாமிசின் (Salarmis) மதகுருவாம் எபிபணியாசு (Epiphanias) என்பார், மோசசுக்கு (Moses) வழங்கிய சட்ட கட்டளைகள், நீலமணிக்கல்லில்தான் செதுக்கப்பட்டன எனக் கூறுகிறார். (Scoffs’ periplus page: 171). நார்மடி ஆடைகள் எகித்திலேயே, அக்காலத்தில் உற்பத்தி செய்யப்பட்டன ஆதலாலும், இறக்குமதி செய்யப்பட்ட பொருள்கள், அவற்றினும் உயர்தரம் வாய்ந்ததான, பிற்காலத்திற் போலவே அக்காலத்திலும் இந்தியா மட்டுமே தரக்கூடியதுமான பருத்தி ஆடைகளால் ஆனவையாதல் வேண்டும். ஆதலாலும், அரசர்க்கான உடைகள் இந்திய மசுலினால்…

தமிழர் திருநாள் கொண்டாட நமக்குத் தகுதி உள்ளதா?  – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழர் திருநாள் கொண்டாட நமக்குத் தகுதி உள்ளதா? நலம், வளம், தளர்வின்மை, விடாமுயற்சி, நம்பிக்கை, ஆற்றல், வெற்றி, பெருமை, செல்வம், இன்பம், மகிழ்ச்சி, புகழ், உயர்வு, சிறப்பு, வாணாள், துணிவு, எல்லாமும் பெற்றுத் தமிழுடன் நூறாண்டு வாழ இத்தமிழர் திருநாளில் வாழ்த்துகிறேன். அதே நேரம் தமிழர் திருநாள் கொண்டாட நமக்குத் தகுதி உள்ளதா என்ற சிந்தனையும் எழுகிறது. தமிழர் திருநாளைத் தமிழர் திருநாள் என்றுகூடச் சொல்ல மனமின்றித் தமிழரே திராவிடர் திருநாள் என்கின்றனரே! தமிழ் நாடாக இருந்தாலும் பிற நாடாக இருந்தாலும் தமிழர் கொண்டாடும்…