பூங்கொடி 22 : கொழுநன் ஆவேன்

(பூங்கொடி 21 – கவிஞர் முடியரசன்: கோமகன் ஆவல் – தொடர்ச்சி) பூங்கொடி கொழுநன் ஆவேன் கொழுகொம் பின்றிப் பூங்கொடி தவித்து விழுவது பொறேனாய்க் கொழுநன் ஆவேன் எனுமுயர் நினைவால் இரங்கி வந்துளேன்    90 நின்பூங் கொடியோ நேரிசைக் குலத்தாள் என்பெரு நிலையினை இசைத்தால் உடன்படும்; உடன்படச் செய்க குறளகம் விடுத்துக் குமரன் என்னைப் பெறுமணங் கொள்ளப் பெட்டனள் ஆயின் அளப்பருஞ் செல்வம் அனேக்தும் ஈவேன்     95 களைத்துடல் இளைக்கக் கருதா தென்றன் காதற் கடலைக் கடந்திட அவளை மாலுமி யாக்கி மகிழ்ந்திடக் குறித்தேன்…

பூங்கொடி 21 – கவிஞர் முடியரசன்: கோமகன் ஆவல்

(பூங்கொடி 20 – கவிஞர் முடியரசன்: புற்றரைக் காட்சி – தொடர்ச்சி) பூங்கொடி கோமகன் ஆவல் மானிகர் விழியாள் மலர்வனம் புகுசொல் தேனெனப் பாய்ந்தது திருமகன் செவியில்; ‘ஒண்டொடி அவள்மன ஒப்புதல் பெற்றுத் தண்டமிழ் நிகர்க்கும் தையல் கொழுநன் ஆவேன் யான்’ என ஆவல் துரப்பக் காவிற் புகுந்துள பாவையைக் காண்பான் வில்விடு அம்பென விரைந்தனன் கோமகன்; பூங்கொடி வெருவுதல் புகுவோன் றன்னைப் பூங்கொடி நோக்கி ‘இகுளை! இம்மகன் என்மேற் காதல்      60 மிகுமனத் தானென மேலொரு நாளில் தேன்மொழி அனையிடம் செப்பக் கேட்டுளேன்…

பூங்கொடி 20 – கவிஞர் முடியரசன்: புற்றரைக் காட்சி

(பூங்கொடி 19 – கவிஞர் முடியரசன்: படிப்பகம் புக்க காதை – தொடர்ச்சி) பூங்கொடி புற்றரைக் காட்சி பைம்புற் பரப்புப் பசும்படாம் விரிக்கெனத் தோன்றும், இடையிடைத் துளிர்விடு செடிகள் ஈன்ற மலர்வகை எழில்பெற வரைந்த சித்திர வகையை ஒத்திடல் காணாய் ! பொய்கைக் காட்சி இந்நாள் விடுமுறை எனுஞ்சொற் செவியுறத்   30 துள்ளிக் குதிக்கும் பள்ளிச் சிறாரென வெள்ளைக் கயல்கள் விடுபுனற் பொய்கையில் தாவிக் குதிக்கும், தவஞ்செய் கொக்கு மேவிப் பற்ற முயன்றும் மீன்பெறாது ஏங்கிநின் றிரங்குதல் காண்’ என அல்லி    35 பூங்கா…

பூங்கொடி 19 – கவிஞர் முடியரசன்: படிப்பகம் புக்க காதை

(பூங்கொடி 18 – கவிஞர் முடியரசன்: இருவகைப் பூங்கா – தொடர்ச்சி) பூங்கொடி 4. படிப்பகம் புக்க காதை இயற்கைக் காட்சிகள் நங்கையும் தோழியும் களிமலர்ச் சோலையுள் தங்கிய எழில்எலாம் தனித்தனி கண்டனர்; தாமரைக் காட்சி செங்கதிர்ச் செல்வன் வெங்கதிர் புகுதாப் பொங்கிய நிழல்செறி பூம்பொழிற் கயத்துள் அடுத்தஓர் இரவலன் அகக்குறிப் புணர்ந்து    5 கொடுத்தலால் மகிழ்ச்சி கூர்முகம் நோக்கி மகிழ்வால் விரியும் வள்ளல் மனம்போல் அகவிதழ் முறுக்கவிழ்ந் தலர்ந்த தாமரை இலைசூழ் மலர்கள் எழிலினைப் பாராய்! ஊடல் கொண்ட ஒண்டொடி முகம்போல்     10…

பூங்கொடி 18 – கவிஞர் முடியரசன்: இருவகைப் பூங்கா

(பூங்கொடி 17 – கவிஞர் முடியரசன்: வெருகன் நய வஞ்சகம் – தொடர்ச்சி) பூங்கொடி இருவகைப் பூங்கா மேலும் வடதிசை மேவிய பூங்கா தேளும் பாம்பும் என்னச் செப்பிடும் கொடியவர் செல்லும் கூடம தாகும்;    90 அன்பும் பண்பும் ஆர்ந்தவர் நிறையும் தென்புலப் பொழிற்கே செல்லுதற் குரியள் என்பன கூறி எழுந்துபூங் கொடியொடு காவண மறுகுகள் கடந்துபல் பொருள்பகர் ஆவண வழியே படர்ந்தன ளாக.            95 கண்டோர் கவலை வழியிற் காண்போர் விழிவாங் காமல் ‘எழில்நிறை யிவளை இல்லறப் படுத்தா தல்லல் நிறைகொண் டாற்றுப்…

பூங்கொடி 17 – கவிஞர் முடியரசன்: வெருகன் நய வஞ்சகம்

(பூங்கொடி 16 – கவிஞர் முடியரசன்: உலுத்தர் தொல்லை – தொடர்ச்சி) பூங்கொடி பூங்கா புக்க காதை வெருகன் நய வஞ்சகம் நீறுறு நெற்றியன் நிகரிலாச் செல்வன் ஏறெனப் பொலிவுறும் இளைஞன் அழகன் காண்போர் மயங்கும் காட்சியன் உலகில்அவ்     70 ஆண்போல் ஒருவனைக் காணுதல் அரிது பிறர்மனங் கவரப் பேசும் வன்மையன் அறமுறு செயலே ஆற்றுவான் போல எண்ணும் வகையில் இருப்பவன் வெருகன் நண்ணி என்னை நயவஞ் சகமாக் கடத்திச் சென்றான் கதறியும் பயனிலை விடலை தமியளை  விழ்ந்திடச் செய்தனன்; அவன்மொழி நம்பி அவன்வழிப்…

பூங்கொடி 16 – கவிஞர் முடியரசன்: உலுத்தர் தொல்லை

(பூங்கொடி 15 – கவிஞர் முடியரசன்: பூங்கொடி அழுகையை அருண்மொழி மாற்றுதல்- தொடர்ச்சி) பூங்கொடி உலுத்தர் தொல்லை கடைத்தெரு வழியே காரிகை தனியாய் ஏகின் சிற்றினம் எதம் விளைக்கும் ;    50 நாகிளம் பருவ நல்லியல் மாதர் உறுதுணை யின்றி ஊரில் வெளிச்செலின் நரியென வேட்டை நாயெனத் தொடர்ந்தே ஊறுகள் செய்யும் உலுத்தர் பல்கினர் மக்கட் பண்பு மங்குதல் கண்டோம்           55 தெக்கணம் இப்படித் தேய்வது நன்றாே ? அல்லியின் வரலாறு வளநகர் ஈங்குநான் வந்தது கேளாய் களமர் கெழுமிய கண்கவர் பொழில்சூழ் மயில்நகர்…

பூங்கொடி 15 – கவிஞர் முடியரசன்: பூங்கொடி அழுகையை அருண்மொழி மாற்றுதல்

(பூங்கொடி 14 – கவிஞர் முடியரசன்: பூங்கொடி அழுகை – தொடர்ச்சி) பூங்கொடி அழுகையை அருண்மொழி மாற்றுதல் பூங்கொடி கண்ணிர் புத்தகம் நனைத்திட ஆங்கது கண்ட அருண்மொழி வெதும்பிக் கண்ணிர் மாற்றிக் கவலையை ஆற்ற எண்ணினள் குறுகி, ஏனோ கலங்கினை? மக்கள் கலக்கம் மாற்றிடல் ஒன்றே  25 தக்கதென் றெண்ணிச் சார்ந்தனம் ஈண்டு ; நாமே கலங்குதல் நன்றாே ? நம்பணி ஆமோ பூங்கொடி! அவலம் விட்டொழி மலர்வனம் சென்று மாற்றுக் கவலை அலர்பூங் காவுள் ஆறுதல் கிட்டும் ; 30 பூம்பொழில் தந்திடும்…

பூங்கொடி 14 – கவிஞர் முடியரசன்: பூங்கா புக்க காதை : பூங்கொடி அழுகை

(பூங்கொடி 13 – கவிஞர் முடியரசன்: அடிகளார் அறிவுரை – தொடர்ச்சி) 3. பூங்கா புக்க காதை பூங்கொடி அழுகை தேன்மொழிக் கருண்மொழி செப்பிய துயருரை ஆன்றரு பாலெனும் அருட்பா திளைத்திடும் பூங்கொடி செவியிற் புகுந்தது ; புகுதலும் ஓங்கிய பெருவளி உற்றிடு துகிற்கொடி படபடத் தாலெனப் பகைத்தனள் நெஞ்சம்;  5 மடமை யகற்ற மனங்கொளீஇ நிலத்துக் கடமை யாற்றுழிக் கைதவ மாங்கரால் பெற் றோ ரீங்குப் பட்டவெந் துயரால் உள்ளிற் புண்ணாய் உருகிய குருதி வெள்ளப் புனலாய் விழிவழி வழிந்தது;   10 கண்ணீ…

பூங்கொடி 13  – கவிஞர் முடியரசன்: அடிகளார் அறிவுரை

(பூங்கொடி 12  – கவிஞர் முடியரசன்: வடிவேல் படுகொலை- தொடர்ச்சி) பூங்கொடி அடிகளார் அறிவுரை மாதே! பிறப்பும் மாய்வும் இயற்கை 80யாதே முயலினும் தடுத்திடல் அரிதே’ பெறலருங் கொழுநன் பிணியால் மாண்டிலன் பிறரெவ ரும்பெறாப் பெருநிலை பெறவே ஆருயிர் ஈங்கனன் அவனேர் வீரன்; வீரப் பெருமகன் விடுபணி தொடர்ந்து 90 புரிந்தனி ராயின் பொருந்திய துயரம் முறிந்திடும்; அவனுளம் நிறைந்திடும் ஆதலின் முயன்றுறு செல்வம் முத்தமிழ்க் கல்வி உயர்ந்திட உதவுக, உழைப்பும் நல்குக, உழைப்பினை உதவுக கோவிலில் தமிழொலி குடிபுக வேண்டி 95 மேவிய…

பூங்கொடி 12  – கவிஞர் முடியரசன்: வடிவேல் படுகொலை

(பூங்கொடி 11  – கவிஞர் முடியரசன்: வள்ளி குறிக்கோள் வாழ்வினள்- தொடர்ச்சி) பூங்கொடி பழியுரை காதை வடிவேல் படுகொலை ஆங்ஙனம் அன்றியும் அரும்பெறற் காதலர், நிலத்தினில் மடமை நிறைந்திடல் கண்டு பகுத்தறி வூட்டும் பகலவன் ஆவர் ; 70 சொல்லின் செல்வர், சோர்விலர், தொண்டர், அல்லும் பகலும் ஆருயிர்த் தமிழே வெல்லும் வகையால் வீரம் விளைத்தவர்; நல்லவர் இவரை நரிக்குணம் விஞ்சிய கொல்லும் பகைக்குணம் கொண்டோர் ஒருசிலர் 75 தூண்டுதல் செய்யத் துணிவுடன் கூடி நீண்ட புளிமரக் கிளைதனில் நேயரை அந்தோ தூக்கி ஆருயிர்…

பூங்கொடி 11  – கவிஞர் முடியரசன்: வள்ளி குறிக்கோள் வாழ்வினள்

(பூங்கொடி 10  – கவிஞர் முடியரசன்: ஊரார் பழிமொழி- தொடர்ச்சி) பூங்கொடி பழியுரை காதை வள்ளி குறிக்கோள் வாழ்வினள் அவர்முதன் மனையாள் அரும்பெறல் வள்ளி, எவர்துயர்ப் படினும் எழுந்துடன் சென்று 50 துன்பம் நீக்கலில் இன்பங் கொள்வாள்; என்பும் பிறர்க்கே எனுங்குறி வாழ்வினள்; பொதுநலத் தொண்டே புந்தியிற் பதிந்தவள்; எதுசரி என மனம் ஏற்குமோ அதனைத் துயர்பல நேரினும் துணிவுடன் ஆற்றும் 55 அயர்விலாக் கணவர் அரும்பணிக் கியைந்தவள்; அடிமை வாழ்வில் அருவருப் புற்று விடுதலை வேட்டு வீறுற் றெழுந்த நல்லவன் ஒருவனை நாய்மகன்…