திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 019. புறம் கூறாமை

    (அதிகாரம் 018. வெஃகாமை தொடர்ச்சி) 01.அறத்துப் பால் 02.இல்லற இயல் அதிகாரம் 019. புறம் கூறாமை ஒருவர் இல்லாத பொழுது அவரைப் பற்றிக் கோள்கூறாமை.  181. அறம்கூறான், அல்ல செயினும், ஒருவன்,   புறம்கூறான் என்றல் இனிது. அறத்தைக் கூறாது, தீமைகளைச் செய்யினும், கோள்கூறாமை இனிது.  182. அறன்அழீஇ, அல்லவை செய்தலின் தீதே,  புறன்அழீஇப், பொய்த்து நகை. பின்னே பழிப்பும், முன்னே பொய்ச்சிரிப்பும், அறஅழிப்பினும் தீது.  183. புறம்கூறிப், பொய்த்(து)உயிர் வாழ்தலின், சாதல், அறம்கூறும் ஆக்கம் தரும். பழிசொல்லும் பொய்வாழ்வைவிட, இறத்தல்,…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 018. வெஃகாமை

(அதிகாரம் 017. அழுக்காறாமை தொடர்ச்சி) 01அறத்துப் பால் 02.இல்லற இயல் அதிகாரம் 018. வெஃகாமை   எந்தக் காரணத்தாலும் பிறரது பொருள்களைப் பறிக்க விரும்பாமை.   நடு(வு)இன்றி நல்பொருள் வெஃகின், குடிபொன்றிக்,      குற்றமும் ஆங்கே தரும்.          பிறரது பொருளைப் பறிக்க        விரும்பின், குடிகெடும்; குற்றம்மிகும்.   படுபயன் வெஃகிப், பழிப்படுவ செய்யார்,      நடுஅன்மை நாணு பவர்           வருபயன் விரும்பிப், பழிப்புச்        செயல்களை நடுநிலையார் செய்யார்.   சிற்றின்பம் வெஃகி, அறன்அல்ல செய்யாரே,…

செவ்வியல் இலக்கியங்களில் கலைச்சொல் மேலாண்மை 2 – இலக்குவனார் திருவள்ளுவன்

(ஆடி 17, 2046 / ஆக 02, 2015 தொடர்ச்சி)   வினைப்பெயர், செய்யும் செயலைப் பொருத்தி அமையும் பெயர்கள். தச்சன், பொன் கொல்லன், கொல்லன் போன்ற பெயர்கள். உலகம் முழுவதும் மரவேலை செய்பவன் தச்சன்தான். ஆங்கிலத்தில் carpenter என்றழைக்கின்றோம். இது உலகம் முழுவதும் விளங்கும் புரியும் வினைப்பெயரே. பெயர்கள் பலவகைப்படும். இவற்றை ஒல்காப்புகழ் தொல்காப்பியர், நிலப்பெயர், குடிப்பெயர், குழுவின் பெயரே வினைப்பெயர், உடைப்பெயர், பண்பு கொள் பெயரே, பல்லோர் குறித்த முறைநிலைப் பெயரே பல்லோர் குறித்த சினை நிலைப் பெயரே பல்லோர் குறித்த…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 017. அழுக்காறாமை

(அதிகாரம் 016. பொறை உடைமை தொடர்ச்சி)    01. அறத்துப் பால் 02.இல்லற இயல் அதிகாரம்  017. அழுக்காறாமை   பிறரது வளநலங்களைப் பார்த்துப்   பொறாமை கொள்ளாத அறப்பண்பு..   ஒழுக்(கு)ஆ(று)ஆக் கொள்க, ஒருவன்,தன் நெஞ்சத்(து),      அழுக்கா(று) இலாத இயல்பு.          மனத்தாலும், பொறாமை இல்லாத,        இயல்பை ஒழுக்கநெறியாக் கொள்க.   விழுப்பேற்றின் அஃ(து)ஒப்ப(து) இல்லை,யார் மாட்டும்,      அழுக்காற்றின் அன்மை பெறின்.          யாரிடத்தும், பொறாமை கொள்ளாமையே,        ஈ[டு]இல்லாத சிறப்புப் பே[று]ஆகும்.  …

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 016. பொறை உடைமை

(அதிகாரம் 015. பிறன் இல் விழையாமை தொடர்ச்சி) 01.அறத்துப் பால் 02.இல்லற இயல் அதிகாரம் 016. பொறை உடைமை   பிறரது பிழைகளை — குற்றங்களைப் பொறுக்கும் பண்பைப் பெற்றிருத்தல்.   அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத், தம்மை      இகழ்வார்ப் பொறுத்தல் தலை.          தோண்டுவாரையும் தாங்கிக் காக்கும்        நிலம்போல் இகழ்வாரையும் பொறுக்க.       பொறுத்தல், இறப்பினை என்றும்; அதனை      மறத்தல், அதனினும் நன்று.           வரம்பு கடந்த குற்றங்களையும்        பொறுத்தலினும், மறத்தலே நன்று.  …

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 011. செய்ந்நன்றி அறிதல்

(அதிகாரம் 10. இனியவை கூறல் தொடர்ச்சி) 01 அறத்துப் பால் 02. இல்லற இயல்    அதிகாரம் 011. செய்ந்நன்றி அறிதல்              பிறரது நல்உதவிகளை மறவாமல்,         நன்றியராய் இருத்தலை அறிதல்.   செய்யாமல் செய்த உதவிக்கு, வையகமும்,      வானகமும், ஆற்றல் அரிது.          தான்செய்யாப் போதும், பிறர்செய்        உதவிக்குப், பூமி,வான் ஈ[டு]ஆகா.   காலத்தி னால்செய்த நன்றி, சிறி(து)எனினும்,      ஞாலத்தின் மாணப் பெரிது.          காலத்தே செய்த நல்உதவி,…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 015. பிறன் இல் விழையாமை

(அதிகாரம் 014. ஒழுக்கம் உடைமை தொடர்ச்சி) 01.அறத்துப் பால்                 02.இல்லற இயல்               அதிகாரம் 015. பிறன் இல் விழையாமை     மற்றவன் மனைவியை, மனத்தால்கூட,  முற்றும் விரும்பாத ஆளுமை.   பிறன்பொருள்ஆள் பெட்(டு)ஒழுகும் பேதைமை, ஞாலத்(து),      அறம்பொருள் கண்டார்கண் இல்.        பிறனது மனைவியை விரும்பும்        அறியாமை, அறத்தாரிடம் இல்லை.   அறன்கடை நின்றாருள் எல்லாம், பிறன்கடை    நின்றாரின் பேதையார் இல்.          பிறனது இல்லாளை விரும்புவோன்,        அறத்தை மறந்த அறிவிலாதோன்…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 014. ஒழுக்கம் உடைமை

(அதிகாரம் 013. அடக்கம் உடைமை தொடர்ச்சி) 01.அறத்துப் பால்.                 02.இல்லற இயல்                  அதிகாரம்   014. ஒழுக்கம் உடைமை   நல்லவற்றையே சிந்தித்தும், சொல்லியும், செய்யும் வாழ்வியல் உயிர்நெறி   ஒழுக்கம், விழுப்பம் தரலான், ஒழுக்கம்,    உயிரினும், ஓம்பப் படும்     சிறப்புத் தருகின்ற ஒழுக்கத்தை,   உயிரைவிடவும் உயர்வாய்க் காக்க.   பரிந்(து),ஓம்பிக், காக்க ஒழுக்கம்; தெரிந்(து),ஓம்பித்     தேரினும், அஃதே துணை.   எவ்வளவு வருத்தினும், ஒழுக்கமே, காக்க வேண்டிய ஆக்கத்துணை.   ஒழுக்கம் உடைமை, குடிமை; இழுக்கம்,   …

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 013. அடக்கம் உடைமை

(அதிகாரம் 012. நடுவு நிலைமை தொடர்ச்சி) 01.அறத்துப் பால்                   02.இல்லற இயல்                 அதிகாரம் 013. அடக்கம் உடைமை      ஐந்து புலன்களையும் அடக்கி,    முந்து நல்வழியில் நடத்தல்.   அடக்கம், அமர்அருள் உய்க்கும்; அடங்காமை,      ஆர்இருள் உய்த்து விடும்.          அடக்கம், அருளுக்குள் அமர்த்தும்;        அடங்காமை, இருளுக்குள் செலுத்தும்.   காக்க பொருளாக, அடக்கத்தை; ஆக்கம்,      அதனின்ஊங்(கு) இல்லை உயிர்க்கு.          உயிருக்கும், நலந்தரும் அடக்கத்தை,        உயரிய பொருளாய்க் காக்க….

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 012. நடுவு நிலைமை

(அதிகாரம் 011. செய்ந்நன்றி அறிதல் தொடர்ச்சி) 01. அறத்துப் பால் 02. இல்லற இயல்  அதிகாரம் 012. நடுவு நிலைமை     யாருடைய பக்கமும் சாயாமல்,    நேர்மையாக நடக்கும் சமநிலை.   தகுதி எனஒன்று நன்றே, பகுதியால்,    பால்பட்[டு] ஒழுகப் பெறின்.             அவ்அப் பகுதியார்க்கு ஏற்ப           நடக்கும் தகுதியே நடுநிலைமை.   செப்பம் உடையவன் ஆக்கம், சிதை(வு)இன்றி,     எச்சதிற்(கு) ஏமாப்(பு) உடைத்து.          நடுநிலையார் வளநலம் வழிவழி        வருவார்க்கும், பாதுகாப்பு…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 010. இனியவை கூறல்

(அதிகாரம் 009. விருந்து ஓம்பல் தொடர்ச்சி) 01. அறத்துப் பால் 02. இல்லற இயல்   அதிகாரம் 010. இனியவை கூறல்         கேட்பவர் மனமும் மகிழும்படி,        இனியநல் சொற்களைக் கூறுதல்.   இன்சொலால், ஈரம் அளைஇப், படி(று)இலஆம்,      செம்பொருள் கண்டார்,வாய்ச் சொல்.            இரக்க[ம்உ]ள்ள, பொய்இல்லா இன்சொல், அறத்தை ஆராய்ந்தார் வாய்ச்சொல்.   அகன்அமர்ந்(து), ஈதலின் நன்றே, முகன்அமர்ந்(து),      இன்சொலன் ஆகப் பெறின்.        மனம்மகிழ்ந்து ஈதலைவிட, முகம்மலர்ந்து        இன்சொல்…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 009. விருந்து ஓம்பல்

(அதிகாரம் 008. அன்பு உடைமை  தொடர்ச்சி) 01. அறத்துப் பால்  02. இல்லற இயல் அதிகாரம் 009. விருந்து ஓம்பல்          உறுபசியுடன் வருகின்ற எவருக்கும்,         விருந்து படைத்தலும் உதவுதலும்.   இருந்(து)ஓம்பி, இல்வாழ்வ(து) எல்லாம், விருந்(து)ஓம்பி,      வேள்ஆண்மை செய்தல் பொருட்டு.          இல்வாழ்தல், விருந்தினரைக் காக்கவும்,        நல்உதவி செய்யவுமே ஆகும்.   விருந்து புறத்த(து)ஆத், தான்உண்டல், சாவா      மருந்(து)எனினும், வேண்டல்பாற்(று) அன்று.          விருந்தாளர் வெளியில்; சாவினை        நீக்கும்…